யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரம்
யாழ்ப்பாணம் மணிக்கூட்டுக் கோபுரம் (Jaffna Clock Tower) என்பது வட இலங்கையின் யாழ்ப்பாணம் நகரில் உள்ள ஒரு மணிக்கூட்டுக் கோபுரமாகும். இது நகரின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. [1] 1875இல் வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட் பிரித்தானிய இலங்கைக்கு வருகை புரிந்ததை நினைவுகூரும் வகையில் இது கட்டப்பட்டது. [2] [3] [4]
வரலாறு
தொகு1875 இல் வேல்ஸ் இளவரசர் இலங்கைக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டபோது, 'யாழ்ப்பாண இளவரசர் வரவேற்புக் குழு ' ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் 10,000 இலங்கை ரூபாயை நிதியாகத் திரட்டினர். [5] 1875 திசம்பர் 1 அன்று கொழும்பு வந்த வேல்ஸ் இளவரசருக்கு வழங்க ஒரு வெள்ளி கலசத்தையும் நகைகளையும் வாங்க இந்த நிதி பயன்படுத்தப்பட்டது. [6] நிதியின் மீதி இருப்பு ரூ. 6,000-ஐ ஒரு நிரந்தர நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. [5] [7] ஜூலை 1, 1880 அன்று யாழ்ப்பாணக் கச்சேரியில் நடைபெற்ற கூட்டத்தில், யாழ்ப்பாண எஸ்ப்ளேனேடில் ஒரு மணிக்கூட்டுக் கோபுரத்தை உருவாக்க இந்த நிதியைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. [8] கோபுரத்தை கட்ட கூடுதலாக 4,000 ரூபாய் உள்ளூர் பங்களிப்பிலிருந்து திரட்டப்பட்டது. [9] இந்த கோபுரத்தை அரசாங்க கட்டிடக் கலைஞர் ஜே. ஜி. இசுமிதர் என்பவர் வடிவமைத்தார். [10] கடிகாரத்தை ஆளுநர் ஜேம்ஸ் இலாங்டன் நன்கொடையாக வழங்கினார். [9] [11] கடிகார மணி 1882 தேதியிட்டது. [11]
1980களின் பிற்பகுதியில் உள்நாட்டுப் போரினால் கோபுரம் மோசமாக சேதமடைந்தது. வேல்சு இளவரசர் சார்லசு 1998இல் இலங்கைக்கு வந்தபோது, கோபுரத்தை மீட்டெடுப்பதில் பிரிட்டன் சார்பில் நிதியுதவியை வழங்கினார். பிரிட்ட்டன் அரசு ஒரு மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியது. புதுப்பிக்கப்பட்ட கோபுரம் பிரித்தன் உயர் ஸ்தானிகர் லிண்டா டஃபீல்டால் 19 ஜூன் 2002 அன்று [12] மீண்டும் திறந்து வந்தார்.
உசாத்துணை
தொகு- ↑ Wickrematunge, Raisa. "Discovering Jaffna".
- ↑ Martyn 1923.
- ↑ Luxman, Sathajanan (2012). Two Elephants in the Matchbox. Matador. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1780880525.
- ↑ "Time for peace talks, says British HC".
- ↑ 5.0 5.1 Martyn 1923, ப. 228.
- ↑ Martyn 1923, ப. 37.
- ↑ Katiresu 2004, ப. 52.
- ↑ Martyn 1923, ப. 41.
- ↑ 9.0 9.1 Martyn 1923, ப. 261.
- ↑ Martyn 1923, ப. 260.
- ↑ 11.0 11.1 Katiresu 2004, ப. 53.
- ↑ Subramanian, T. S. (20 July 2002). "Cautious optimism". Frontline 19 (15). http://www.frontline.in/navigation/?type=static&page=flonnet&rdurl=fl1915/19150490.htm.
குறிப்புகள்
தொகு- Martyn, John H. (1923). Notes on Jaffna - Chronological, Historical, Biographical. Tellippalai: American Ceylon Mission Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-206-1670-7.
- Katiresu, Subramanier (2004). A Handbook to the Jaffna Peninsula and a Souvenir of the Opening of the Railway to the North. New Delhi: Asian Educational Services Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8120618725.
வெளி இணைப்புகள்
தொகு