யஷ்பால் சிங் கல்சி

யஷ்பால் சிங் கல்சி (பிறப்பு 23 செப்டம்பர் 1978) தில்லியைச் சேர்ந்த தற்காப்புக் கலைஞராவார். இவர் 'இந்தியாவில் தற்காப்புத் துறையின் முன்னோடி' என்று வகைப்படுத்தப்படுகிறார். [1]

யஷ்பால் சிங் கல்சி
பிறப்பு23 செப்டம்பர் 1978
விருதுகள்அமெரிக்க கராத்தேப் போட்டி

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

கல்சி, 23 செப்டம்பர் 1978 [2] தில்லியில் சீக்கிய பெற்றோர்களான இராம் சிங் கல்சி மற்றும் அவரது மனைவி மஞ்சித் கவுர் ஆகியோருக்கு பிறந்தார். இவர் தனது 8 வயதில் கராத்தேவைப் பயின்றார். விரைவில் தனது பள்ளியில் கராத்தே அணியின் தலைவரானார். இவர் கராத்தேவில் கருப்புப் பட்டை பெற்றுள்ளார். [3] இவர் தனது முதல் கருப்புப் பட்டையை 1996இல் பெற்றார் அதன் பின்னர் இவர் மாநில, தேசிய மற்றும் சர்வதேச கராத்தேப் போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். [4]

பயிற்சி வாழ்க்கை

தொகு

கல்சி, அகில இந்திய கலப்பு தற்காப்பு கலை கூட்டமைப்பின் நிறுவன உறுப்பினராக உள்ளார். [5] மேலும், 2015 ஆம் ஆண்டு நிலவரப்படி தில்லி கிளையின் இந்தியா கலப்பு தற்காப்பு கலைக் கழகத்தின் தலைவராக இருந்தார். [3]

கல்சி, ஒரு உலக கராத்தே அமைப்பின் சான்றளிக்கப்பட்ட கராத்தே மற்றும் கலப்பு தற்காப்பு கலை பயிற்சியாளர் ஆவார். இந்த அமைப்பு இந்தியா, கிரேக்கம், அமெரிக்கா, சிலி, மலேசியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானித்தான், பாக்கித்தான், நேபாளம், இங்கிலாந்து மற்றும் பல இடங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டுள்ளது. இவர் பிரேசிலிய யியு-யிட்சுவிலும் தகுதி பெற்றவர். [3] இவரது மாணவர்கள் சர்வதேச போட்டிகளிலும்,[6] உலக போட்டிகளிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். [7] 2007 ஆம் ஆண்டு முதல், குர்கானை தளமாகக் கொண்ட சுவீடன் தற்காப்புக் கலைப் பள்ளியான சான்சிங்கன் சர்வதேச கராத்தேப் பள்ளியில் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். மேலும் இந்தியா முழுவதும் அதன் மையங்களுக்கு தலைமை தாங்குகிறார். [8] இங்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் பயிற்சி அளிக்கிறது; [1] கல்சி தனது மனைவி அனாமிகா சிங் கல்சியுடன் இணைந்து பணியாற்றுகிறார்.

விருதுகளும், அங்கீகாரமும்

தொகு

2013 ல் நடந்த சுவீடன் கராத்தேப் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்றார். [9] 2016ஆம் ஆண்டு அமெரிக்க கராத்தேப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். [10] 2017ஆம் ஆண்டு அமெரிக்க கராத்தேப் போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார். [4] [11]

2018ஆம் ஆண்டு இவர், தனது மனைவியுடன் சேர்ந்து அமெரிக்க கராத்தேப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றார்.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 'Roposo to celebrate March as "Women's Month"', Asian News International (8 March 2016).
  2. "Interview with Mr. Yashpal Singh Kalsi". fairgaze.com.
  3. 3.0 3.1 3.2 Ashwin Ahmad, 'Capital's fight club', Mail Today (9 August 2015).
  4. 4.0 4.1 "India wins 16 medals at US Open karate Championship - Times of India". The Times of India.
  5. "AIMMAA Official press announcement". www.sportskeeda.com. 15 August 2015.
  6. 'Gurgaon Teen for World Youth Cup', The Asian Age (29 June 2014), 31.
  7. April 25, Press Trust of India; April 25, 2017UPDATED; Ist, 2017 18:05. "India wins 16 medals at US Open karate Championship". India Today. {{cite web}}: |first3= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  8. 'Mixed martial art in a league of its own', The Times of India (24 January 2017).
  9. "Swedish International Karate Open (May 2013) – NERDOX".
  10. "7 Indian karate players to compete at US Open". 28 March 2018 – via Business Standard.
  11. 'India win 3 Gold, 2 Silver,6 Bronze at US Open Karate C'ship', Asian News International (18 April 2017).
"https://ta.wikipedia.org/w/index.php?title=யஷ்பால்_சிங்_கல்சி&oldid=3100377" இலிருந்து மீள்விக்கப்பட்டது