யசூசி அகாசி

யசூசி அகாசி (Yasushi Akashi, சப்பானியம்: 明石 康, பிறப்பு: சனவரி 19, 1931) என்பவர் சப்பானிய மூத்த தூதரும், ஐநா நிருவாகியும் ஆவார். இவர் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் படித்து 1954 ஆம் ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர், ஃபுல்பிறைட் புலமைப்பரிசில் பெற்று வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பையும், பாஸ்டனில் உள்ள டஃப்ட்சு பல்கலைக்கழகத்திலும் படித்தார்.[1] நியூயார்க்கில் உள்ள ஐநா செயலகத்தில் 1957 ஆம் ஆண்டில் இணைந்தார். ஐநா அவையில் பொதுத் தகவல், ஆயுதக்குறைப்பு அலுவல்கள், மனிதநேய அலுவல்கள் திணைக்களங்களில் செயலாளராகவும், அவசர நிவாரணக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார்.

யசூசி அகாசி
Yasushi Akashi cropped 2 Yasushi Akashi 20161219.jpg
பிறப்பு19 சனவரி 1931 (age 88)
ஆகிட்டா ப்ரீபெக்ட்டுறே
வேலை வழங்குபவர்

முன்னாள் யுகோசுலாவியாவின் போர் நடவடிக்கைகளின் போது ஐநா செயலரின் பிரதிநிதியாகப் பணியாற்றினார். கம்போடியாவில் அமைதிப் பேச்சுக்களிலும் இவர் கலந்து கொண்டார். பல அமைதி முயற்சிகளில் இவர் வெற்றி கண்டிருந்தாலும், பால்க்கனில் பிற்காலத்தின் இவரது பங்களிப்புகளாலும், சிரெபிரெனிக்காவில் இடம்பெற்ற இனப்படுகொலைகளைத் தடுக்க முடியாமையாலும் இவர் விமரிசிக்கப்படுகிறார்.[2]

இலங்கையில் ஈழப்போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே 2006 ஆம் ஆண்டு முதல் சமரச முயற்சிகளில் இவர் ஈடுபட்டார். பல முறை இவர் இலங்கை சென்று திரும்பியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தைகள் எவையும் வெற்றி பெறவில்லை.[3]

மேற்கோள்கள்தொகு

  1. Yasushi Akashi United Nations Office for the Coordination of Humanitarian Affairs Biography
  2. Bianca Jagger: The Betrayal of Srebrenica, தி யூரோப்பியன், 25 செப்.-1 அக். 1995
  3. Lanka warfront largely quiet as talks hopes rise Gulf Times
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசூசி_அகாசி&oldid=2734092" இருந்து மீள்விக்கப்பட்டது