யசுவந்த் பாலகிருட்டிண ஜோசி
பண்டிட் யசுவந்த் பாலகிருட்டிண ஜோசி (Yeshwant Balkrishna Joshi) (1928 - 5 அக்டோபர் 2012), மேலும் யசுவந்த்புவா ஜோசி என்றும் அறியப்படும் ஒரு இவர் ஓர் இந்துஸ்தானி இசையின் காயல் பாணியின் இந்தியப் பாடகராவார். [1]
யசுவந்த் பாலகிருட்டிண ஜோசி | |
---|---|
2004இல் யசுவந்த் பாலகிருட்டிண ஜோசி | |
பிறப்பு | 1928 புனே, மகாராட்டிரம் |
இறப்பு | 5 அக்டோபர் 2012 மும்பை, மகாராட்டிரம் | (அகவை 84)
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | பண்டிட் யசுவந்த்புவா ஜோசி |
இவர், இந்தியாவின் புனேவில் பிறந்தார். பண்டிட் மிராஷி புவா மற்றும் ஜெகநாத்புவா புரோகித் ஆகியோருடன் குவாலியர் கரானாவின் கீழ் படித்தார். இவரது சீடர்களில் இராம் தேஷ்பாண்டே மற்றும் ஆஷா கதில்கர் ஆகியோர் அடங்குவர்.
இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாதமியான சங்கீத நாடக அகாடமி 2003 ஆம் ஆண்டில் இவருக்கு தனது சங்கீத நாடக அகாடமி விருதினை வழங்கியது.
குறிப்புகள்
தொகு- ↑ "Renowned Hindustani vocalist passes away". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (Mumbai). 9 October 2012 இம் மூலத்தில் இருந்து 28 பிப்ரவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140228192537/http://www.hindustantimes.com/india-news/mumbai/renowned-hindustani-vocalist-passes-away/article1-941800.aspx. பார்த்த நாள்: 21 January 2014.