அமான் அலி கான்

இசைக்கலைஞர்

உஸ்தாத் அமான் அலிகான் (Ustad Aman Ali Khan) (1888-1953) இவர் ஓர் இந்திய பாரம்பரிய இசைக் கலைஞரும், பெண்டிபஜார் கரானாவின் இசையமைப்பாளருமாவார. இவர் பல கர்நாடக இராகங்களை இந்துஸ்தானி இசையில் கொண்டு வந்தார்.

தொழில்தொகு

உத்தரபிரதேசத்திலிருந்து வந்து மும்பை பெண்டிபஜார் பகுதியில் குடியேறிய பெண்டிபஜார் கரானாவின் நிறுவனர்களில் ஒருவரான சஜ்ஜு கானின் மகனாவார். மைசூர் மாநிலத்தின் அரசவைக் கலைஞர் கலாநிதி பிடாரம் கிருட்டிணப்பாவின் வழிகாட்டுதலின் கீழ் கர்நாடக இசையை கற்றுக்கொண்டார். இவர் பெண்டிபஜார் கரானாவுக்கு தாளம் (லயகரி) நுட்பமாக பாடும் பாணி (சர்கம்) ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார். இவரது இசை குறிப்பாக அதன் தாள சர்கம் வடிவங்களுக்காக குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இதற்காக இவர் கர்நாடக இசையிலிருந்து உத்வேகம் பெற்றார். சிறந்த பாடகர் அமீர்கான் இவரை தனது வாழ்க்கையில் ஒரு பெரிய இசை செல்வாக்கு என்று கருதினார்.

சீடர்கள்தொகு

இவரது நடை பாடர்களான அமீர் கான், வசந்த்ராவ் தேசுபாண்டே ஆகியோரை ஈர்த்தது.. இவரது சீடர்களில் சிவகுமார் சுக்லா, டி.டி.ஜனோரிகர், முகமது உசேன் கான், பின்னணி பாடகர்கள் மன்னா தே, லதா மங்கேஷ்கர், இசை இயக்குனர் நிசார் பாசுமி, வாலி அகமது கான், பி. சைதன்யா தேவ் மற்றும் ஆர்மோனியக் கலைஞர் சாந்திலால் ஆகியோர் அடங்குவர்.

இறப்புதொகு

இவர், 1947 இல் மும்பையை விட்டு புனேவில் குடியேறினார். இசைக் கச்சேரிகளுக்காக தில்லிக்குச் சென்றபோது நுரையீரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1953 பிப்ரவரி 11 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்தொகு

  • "Profiles of the Maestros". swaramandakini.com.
  • "Profile of Aman Ali Khan" (PDF). parrikar.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமான்_அலி_கான்&oldid=3053115" இருந்து மீள்விக்கப்பட்டது