யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம்

யாதகள்ளி இந்திய சிறுமான் வனவிலங்கு காப்பகம் (Yadahalli Chinkara Wildlife Sanctuary) என்பது இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயமாகும். இது இந்தியச் சிறுமான்களின் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டது.

யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம்
A chinkara
இந்தியச் சிறுமான்
Map showing the location of யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம்
Map showing the location of யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம்
Map showing the location of யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம்
Map showing the location of யாதகள்ளி இந்தியச் சிறுமான் வனவிலங்கு காப்பகம்
அமைவிடம்கருநாடகம், இந்தியா
பரப்பளவு96.3691 km2 (37.2 sq mi)
நிறுவப்பட்டது2016
நிருவாக அமைப்புவனத்துறை, கருநாடக அரசு

வரலாறு

தொகு

2016-ல் நிறுவப்பட்டது, இந்த காப்பகம் கர்நாடகாவின் முதல் இந்தியச் சிறுமான் சரணாலயம் ஆகும்.[1]

அமைவிடம்

தொகு

இந்த சரணாலயம் இந்தியாவின் கர்நாடகாவில் பாகல்கோட் மாவட்டத்தில் பிலாகி மற்றும் முதோல் வட்டத்தில் அமைந்துள்ளது. இது 96.3691 km2 (37.2083 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது.[2] பிலாகியில் உள்ள யாதகள்ளி கிராமத்தின் காரணமாக இச்சரணாலயம் இதன் பெயர் பெற்றது.

சரணாலயத்தின் தெற்குப் பகுதியில் காட்டபிரபா நதியும், வடக்குப் பகுதியில் கிருஷ்ணா ஆறும் பாய்கின்றன.[2]

தாவரங்களும் விலங்குகளும்

தொகு

இச்சரணாலயத்தில் உள்ள காடுகளில் 34 குடும்பங்களில் 67 பேரினங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மர வகைகள் உள்ளன. இவற்றில் மூன்று சிற்றினங்கள் தீபகற்ப இந்தியாவில் மட்டுமே காணப்படக்கூடிய அகணிய உயிர்களாகும்.[3] இங்குக் காணப்படும் மரங்களில் நான்கு சிற்றினங்கள் அழிவுக்கு இலக்காகியும், மற்றும் ஒன்று உலக அளவில் அச்சுறுத்தலுக்கு அண்மித்த இனமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளன.[3]

கர்நாடக மாநிலத்தில், யாதகள்ளி வனவிலங்கு சரணாலயத்தைத் தவிர, புக்கபட்னா இந்தியச் சிறுமான் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே சிறுமான்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1] சிறுமான்கள் தவிர, இங்குக் காணப்படும் பாலூட்டிகளில் ஓநாய்கள், குள்ளநரிகள், காட்டுப்பூனைகள் மற்றும் வரிக் கழுதைப்புலி ஆகியவை அடங்கும்.[2] இது பல வண்ணத்துப்பூச்சி இனங்கள், தேனீக்கள், பறவைகள், ஊர்வன மற்றும் சிலந்திகளின் தாயகமாகவும் உள்ளது.

அச்சுறுத்தல்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தொகு

புதர் காடாக இருந்த இச்சரணாலயம் தோட்டங்களால் சேதங்களைக் கண்டது. காடுகளுக்கு வழங்கப்பட்ட வனவிலங்கு சரணாலயத்தின் தகுதி அப்பகுதியின் வணிகச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.[2] வேட்டையாடுபவர்களின் அச்சுறுத்தல் சரணாலயத்திற்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. பல்வேறு நடவடிக்கைகளால் வேட்டையாடுதல் கட்டுப்படுத்தப்பட்டதால், இந்த வரம்பிற்குள் இந்தியச் சிறுமான் மற்றும் பிற பாலூட்டிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.[4] 2016-ல் 85ஆக இருந்த இந்தியச் சிறுமான்களின் எண்ணிக்கை 2022-ல் 92ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

தொகு