வசந்த்ராவ் தேசுபாண்டே

இந்தியப் பாடகர்

வசந்த்ராவ் தேசுபாண்டே (Vasantrao Deshpande ) (2 மே 1920 - 30 சூலை 1983) [1] இவர் இந்துஸ்தானி இசைப் பாடகராவார். மேலும், இவர் இசை நாடகத்திற்கு புகழ் பெற்றவர். [2]

வசந்த்ராவ் தேசுபாண்டே
பின்னணித் தகவல்கள்
பிறப்பு(1920-05-02)2 மே 1920
முர்த்திசாப்பூர், அகோலா, மகாராட்டிரம்
இறப்பு30 சூலை 1983(1983-07-30) (அகவை 63)
புனே, இந்தியா
இசை வடிவங்கள்இந்துஸ்தானி இசை, கயால், சங்கீத நாடகம், தும்ரி, கசல், தப்பா
தொழில்(கள்)பாடகர், நடிகர், இசைக்கலைஞர்
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்1928–1983
இணையதளம்vasantraodeshpande.com

பின்னணி

தொகு

இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் விதர்பா பகுதியில் அகோலா மாவட்டத்தில் உள்ள முர்டிசாபூரில் தேசஸ்த் பிராமணக் குடும்பத்தில் [3] இவர் பிறந்தார். தனது எட்டாவது வயதில், இவரது திறமையை பால்ஜி பெந்தர்கர் என்ற திரைப்படத் தயாரிப்பாளர் கவனித்து, கலியா மர்தான் (1935) என்ற இந்தித் திரைப்படத்தில் கிருஷ்ணா என்ற வேடத்தில் அறிமுகப்படுத்தினார். [4] இவர் இசையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

குருக்கள்

தொகு

இவர், பல குருக்களிடமிருந்து கற்றுக் கொண்டார். ஒரே பாடசாலையில் தன்னை இணைத்துக் கொள்ள மறுத்துவிட்டார். [5]

வி. டி. பலுசுகரின் [6] சீடரான குவாலியரைச் சேர்ந்த சங்கர்ராவ் சப்ரேவுடன் நாக்பூரில் தனது இசைப் பயிற்சியைத் தொடங்கினார். இதன் பின்னர், கிரானா கரனாவின் சுரேஷ்பாபு மானே, பாட்டியாலா கரானாவின் அசாத் அலி கான், அமான் அலி கான், பெண்டிபஜார் கரனாவின் அஞ்சனிபாய் மல்பேகர், குவாலியரின் இராமகிருட்டிண வழே போன்ற பல்வேறு இசைக்கலைஞர்களின் கீழ் பயின்றார். [7] வழேபுவாவின் நேரடி சீடரான தினநாத் மங்கேஷ்கர் என்பவர் இவர் மீது மிகப் பெரிய செல்வாக்கு செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர் மங்கேஷ்கரின் ஒரே இசை வாரிசாகக் கருதப்படுகிறார்.

தொழில்

தொகு

இவர், பாரம்பரியம், அரை பாரம்பரிய இசையை நிகழ்த்தினார். ‘காளியா மர்தான்’, “துத் பாத்”, “அஷ்டவினாயக்” போன்ற படங்களிலும் நடித்தார். இவர் பெயரில் பல வணிக வெளியீடுகள் இருந்தன. [8] சுரம் இல்லாமல் கல்யாணியின் மாறுபாடான இராஜ் கல்யாண் என்ற இராகத்தை உருவாக்கினார்.

இவரது மாணவர்களில் சந்திரகாந்த் லிமாயே [9], விஜய் கோபர்கர், பண்டிட் பத்மக்கர் குல்கர்னி ஆகியோர் அடங்குவர். [10]

மரபு

தொகு

இவரது பேரன் இராகுல் தேசுபாண்டேவும் ஒரு பாடகர் ஆவார். மேலும் மேடையிலும், திரையிலும் இவரது சில பாத்திரங்களை கட்யார் கல்ஜாத் குஸ்லி என்ற படத்திலும், கன்சாஹேப் போன்றவற்றிலும் மறுஆக்கம் செய்துள்ளார் . [11]

அங்கீகாரம்

தொகு

இவரது நினைவாகத் தொடங்கப்பட்ட 'முனைவர் வசந்த்ராவ் தேசுபாண்டே பிரதிஷ்டான்' என்ற அறக்கட்டளை, [12] இவரது நினைவாக புனேயில் வசந்தோத்சவ் என்ற வருடாந்திர இசை விழாவை ஏற்பாடு செய்கிறது. இதில் இசைக்கலைஞர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். [13] விழாவின் போது, இளம் கலைஞர்களுக்கான "வசந்தோத்சவ் இளைஞர் விருது" , மூத்த கலைஞர்களுக்கான "வசந்தோத்சவ் விருது" ஆகியவை வழங்கப்படுகின்றன. [14] [15]

2011 ஆம் ஆண்டில், இவரது நினைவாக மூன்று நாள் இசை மற்றும் நடன விழா, நாக்பூரில் இந்திய அரசின் தென் மத்திய மண்டல கலாச்சார மையம் ஏற்பாடு செய்தது. [16]

விருதுகள்

தொகு

நூலியல்

தொகு
  • "Vasantrao Deshpande: Marathi Stage Phenomenon". Bhavan's Journal. Bharatiya Vidya Bhavan. 1983. pp. 25–28.

மேற்கோள்கள்

தொகு
  1. Lokrajya.
  2. Sangeet Natak.
  3. The Illustrated Weekly of India, Volume 95. Bennett, Coleman & Company, Limited, at the Times of India Press. 1974. p. 31. ARATHI literature is strewn with the names of Deshastha writers.The popular classical and light musician, DrVasantrao Deshpande, also from this community. Other schools of music are well represented by such veterans as Pandit Narayanrao Vyas, Meera Khirwadkar, Gururao Deshpande and musicologist Vamanrao Deshpande G. V. Bhonde, popularly known as " Nakalakar", gave mimicry the status of an art in Maharashtra. Famous actor and director Gajanan Jagirdar, Prabhakar Panshikar, magician Raghuvir Bhople all belong to this community.
  4. http://www.vdeshpandehall.com/history.php
  5. "Vidarbha has rich tradition of Hindustani classical music". 
  6. Misra, Susheela (January 1990). Some immortals of Hindustani music. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185151144.
  7. Jeffrey Michael Grimes. The Geography of Hindustani Music: The Influence of Region and Regionalism on the North Indian Classical Tradition. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-109-00342-0.
  8. Michael S. Kinnear. A discography of Hindustani and Karnatic music. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-24479-7.
  9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.
  10. https://underscorerecords.com/artistes/detail/108/Pushkar-Lele
  11. "Grandson Rahul to carry Pt Vasantrao's legacy forward". The Times of India. 28 August 2009. Archived from the original on 4 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
  12. Pranav Kulkarni (23 December 2008). "Vasantotsav to kick off from January 9". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
  13. "Celebrating the five elements of nature". Pune Mirror. 23 December 2008. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. "Vasantotsav to start on Jan 18". The Times of India. 6 January 2013. Archived from the original on 11 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. "Season of Music". The Indian Express. 21 January 2012. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013.
  16. "Music festival in memory of Vasantrao Deshpande in Nagpur". IBN Live News. 28 July 2011. Archived from the original on 17 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 17 July 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. "SNA: List of Akademi Awardees". சங்கீத நாடக அகாதமி Official website. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த்ராவ்_தேசுபாண்டே&oldid=3570459" இலிருந்து மீள்விக்கப்பட்டது