யவனதேசம் மகாராட்டிரதேசத்திற்கு தென்கிழக்கிலும், குளிந்த்தேசத்திற்கு வடக்கிலும், ஆந்திரதேசத்திற்கு மேற்கிலும் கோதாவரிநதியின் தெற்குபாக பூமியில் கிழக்கு மேற்காக நீண்டு, அகன்று பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்

தொகு

ஆந்திரதேசம் போலவே இத்தேசத்தின் பூமி பாதி நல்ல பூமியாகவும், பாதி பூமி காடுகளும், மேடு, பள்ளங்கள் இல்லாமல் சம்மாகவே இருக்கும். இந்த தேசத்தில் பருவ மழை பெய்து கொண்டே இருக்கும்.[2]

மலை, காடு, விலங்குகள்

தொகு

இந்த தேசத்தின் மேற்கில் சூர்யமுகமலையும், அதன் மலைத் தொடர்களும், சிறு, சிறு குன்றுகளும், சிறு, சிறு காடுகளும் செழிப்பான நல்ல பூமியும் இருக்கும். இத்தேசத்தில் புன்செய் பயிர்களே அதிகமிருக்கும்.

நதிகள்

தொகு

யவனதேசத்தின்வடபாகம் முழுவதும் கோதாவரிநதியும்யவனதேசத்தின் தெற்குபாகத்தில் மால்யவான் மலையிலிருந்து கிழக்கு நோக்கி ஓடிவரும் பம்பா நதி,பீமநதி, கிருட்டிணாநதி,துங்கபத்ராநதி ஆகியன யவனதேசத்தை செழிக்க வைக்கின்றது.[3]

சிறப்பு

தொகு

இந்த யவனதேசத்தைப் போன்றே, கோசலம், சூரசேநம், வங்கம், சோழம் ஆகிய தேசங்களும் புராதன இந்தியாவில் நீர்வளம், நிலவளம் பொருந்தியது.

கருவி நூல்

தொகு

சான்றடைவு

தொகு
  1. "புராதன இந்தியா"-பி. வி. ஜகதீச அய்யர்-1918 - Published by- P. R. Rama Iyer & co-madaras
  2. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 257 -
  3. புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009- பக்கம் - 258 -
"https://ta.wikipedia.org/w/index.php?title=யவனதேசம்&oldid=2565068" இலிருந்து மீள்விக்கப்பட்டது