ஆஷா கதில்கர்
ஆஷா கதில்கர் (Asha Khadilkar) (பிறப்பு: 1955 சனவரி 11) இவர் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த மூத்த பாடகரான இவர், பாரம்பரிய இந்துஸ்தானி இசையையும், பக்தி இசையையும் சங்கீத நாடகம் உட்பட பல நிகழ்ச்சிகளாஇ நிகழ்த்துகிறார்.
ஆஷா கதில்கர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஆஷா படங்கர் |
பிறப்பு | 11 சனவரி 1955 சாங்லி |
பிறப்பிடம் | சாங்லி |
இசை வடிவங்கள் | காயல், பஜனைகள், தும்ரிகள், தாரணம், பந்திசு, பாவகீதம், சங்கீத நாடகம். |
தொழில்(கள்) | இந்தியாவின் இந்துஸ்தானி இசை குரல் பாடகர் |
இசைத்துறையில் | 1955– தற்போது வரை |
இணையதளம் | https://www.ashakhadilkar.com |
தொழில்
தொகுகதில்கர் அகில இந்திய வானொலியில் வழக்கமான பாடகராவார்.[1] இவர் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, கனடா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் பல சந்தர்ப்பங்களில் தனது தனிப்பட்ட நிகழ்ச்சிகளை செய்துள்ளார். 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையின் வொர்லி, நேரு மையம் தயாரித்த 4 புதிய மராத்தி இசைத் தொகுப்புகளுக்கு இவர் இசை இயக்கத்தையும் வழங்கியுள்ளார். இவர் இந்திய செம்மொழி இசையின் மேம்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுதலையும் வழங்குகிறார். இவர், தனது கணவர் மாதவ் கதில்கருடன் இணைந்து, பல்வேறு வகையான கலை, இலக்கியம், தேசியவாத நடவடிக்கைகள் மூலம் இந்திய கலாச்சாரத்தைப் பாதுகாக்கவும் பெருக்கவும் அர்ப்பணித்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான உத்தங் சான்ஸ்குதிக் பரிவார் என்றா அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
சா ரி கா மா பாவுடன்
தொகு2008 ஆம் ஆண்டில், ஐடியா சா ரி கா மா பா எனப்படும் மராத்தி குரல் பாடும் போட்டி நிகழ்ச்சிக்கு இசை இயக்குநர் சலீல் குல்கர்னியுடன் பிரபல நடுவர்களில் ஒருவராக இவர் இருந்தார். இந்த பருவத்தில் முப்பதுகளின் நடுப்பகுதியிலும் நாற்பதுகளிலும் இருக்கும் பெரியவர்கள் இசையை ஒரு பொழுதுபோக்காகப் பின்தொடர்ந்தனர்.[2] இந்த நிகழ்ச்சிக்கு சா ரி கா மா பா: ஸ்வப்னா ஸ்வரஞ்சே, நவதருண்யாச்சே (புதிய இளைஞர்களின் இசைக்கான கனவு ) என்று பெயரிடப்பட்டது.
மேலும் காண்க
தொகு- ஜிதேந்திர அபிசேகி
- வசந்த்ராவ் தேஷ்பாண்டே
- மாணிக் வர்மா
குறிப்புகள்
தொகு- ↑ Asha Khadilkar
- ↑ "Idea Sa Re Ga Ma Pa Season 4". myPopkorn. 15 May 2008. பார்க்கப்பட்ட நாள் 8 August 2010.