யாழ்ப்பாணச் சமர் (2006)

ஈழப்போரின் ஒரு பகுதி

யாழ்ப்பாணச் சமர் (Battle of Jaffna (2006)) என்பது 2006 ஆம் ஆண்டு ஆகத்து மற்றும் அக்டோபர் மாதங்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டடுக்காக இரண்டு கட்டங்களாக நடந்த சண்டையாகும். ஈழப் போர் தொடங்கியதில் இருந்து இது குடாநாட்டுக்கான நான்காவது போராகும்.

யாழ்ப்பாணச் சமர் (2006)
ஈழப் போர் பகுதி
நாள் 11, ஆகத்து – 29, ஓக்டோபர் 2006
இடம் யாழ்ப்பாணம், இலங்கை
முட்டுக்கட்டை
பிரிவினர்
இலங்கைப் படைத்துறை தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
Maj. Gen Kamal Gunaratne பிரிகேடியர் தீபன்
பலம்
டிவிசன் 53
  • ஏர் மொபைல் பிரிகேட்

டிவிசன் 55 40,000 வீரர்கள் [1]

சாள்சு அன்ரனி சிறப்புப் படையணி ஜெயந்தன் படையணி

3000 போராளிகள்[2]

இழப்புகள்
300 + பேர் கொல்லப்பட்டனர்
800+ பேர் காயமுற்றனர்
(இலங்கை இராணுவத்தின் கூற்று)
1000+ பேர் கொல்லப்பட்டனர் (புலிகள் கூற்று)
900 பேர் கொல்லப்பட்டனர்
(இலங்கை இராணுவத்தின் கூற்று)
372 பேர் கொல்லபட்டனர் (புலிகள் கூற்று)

முன்நிகழ்வு

தொகு

2006 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுக்கள் முறிவடைந்த நிலையில், இரு தரப்பினரும் இடையில் அப்போது மீண்டும் பகைமை உருவாகிவர்ந்தது. மே 25 அன்று சார்லஸ் அந்தோனி படையணியின் முன்னாள் தளபதி லெப்டினன்ட் கோணல் வீரமணி தற்செயலாக ஏற்பட்ட ஒரு வெடிப்பில் இறந்ததினால் விடுதலைப் புலிகள் சற்று பின்னடைவை சந்தித்தனர். வீரமணி இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர், இலங்கை படையினர் புலிகளின் நிலைகளை நோக்கி கற்களை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் புலிகளை சண்டைக்குத் தூண்டிவிடுவதாக முறையிட்டார்.[3]

சமர்

தொகு

விடுதலைப் புலிகளின் தாக்குதல்

தொகு

முதல் உலகப் போரைப் போன்ற முட்டுக்கட்டை நிலையிலிருந்த ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2006, ஆகத்து, 11 அன்று, யாழ்ப்பாணக் குடாநாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர சண்டை புதுப்பிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டின் முற்பகுதியில் புலிகள் ஆனையிறவுத் தளத்தை கைப்பற்றிய பின்னர், யாழ்ப்பாணக் குடாநாட்டின் பிரதான நிலப்பரப்பு இலங்கையின் மற்ற பகுதிகளிலிருந்து தரைவழியாக துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் யாழ் தீபகற்பத்துக்கு தேவைப்பட்ட பொருட்களையும், புதிய துருப்புக்களையும் கடல் அல்லது வான் வழியாகவே கொண்டு செல்லவேண்டிய நிலை இருந்தது.

திருகோணமலையில் உள்ள பிரதான இலங்கை கடற்படைத் தளத்தின் (சீன விரிகுடா) மீது விடுதலைப் புலிகள் முன்னெச்சரிக்கை தாக்குதலை நடத்தினர். குறைந்தது ஓரிரு வாரங்களாவது கடற்படைத் தளத்தைக் கைப்பற்றி அதன் மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள 40000 துருப்புக்களுக்கான அத்தியாவசியப் பொருள் போக்குவரத்தைத் துண்டிப்பதே இந்தத் தாக்குதலின் நோக்கமாக இருந்தது. திருகோணமலை துறைமுகத்திற்கு எதிரான பெரும் தாக்குதலுக்கு உடனடி எதிர்த் தாக்குதலைச் சந்தித்த புலிகள் பல நாட்கள் சண்டைக்குப் பின்னர் பெரும் உயிரிழப்புகளுடன் பின்வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாயினர். அந்தத் தாக்குதல் தோல்வியடைந்தாலும், முகமாலை மற்றும் நாகற்கோவிலில் உள்ள பாதுகாப்பு எல்லைக் கோடுகளின் மீது புலிகள் முன்னோக்கி பாரிய தரைப்படைத் தாக்குதலை நடத்தினர்.

துவக்கத்தில் புலிகள் இலங்கை இராணுவ நிலைகளை உடைத்து வடக்கே யாழ்ப்பாணத்தை நோக்கி முன்னேறினர், ஆனால் 10 மணிநேர கடுமையான சண்டைக்குப் பிறகு அவர்கள் எதிர்த்தாக்குதலை எதிர்கொண்டு பழைய நிலைக்குத் திரும்பினர். ஆகத்து 16-ம் தேதிக்குள் 5 நாட்கள் மட்டுமே நடந்த சண்டையில் 700 போராளிகளும் 150 வீரர்களும் கொல்லப்பட்டதாகவும், 300 வீரர்கள் காயமடைந்ததாகவும் இலங்கை அரசு கூறியது.[4][5]

விடுதலைப் புலிகள் சார்ள்ஸ் ஆண்டனி படையணி மற்றும் ஜெயந்தன் படையணி ஆகிய துருப்புக்களுடன் எல்லைக் கோட்டுப் பகுதியில் பல சிறிய அளவிலான தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆனால் பலத்த எதிர்த்தாக்குதலை சந்தித்தனர். வார இறுதியில் புலிகள் தங்களின் முந்தைய பாதுகாப்பு எல்லைக் கோடுகளில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். அடுத்த இரு மாதங்களில் இரு தரப்பினருக்கும் இடையே சிறிய மோதல்கள் தொடர்ந்து நடந்தன. அந்த நேரத்தில், விக்டர் கவசவாகன எதிர்ப்புப் பிரிவின் தளபதி லெப்டினன்ட் கேணல் அக்பர், ஒக்டோபர் 7 ஆம் நாள் முகமாலையில் பாதுகாப்பு எல்லையை ஆய்வு செய்த போது, ​​தற்செயலாக இலங்கை இராணுவம் வீசிய ஷெல் தாக்குதலால் கொல்லப்பட்டதால், ​​புலிகள் மற்றொரு பின்னடைவைச் சந்தித்தனர்.[6]

இலங்கை இராணுவத் தாக்குதல்

தொகு

அக்டோபர் 11 அன்று, இலங்கை இராணுவத்தின் 53 வது மற்றும் 55 வது பிரிவுகள் புலிகளின் முதல் தற்காப்புப் படையை நோக்கி கூட்டாக முன்னணித் தாக்குதலை நடத்தின. இலங்கை அரசபடைத் துருப்புக்கள் கனரக இயந்திர துப்பாக்கி மற்றும் ஆர்பிஜி துப்பாக்கியால் தாக்கி "ஆள் இல்லா நிலத்துக்குள்" சில நூறு மீட்டர் மட்டுமே முன்னேறினர். அடுத்த நாள் இலங்கை இராணுவத்தின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதன் விளைவாக நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவில் இராணுவம் மிகப்பெரிய உயிர் மற்றும் உபகரணங்கள் இழந்தது. இதில் 129 வீரர்கள் கொல்லப்பட்டு, 519 பேர் காயமடைந்தனர், ஆறு கவச வாகனங்கள், நான்கு டி -55 கவசவாகனங்கள், இரண்டு பி. எம். பி. எஸ். எனப்படும் போர் வாகனங்கள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன. கெமுனு கண்காணிப்பு படையினரிடமிருந்து 16 பல்நோக்கு இயந்திர துப்பாக்கிகள் (எம்பிஎம்கள்), 4 ரொக்கட் உந்து குண்டுகள் (ஆர்பிஜிகள்), ஒரு கிரனேட் லாஞ்சர், ஒரு இலகு கவசவாகன எதிர்ப்பு ஆயுதம், 98 துப்பாக்கிகள் மற்றும் பெருமளவிலான வெடிமருந்துகளையும் புலிகள் கைப்பற்றினர். இரண்டு பிரிவுகளிலிருந்தும் இறந்த துருப்புக்களில் பெரும்பாலானவர்கள் ஜெமுனு கண்காணிப்பு படையணியைச் சேர்ந்தவர்களாவர்.[7] போராளிகள் தாங்கள் 22 போராளிகளை மட்டுமே இழந்ததாகக் கூறினர், அதே நேரத்தில் 400 பேரைக் கொன்றதாக இராணுவம் கூறியது, ஆயினும்கூட, இராணுவம் பின்னடைவை சந்தித்தது. இதன் போது சுற்றிவளைக்கப்பட்டு பிடிபட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த 74 இராணுவத்தினரை புலிகள் படுகொலை செய்ததாக இராணுவம் குற்றம் சாட்டியது. புலிகள் அதை மறுத்தனர்.[8][9]

பின்விளைவுகள்

தொகு

இறந்தவர்கள், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை எதுவாக இருந்தாலும், இரு தரப்பும் இதில் எந்த முன்னேற்றத்தையும் பெறவில்லை, மேலும் இரு தரப்பும் போரின் முடிவில் அவர்கள் தொடங்கிய இடத்திற்கே திரும்பி வந்தனர். மொத்தத்தில், ஆகத்து 11 முதல் அக்டோபர் 29 வரையிலான காலகட்டத்தில் 300க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களும், 700-1,000 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு கூறியது.


மேற்கோள்கள்

தொகு
  1. "Sri Lankan Army Said to Repel Rebel Offensive". Los Angeles Times. 13 August 2006.
  2. "Brigadier Theepan was one of the main LTTE commanders who made great achievements on the battlefield". 2 September 2021.
  3. "TamilNet". www.tamilnet.com.
  4. "FOXNews.com - Fighting Escalates in Northern Sri Lanka". Foxnews.com. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
  5. "Al Jazeera English - News". English.aljazeera.net. Archived from the original on 4 June 2011. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
  6. Pulse of freedom tamilnation.org/
  7. "TamilNet". www.tamilnet.com.
  8. "478 killed in Jaffna peninsula". Thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
  9. "Srilanka Assessment 2014". Satp.org. Archived from the original on 2001-11-03. பார்க்கப்பட்ட நாள் 7 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாணச்_சமர்_(2006)&oldid=4030092" இலிருந்து மீள்விக்கப்பட்டது