யசோதரா தசப்பா

யசோதரா தசப்பா(Yashodhara Dasappa) ஒரு இந்திய சுதந்திர ஆர்வலர், காந்தியசிந்தனையாளர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் கர்நாடக மாநில அமைச்சராக இருந்தவர்[2].அவர் இந்திய தேசிய காங்கிரஸுடன் அரசியல் ரீதியாக இணைந்திருந்தார் மற்றும் எஸ். ஆர். காந்தி (1962)[3] மற்றும் எஸ். நிஜலிங்கப்பா (1969)[4] தலைமையிலான கர்நாடக மாநில அரசாங்கங்களில் அமைச்சராக பணியாற்றினார்.

யசோதரா தசப்பா
பிறப்பு(1905-05-28)28 மே 1905 [1]
பெங்களூர், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு1980
படித்த கல்வி நிறுவனங்கள்ராணி மேரி கல்லூரி
பணிசமூக சீர்திருத்தவாதி
அரசியல்வாதி
இந்திய சுதந்திர ஆர்வலர்
காந்தியன்
வாழ்க்கைத்
துணை
எச். சி. தசப்பா
பிள்ளைகள்துளசிதாஸ் தசப்பா
விருதுகள்பத்ம பூஷண்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

யசோதரா தசப்பா 1905 மே 28 அன்று பெங்களூரில் பிறந்தார். அவர் பிரபல சமூக சேவகர் கே.எச்.ராமையா அவர்களின் மகள்.ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவர் ஒரு சமூக ஆர்வலராக மாறி இந்திய சுதந்திர போராட்டத்தில் சேரத் தேர்ந்தெடுத்தார்.[5].அவர் லண்டன் மிஷன் பள்ளி மற்றும் மெட்ராஸில் உள்ள குயின் மேரி கல்லூரியில் பயின்றார்.யஷோதரா ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த எச். சி. தசப்பாவை மணந்தார்[6] இவர்களின் இளைய மகன் துளசிதாஸ் தசப்பா சரண் சிங் அமைச்சரவையில் மாநில அமைச்சராக இருந்தார்[2].

அவர் 1980 இல் இறந்தார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்திலும், 1930 களின் வனசத்தியாக்கிரக இயக்கம் போன்ற பல சமூக இயக்கங்களிலும் தீவிரமாக செயல்பட்டதாகக் கூறப்பட்டது, இதன் விளைவாக 1200 க்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டனர்[7],மற்றும் 35 பேர் பங்கெடுத்த 1938ம் ஆண்டின் விதுராஷ்வத அத்தியாயம் எனும் இயக்கத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்[8] இந்த இயக்கத்தில் பங்கேற்றதற்காக, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்[9]. அவரது வீடு நிலத்தடி சுதந்திர போராட்ட நடவடிக்கைக்கான சந்திப்பு இடமாக இருந்தது.சுதந்திர போராட்ட வீரர்ளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்ட ஹோமல்டனின் பெயரை ஒரு கட்டிடத்திற்குச் சூட்டுவதற்கு அரசு முடிவு செய்த போது அரசாங்கத்தை எதிர்த்து பல உரைகள் வழங்கினார்[5].நிஜலிங்கப்பா அமைச்சரவையில் மூத்த அமைச்சராக பணியாற்றியபோது, ​​கர்நாடக மாநிலத்தில் தடையை நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் பதவியை ராஜினாமா செய்தார்.[3] நாட்டின் உயர்ந்த மூன்றாவதான பத்மபூஷன் விருதை இந்திய அரசு 1972 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கி கௌரவித்தது[10][11]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Role of Women ,in the Freedom Movement of Princely Mysore" (PDF). shodhganga.inflibnet.ac.in. பார்க்கப்பட்ட நாள் 11 April 2016.
  2. 2.0 2.1 "Tulasidas Dasappa, former MP, passes away". The Hindu. 20 April 2005. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
  3. 3.0 3.1 "Position of women in governance still weak". The Hindu. 12 November 2009. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
  4. "Tulasidas Dasappa is no more". Deccan Herald. 20 April 2005. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
  5. 5.0 5.1 "Yashodhara Dasappa: The firebrand Gandhian from Bengaluru who brought in women into the Satyagraha movement" (in en-US). InUth. 2017-08-12. http://www.inuth.com/india/women-freedom-fighters-of-india/yashodhara-dasappa-the-firebrand-gandhian-from-bengaluru-who-brought-in-women-into-the-satyagraha-movement/. 
  6. "Union cabinet reshuffle: Karnataka gets lion's share in Singh's ministry". Anil Kumar M. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 June 2013. பார்க்கப்பட்ட நாள் 25 October 2015.
  7. Dr. Melkunde Shashidhar. A HISTORY OF FREEDOM AND UNIFICATION MOVEMENT IN KARNATAKA. Lulu.com. pp. 157–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-329-82501-7.
  8. "FREEDOM FIGHTER AND SOCIAL REFORMER SMT. YASHODHARAMMA DASAPPA". Karnataka Ithihasa Academy. 2014. Archived from the original on 25 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016.
  9. itihasaacademy (2014-08-21). "Freedom fighter and social reformer Smt. Yashodharamma Dasappa". Karnataka Itihasa Academy. Archived from the original on 2017-08-19. பார்க்கப்பட்ட நாள் 2017-08-19.
  10. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  11. "Padma Bhushan Awardees". Ministry of Home Affairs, Government of India. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 4 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யசோதரா_தசப்பா&oldid=3845046" இலிருந்து மீள்விக்கப்பட்டது