யாத்கிர் மாவட்டம்

யாத்கிர் மாவட்டம் என்பது கர்நாடகத்தில் அமைந்துள்ள மாவட்டம். இது குல்பர்கா மாவட்டத்தில் இருந்து 2010, ஏப்பிரல் 10 ஆம் நாள் அன்று பிரிக்கப்பட்டு கர்நாடகத்தின் முப்பதாவது மாவட்டமாகியது.[1] யாதகிரி நகரம் இதன் தலைமையகம் ஆகும்.[2] இந்த மாவட்டம் 5,160.88 கிமீ² பரப்பளவில் அமைந்துள்ளது. இதை உள்ளூர் மக்கள் யாதவகிரி என அழைக்கின்றனர். இது முற்காலத்தில் யாதவர் ஆட்சியில் தலைநகராக விளங்கியது.

யாத்கிர் மாவட்டம்
மாவட்டம்
சன்னதியில் பாயும் பீமா ஆறு
சன்னதியில் பாயும் பீமா ஆறு
இந்தியாவின் கர்நாடகத்தில் யாத்கிர் மாவட்டத்தின் அமைவிடம்
இந்தியாவின் கர்நாடகத்தில் யாத்கிர் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°45′N 77°08′E / 16.75°N 77.13°E / 16.75; 77.13
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகா
நிறுவிய நாள்10 ஏப்ரல் 2010
தோற்றுவித்தவர்கர்நாடகா அரசு
தலைமையிடம்யாத்கிர்
வருவாய் வட்டங்கள்சாப்பூர், சூர்பூர், யாத்கிர், குர்மித்கல், ஹுயுன்ஸ்கி, வாட்கேரா
பரப்பளவு
 • மொத்தம்5,234 km2 (2,021 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்11,74,271
 • அடர்த்தி220/km2 (580/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகன்னட மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKA 33
இணையதளம்https://yadgir.nic.in/

பிரிவுகள் தொகு

இந்த மாவட்டத்தில் ஷாஹாபூர், வட்கேரா, ஹுனசாகி, சூரபுரா, யாத்கீர், குர்மத்கல் ஆகிய ஆறு தாலுகாக்கள் உள்ளன. மேலும் இம்மாவட்டத்தில் 117 கிராம பஞ்சாயத்துகள், 519 கிராமங்கள் (மக்கள் வசிக்காதவை மற்றும் மக்கள் வசிக்காதவை) மற்றும் நான்கு நகராட்சிகள் உள்ளன.[2]

வரலாறு தொகு

உள்ளூர் மக்களால் "யாதவகிரி" என்று பிரபலமாக அழைக்கப்படும் யாத்கீர் ஒரு காலத்தில் தேவகிரி யாதவ இராச்சியத்தின் கீழ் இருந்தது. இந்த பகுதி ஒரு சிறந்த வரலாற்று மற்றும் கலாச்சார மரபுகளைக் கொண்டுள்ளது. தெற்கின் புகழ்பெற்ற வம்சங்கள், சாதவாகனர், பாதாமியின் சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள், விஜயநகரப் பேரரசு, மராத்தியப் பேரரசு மற்றும் தக்காண சுல்தான்கள் இம்மாவட்டத்தை ஆட்சி செய்திருக்கிறார்கள்.

1504 ஆம் ஆண்டில் யாத்கீர் (குல்பர்கா) பிஜாப்பூரின் ஆதில் ஷாஹி இராச்சியத்துடன் நிரந்தரமாக இணைக்கப்பட்டது. 1657 இல் மிர் ஜும்லாவின் படையெடுப்புடன் அது முகலாயர்களின் வசம் சென்றது. பின்னர் ஐதராபாத்தில் ஆசாஃப் ஜாஹி (நிஜாம்) வம்சம் (1724-1948) நிறுவப்பட்டவுடன் யத்கீர் மற்றும் குல்பர்கா என்பன அதன் கீழ் வந்தது. 1863 ஆம் ஆண்டில் நிஜாம் அரசு ஜில்லபாண்டியை உருவாக்கியபோது சுர்பூர் (ஷோராபூர்) மாவட்ட தலைமையகமாக மாறியது. சுர்பூரில் குல்பர்கா உட்பட ஒன்பது தாலுகாக்கள் இருந்தன. 1873 ஆம் ஆண்டில் குல்பர்கா ஏழு தாலுகாக்களுடன் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 1956 இல் மாநிலங்களை மறுசீரமைப்பதன் மூலம் குல்பர்கா கர்நாடக மாநில மற்றும் பிரதேச தலைமையகத்தின் ஒரு பகுதியாக மாறியது. (குல்பர்கா மாவட்டத்தின் கீழ் வரும் தாலுகாக்களில் யாத்கிரி ஒன்றாகும்).

பஹாமனி ஆட்சியாளர்கள் அரண்மனைகள், மசூதிகள், கும்பாஸ், அங்காடிகள் மற்றும் பிற பொது கட்டிடங்களுடன் குல்பர்கா நகரத்தை கட்டினர். எனவே கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் பிற மத மையங்களின் எண்ணிக்கையும் நகரம் முழுவதும் பரவியுள்ளது. (யாத்கீர் யாதவ வம்ச கோட்டையில் மலையின் நடுவில் அமைந்துள்ளது.)

ஜும்மா மஸ்ஜித் கோட்டையின் உள்ளே, குல்பர்காவின் குறிப்பிடத்தக்க நினைவுச்சின்னம் நன்கு பாதுகாக்கப்பட்ட நிலையில் உள்ளது. இந்த மசூதி ஸ்பெயினில் உள்ள 'கோர்டோவா' நகரத்தின் புகழ்பெற்ற மசூதியை ஒத்ததாகக் கூறப்படுகிறது. 216 அடி கிழக்கு-மேற்காகவும், 176 அடி வடக்கு தெற்காகவும் 38016 சதுர அடி பரப்பளவைக் கொண்ட இந்த மசூதி இந்தியாவின் குறிப்பிடத்தக்க மசூதி ஆகும்.

யாத்கீர் மாவட்டம் மாநிலத்தின் இரண்டாவது மிகச்சிறிய மாவட்டமாகும். பகுதி வாரியாக கலாச்சார மரபுகளில் வளமானது.  சீமேந்து தொழிலுக்காகவும் "மலகேடா கல்" என்று பிரபலமாக அறியப்படும் ஒரு தனித்துவமான கல் குறித்தும் இந்த மாவட்டம் அறியப்படுகிறது.

இரண்டு முக்கிய நதிகளான கிருஷ்ணா மற்றும் பீமா, மற்றும் ஒரு சில துணை நதிகள் இந்த பிராந்தியத்தில் பாய்கின்றன. தொழிற்துறைகளில் சிமேந்து, ஜவுளி, தோல் மற்றும் இரசாயன உற்பத்திகளினால் அறியப்படுகிறது.  

2008 செப்டம்பர் 26,  அன்று குல்பர்காவில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் யாத்கீர் புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தீர்மானிக்கப்படது. அதன்படி முதலமைச்சர் யாத்கீரை புதிய மாவட்டமாக அறிவித்தார். கர்நாடக அரசிதழில் மாவட்டத்தின் இறுதி அறிவிப்பு வெளியிடப்படும் வரை யாத்கீர் மாவட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக ஐ.ஏ.எஸ் அதிகாரியை அரசு நியமித்தது.[3]

புள்ளிவிபரங்கள் தொகு

2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின்படி யாத்கீர் மாவட்டத்தில் 1,174,271 மக்கள் வசிக்கின்றனர்.[4] இந்தியாவின் 640 மாவட்டங்களில் இது 404 ஆவது இடத்தைப் பெறுகின்றது. இம்மாவட்டத்தில் ஒரு சதுர கிலோமீட்டருக்கு (580 / சதுர மைல்) 224 மக்கள் அடர்த்தி உள்ளது. 2001-2011 ஆண்டுகளுக்கிடையே மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 22.67% ஆகும். மேலும் இம்மாவட்டத்தின் கல்வியறிவு விகிதம் 52.36% வீதம் ஆகும்.[4]

கல்வி தொகு

இந்த மாவட்டத்தில் 1,024 ஆரம்பப் பள்ளிகள், 149 உயர்நிலைப் பள்ளிகள், 40 முன் பல்கலைக்கழக கல்லூரிகள், ஆறு பட்டப்படிப்பு கல்லூரிகள் மற்றும் 1 தொழினுட்ப கல்லூரி என்பன காணப்படுகின்றன.

கலாச்சார இடங்கள் தொகு

தப் டாபி நீர்வீழ்ச்சி குர்மித்கலில் இருந்து 5 கி.மீ தொலைவிலும், யத்கிரிலிருந்து 30 கி.மீ தொலைவிலும்  அமைந்துள்ளது. சிந்தனள்ளி கோவிலுக்கு நுழைபவர்கள் இந்த நீர்வீழ்ச்சி வழியாக நடக்க வேண்டும். பீமா ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஷாஹாபூர் தாலுகாவில் சயன நிலை புத்தர் சிலை காணப்படுகிறது.

சான்றுகள் தொகு

  1. "Yadgir becomes State's 30th district". த இந்து. 11 ஏப்ரல் 2010 இம் மூலத்தில் இருந்து 2012-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121107114917/http://www.hindu.com/thehindu/2010/04/11/stories/2010041163610500.htm. பார்த்த நாள்: 25 ஏப்ரல் 2010. 
  2. 2.0 2.1 Sivanandan, T. V. (30 திசம்பர் 2009). "Yadgir district to become reality today". த இந்து இம் மூலத்தில் இருந்து 2011-08-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110823053218/http://www.hindu.com/2009/12/30/stories/2009123051050300.htm. பார்த்த நாள்: 22 ஏப்பிரல் 2010. 
  3. "Yadgir History". Archived from the original on 2014-07-16.
  4. 4.0 4.1 "Indian Districts by Population, Sex Ratio, Literacy 2011 Census". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2019-11-03.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாத்கிர்_மாவட்டம்&oldid=3890783" இலிருந்து மீள்விக்கப்பட்டது