யுரேனியம் டைசெலீனைடு

யுரேனியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது

யுரேனியம் டைசெலீனைடு (Uranium diselenide) என்பது USe2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யுரேனியம் மற்றும் செலீனியம் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. செஞ்சாய்சதுர படிகக் கட்டமைப்புத் திட்டத்தில் உருவான β வடிவ யுரேனியம் டைசெலீனைடு சேர்மமும் அறியப்படுகிறது. பல்வேறாகக் காணப்படும் படிகக் குடும்பங்களில் இது PbCl2 குடும்பத்துடன் பொருந்தி அமைந்துள்ளது. a: 7.455 Å, b: 4.2320 Å, c= 8.964 Å. என்பவை இச்சேர்மத்தினுடைய ஓர் அலகுக் கூட்டின் பரிமாணங்களாகும். வெப்பநிலை 14 கெல்வினுக்கு கீழாக இருக்கும்போது மட்டும் இச்சேர்மம் வழக்கத்திற்கு மாறாக நேர்காந்தம் எனப்படும் பெரோகாந்தப் பண்பை வெளிப்படுத்துகிறது [1].

யுரேனியம் டைசெலீனைடு
இனங்காட்டிகள்
12138-21-5
ChemSpider 74838
EC number 235-245-4
InChI
  • InChI=1S/2Se.U
    Key: WIQPIQPRLFROPS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82939
SMILES
  • [Se-2].[Se-2].[U+4]
பண்புகள்
USe2
வாய்ப்பாட்டு எடை 395.948 கி/மோல்
தோற்றம் கருப்பு நிறப் படிகத்திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

செலீனியத்திற்கு மாற்றாக தெலூரியத்தை வெவ்வேறு அளவுகளில் பதிலீடு செய்து அணிக்கோவையின் அளவை விரிவுபடுத்தவும், பெரோகாந்த கியூரி வெப்பநிலையை அதிகரிக்கவும் முடியும் [1].

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யுரேனியம்_டைசெலீனைடு&oldid=2584369" இலிருந்து மீள்விக்கப்பட்டது