யுரேனியம் இருசல்பைடு

வேதிச் சேர்மம்


யுரேனியம் இருசல்பைடு (Uranium disulfide) என்பது US2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தில் யுரேனியம் +4 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் ஆக்சிசன் -2 என்ற ஆக்சிசனேற்ற நிலையிலும் காணப்படுகின்றன. கதிரியக்கப் பண்பு கொண்டுள்ள இச்சேர்மம் கருப்பு நிறப் படிகங்களாகக் காணப்படுகிறது.[1]

யுரேனியம் இருசல்பைடு
இனங்காட்டிகள்
12039-14-4
InChI
  • InChI=1S/2S.U/q2*-2;+4
    Key: OYHHCKFHGQELGK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 131700999
  • [S-2].[S-2].[U+4]
பண்புகள்
US2
வாய்ப்பாட்டு எடை 302.160 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
கட்டமைப்பு
படிக அமைப்பு நாற்கோணப் படிகம் (α-US2)
புறவெளித் தொகுதி P4/ncc (No. 130)
Lattice constant a = 1029.3 பைக்கோமீட்டர், c = 637.4 பைக்கோமீட்டர்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

யுரேனியம் இருசல்பைடு இரண்டு புற வேற்றுமை வடிவங்களில் காணப்படுகிறது. α-யுரேனியம் இருசல்பைடு, β-யுரேனியம் இருசல்பைடு என்பன இவ்விரண்டு வடிவங்களாகும். α-யுரேனியம் இருசல்பைடு 1350 பாகை செல்சியசு வெபநிலைக்கு மேல் நிலைப்புத்தன்மையுடனும் அதற்கு கீழான வெப்பநிலையில் சிற்றுறுதி நிலைப்புத்தன்மையும் கொண்டுள்ளது.[2] இவடிவத்தில் காணப்படும் நாற்கோணப் படிக வடிவம் யுரேனியம் இருசெலீனைடின் கட்டமைப்பை ஒத்து உள்ளது. 1350 பாகை செல்சியசு வெபநிலைக்கு கீழான வெப்பநிலையில் β-யுரேனியம் இருசல்பைடு நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது..[3]

தயாரிப்பு

தொகு

உயர்ந்த வெப்பநிலையில் யுரேனியம் உலோகப் பொடியுடன் வாயு நிலை ஐதரசன் சல்பைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் குறைத்தல் வினை நிகழ்ந்து யுரேனியம் இருசல்பைடு உருவாகிறது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Kohlmann, H.; Beck, H. P. (2000). "Uranium's valency in U3S5". Journal of Solid State Chemistry (Academic) 150 (2): 339. doi:10.1006/jssc.1999.8599. Bibcode: 2000JSSCh.150..336K. 
  2. Picon, Marius; Flahaut, Jean (1953). "Dimorphism of the uranium disulfide, US2". Compt. Rend. 237: 808–810. 
  3. Noel, H.; Le Marouille, J.Y. (1984). "Crystal structure and properties of the uranium chalcogenides α-US2 and α-USe2". Journal of Solid State Chemistry (Elsevier BV) 52 (3): 197–202. doi:10.1016/0022-4596(84)90001-x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-4596. 
  4. Assmann, Helmut; Stehle, Heinz (1981) [Mid-1979]. "Weitere Uranverbindungen als Kernbrennstoffe" [Other uranium compounds as nuclear fuels]. In Buschbeck, Karl-Christian; Keller, Cornelius (eds.). Handbuch der Anorganischen Chemie [Inorganic Chemistry Handbook]. Gmelin (in ஜெர்மன்). Vol. U: Uran (Suppl. A3) (8th ed.). Berlin: Springer. pp. 210–211. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1007/978-3-662-10275-6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-662-10276-3. LCCN 25-1383.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_இருசல்பைடு&oldid=3922101" இலிருந்து மீள்விக்கப்பட்டது