யாழ் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை

இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை (Hindu Ladies Primary School) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் யாழ்ப்பாண நகரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலையாகும். யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாகிய இது யாழ்ப்பாண பெண்பிள்ளைகளின் வசதிக்காக 1979ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

Hindu Ladies Primary School
இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை
முகவரி
அரசடி வீதி ,
யாழ்ப்பாணம், வட மாகாணம்
இலங்கை
தகவல்
வகைபொது மாகாணப் பாடசாலை 1AB
குறிக்கோள்அன்பே வாழ்வு
சமயச் சார்பு(கள்)இந்து
நிறுவல்1979
பள்ளி மாவட்டம்யாழ்ப்பாணம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
அதிபர்செல்வி.சூரியவதனி
ஆசிரியர் குழு25
தரங்கள்1-10
பால்கலவன்
வயது வீச்சு5-10
மொழிதமிழ், ஆங்கிலம்
இல்லங்கள்மலைமகள் , அலைமகள் ,கலைமகள்
நிறங்கள்சிவப்பு , நீலம் , மஞ்சள்
School roll528
இணையம்


இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலையின் நுழைவாயில்

பாடசாலையின் தோற்றம்

தொகு

மகளிர்க்கென தனியான கல்லூரி ஒன்றின் தேவையை உணர்ந்த இந்துக் கல்லூரி சபை யாழ் இந்து மகளிர் கல்லூரியை 1943ம் ஆண்டு நிறுவியது. அக் கல்லூரி மாணவர் தொகை ரீதியாக அதன் பருமனிலும் கல்வி வழங்கல் ரீதியாக அதன் தரத்திலும் பெரும் வளர்ச்சி கண்டு வந்தது. 1970களில் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த கல்வி மறுசீரமைப்பு ஆரம்பக் கல்வியை சீராக்குவதில் அதிக கவனம் செலுத்தியது. கல்லூரியின் ஒரு பிரிவாக அமைவதை விட ஆரம்பக் கல்வி பிரிவு ஒரு தனியான பாடசாலையாக ஒழுங்கு செய்தல் மூலம் ஆரம்பக் கல்வி மறுசீரமைப்பு மற்றும் சீர்திருத்தம் என்பன செம்மையாக அமுல்படுத்தப்பட முடியும் எனும் ஆலோசனையை கல்வியாளர்கள் முன் வைத்தனர். பாடசாலைப் பருமன் உரியளவில் மட்டுப்படுத்தப்படும் போதே கல்வித்தரம் பேணப்படும். அதன் அடிப்படையில், இந்து மகளிர் கல்லூரியின் ஆரம்ப கல்விப்பிரிவு 01-01-1979 அன்று  யா/யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை எனும் பெயரில்  இயங்கத் தொடங்கியது.

பாடசாலை அதிபர்கள் விபரம்

தொகு

திருமதி.யோகம்மா ஸ்ரீவிக்கினேஸ்வரா

திருமதி. தனரஞ்சனி துரைசிங்கம்

செல்வி. சூரியவதனி

இலச்சினையின் விளக்கம்

தொகு

"அன்பே வாழ்வு" என்ற பாடசாலையின் மகுட வாசகத்தை ஏந்தி, திறந்த புத்தகத்தின் மத்தியிலே வெண்டாமரையில் ஒரு கையிலே ஏட்டினைத் தாங்கி, மறுகையிலே கானம் இசைக்கும் வீணையைத் மீட்டி, கல்விச் செல்வத்திற்கே அதிபதியாகிய சரஸ்வதித் தாய் வீற்றிருந்து அருள்பாலிக்க, ஒருபுறம் விளையாட்டின் மகிமையை உணர்த்தும் ஒலிம்பிக் தீபம் சுடர் விட்டு ஒளிர, மறுபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி கண்டு மிளிரும் சுருங்கி விட்ட வலைப்பின்னல் உலகத்தின் கோலத்தை காட்டிட, இவற்றுக்கெல்லாம் தலையாக பெயர் வரக்காரணமான எழில் கொஞ்சும் பச்சை வர்ணக்கொடியில் பாடசாலைக் கொடியில் பாடசாலை பெயரைத் தாங்கி அமைந்துள்ளது பாடசாலையின் இலச்சினை.

பாடசாலையின் வளர்ச்சிப் பாதை

தொகு

பாடசாலைக் கட்டிடங்களின் அபிவிருத்தி

தொகு

கல்லூரிக்கு திருமதி. விசாலாட்சி சிவகுருநாதர் அம்மையார் அவர்கள் நன்கொடையாகத் தந்துதவிய அரசடிவீதியில் உள்ள விசாலமான நிலப்பரப்பில் அதன் தென்கிழக்கு முலைப்பகுதியில் கல்லூரி பயன்படுத்தி வந்த 70'*20'(1400 சதுர அடி) அளவு கொண்ட கைப்பணி அறை 1979ம் ஆண்டு இப் பாடசாலைக்கு ஒதுக்கி தரப்பட்டது. 1979ம் ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவு திட்டத்தின் கீழ் இப் பாடசாலைக்கென ஒதுக்கித்தரப்பட்ட முப்பதாயிரம் (30,000) ரூபாவையும் பின்னர் கிடைத்த முப்பதாயிரம் ரூபாவையும் கொண்டு 50'*25' கொண்ட மேல்மாடி கட்டிடத்தின் தளவறை வேலை நடைபெற்றது. 1981ல் கைப்பணி அறையுடன் தொடர்ச்சியாக இருந்த மனையியல் அறை (1400 சதுர அடி)இப் பாடசாலைக்கு கொடுக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் மனையியல் அறையில் கல்லூரி மனையியல் வகுப்புக்கள் ஒருபுறமும், இப் பாடசாலையின் இரண்டு வகுப்புக்கள் மறுபுறமும் நடக்க வேண்டிய இக்கட்டான நிலையில் பாடசாலை இயங்கியது. 1979ம் ஆண்டு கட்டிமுடிக்க வேண்டிய 50'*25' மேல்மாடி, 1983.02.21 தான் நிறைவேறியது.

கட்டிட நெருக்கடி

தொகு

பதிவுகளின்படி இப்பாடசாலைக்கு ஆண்டு தோறும் கட்டிட நெருக்கடி இருந்து கொண்டே வருகின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால் வகுப்பறை இன்மையால் இரு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களை ஒரே வகுப்பிற்குள் அடக்க வேண்டிய நெருக்கடி நிலைமையும் காணப்பட்டது. பாடசாலையில் அதிகரித்து வரும் மாணவர் தொகைக்கு ஏற்ப கட்டப்படும் கட்டிடங்களின் அளவு அமையாதமையே இந்த இடர் நிலைக்கு காரணம் என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. அவ்வாறு இருக்கையில் பாடசாலைக்கு இன்றுவரை ஒன்றுகூடல் மண்டபம் இல்லை என்பதும் கவலைக்குரிய ஒன்றே ஆகும்.

தளபாடத் தட்டுப்பாடு

தொகு

இப் பாடசாலைக்கு தளபாடம் எப்போதும் தட்டுப்பாடாகவே இருந்துள்ளது. கல்லூரியில் இருந்து இப்பாடசாலை பிரிக்கப்பட போது அங்குள்ள பாலர் மேசைகளும் கதிரைகளும் தேவைக்குத் தேவை இப் பாடசாலைக்கு தரப்படும் என்று வட்டாரக் கல்வி அதிகாரி அவர்களால் கூறப்பட்ட போதும் கல்லூரியின் தளபாடத் தட்டுப்பாட்டை சமாளிக்க பாலர் மேசை கதிரைகளை பயன்படுத்தி வந்ததால் இப் பாடசாலைக்கு தேவையான தளபாடங்கள் தரப்படவில்லை. இதன் பயனாக 1980ம் ஆண்டு இப் பாடசாலையில் 130 பிள்ளைகள் நிலத்திலேயே படித்து வந்தார்கள். மலசலகூடம் அமைக்க ஒதுங்கியிருந்த பாடசாலை அபிவிருத்திச் சங்க நிதியை கொண்டு 25 பாலர் மேசைகளும், 50 பாலர் கதிரைகளும் வாங்கப்பட்டது. அக்காலப்பகுதியில் கல்வித்திணைக்களங்களும் தளபாடங்கள் தந்துதவி தளபாடத் தட்டுப்பாட்டை சற்று தளர்த்தியது.

வகுப்பும் மாணவர் தொகையும்

தொகு

1979

வகுப்பு:- தரம் 1 மற்றும் தரம் 2

மாணவர் தொகை-154

1980

வகுப்பு:- தரம் 1-தரம் 3 வரை

மாணவர் தொகை-251

1981

வகுப்பு:- தரம் 1-தரம் 4

மாணவர் தொகை-343

1995

வகுப்பு :-தரம் 1-தரம் 5 வரை

மாணவர் தொகை-775

2004

வகுப்பு :-தரம் 1-தரம் 5 வரை

மாணவர் தொகை-531

2016

வகுப்பு :-தரம் 1-தரம் 5 வரை

மாணவர் தொகை-528

கழுத்துப்பட்டி

தொகு

1983 வைகாசி மாதம் அதிபர் மற்றும் திருமதி. நா.சத்தியநாதன், திருமதி.எஸ்.இராமலிங்கம், திருமதி.ஜே.கந்தையா போன்றோரின் முயற்சியால் 1983-05-11 புதன் காலக்கூட்டத்தின் போது பாடசாலை மாணவர் தலைவர்களிற்கு அதிபராலும், வகுப்புத் தலைவர்களிற்கு வகுப்பாசிரியர்களாலும் முதன் முதலாக கழுத்துப்பட்டி அணிவிக்கப்பட்டது.

பாடசாலை கீதமும் இலச்சினையும்

தொகு

நவாலியூரைச் சேர்ந்த குழந்தைக் கவிஞர் பா. சத்தியசீலன் அவர்களால் பாடசாலைக்கீதம் இயற்றப்பட்டது. 1994ல் பாடசாலைக்குரிய இலச்சினை உருவாக்கப்பட்டது. 1994.10.06 உலக ஆசிரியர் தினத்தின் போது திரு.வைத்திலிங்கம் சண்முகநாதன் என்பவரால் அதிபரிடம் கையளிக்கப்பட்டது. திரு.மு.இராதாகிருஷ்ணன் அவர்கள் இந்த இலச்சினையை வரைந்து உதவினார்.

 
இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலயின் பாடசாலை கீதம்

உசாத்துணைகள்

தொகு

[1][2][3]

  1. http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_1979_-_2004&uselang=en
  2. http://www.jaffnavisit.com/jaffna-hindu-ladies-primary-school/
  3. http://www.jhlps.yolasite.com/