யானை வண்டு
யானை வண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Scarabaeidae
|
துணைக்குடும்பம்: | Dynastinae
|
பேரினம்: | Megasoma
|
இனம்: | M. elephas
|
இருசொற் பெயரீடு | |
Megasoma elephas பப்ரிசியஸ், 1775 | |
துணை இணங்கள் | |
M. e. elephas |
யானை வண்டு (Elephant Beetle, Megasoma elephas) என்பது காண்டாமிருக வண்டு குடும்பத்தைச் சேர்ந்ததும் டைனாஸ்டினே துணைக்கும்பத்தைச் சேர்ந்ததுமான வண்டாகும்.
தோற்றம்
தொகுயானை வண்டுகள் கருமை நிறத்திலும் நுண்ணிய மயிர்களாலான போர்வையினால் மூடப்பட்டிருக்கும். வண்டின் இறக்கை மூடிகள் அடர்த்தியாகக் காணப்படும். மயிர்கள் இவற்றின் உடலுக்கு மஞ்சள் நிறத்தைக் கொடுக்கின்றது. ஆண் வண்டுகளின் இரு கொம்புகள் ஒன்று தலையிலிருந்து நீட்டிக் கொண்டிருக்க மற்றது நெஞ்சறை முன்பாகத்திலிருந்து நீட்டிக் கொண்டிருக்கும். உணவுக்கும் இனப்பொருக்க வேளையிலும் ஏனைய ஆண்களுடன் போட்டிபோட இது பயன்படுகின்றது. பெண்கள் கொம்புகளைக் கொண்டிருப்பதில்லை.
அளவு
தொகுயானை வண்டுகள் 7–12 செ.மீ (2.75-4.75 அங்) அளவை உடையன. சிலவேளை ஆண்கள் பெரிதாகக் காணப்படும். ஆண்கள் கிட்டத்தட்ட பெண்களைவிட 2 - 3 மடங்கு பெரியதாக இருக்கும்.
குறிப்பிடத்தக்க இராணுவப் பாவனை
தொகுபென்டகனின் நிதியுதவித் திட்டத்தில், கலிபோர்னியாப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மின் முனைகளை யானை வண்டு கூட்டுப்புழுனுள் உட்செலுத்தினார்கள். இதன் மூலம் வளர்ந்த வண்டுகளின் பறத்தல் பழக்கவழக்கத்தை தொலைக்கட்டுப்படுத்த அனுமதித்தது.[1]
உசாத்துணை
தொகு- ↑ "Remote controlled bugs buzz off". BBC News. 2009-10-13. http://news.bbc.co.uk/1/hi/technology/8302903.stm. பார்த்த நாள்: 2009-10-14.
வெளி இணைப்புக்கள்
தொகு- Video article on the BBC News Website
- Photos and size of Megasoma elephas elephas
- Megasoma elephas elephas pics
- Megasoma elephas occidentalis pics
- Elephants at the Insectarium?
- Family Scarabaeidae - Megasoma elephas
- God of Insects பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- History of Insects
- Viva Natura TV பரணிடப்பட்டது 2007-02-08 at the வந்தவழி இயந்திரம்