யூடித் இலீன்

ஆத்திரேலிய அமெரிக்க சூரிய அறிவியலாளர், காலநிலையியலாளர் .

யூடித் எல். இலீன் (Judith L. Lean) ஓர் ஆத்திரேலிய அமெரிக்க சூரிய அறிவியலாளரும், காலநிலையியலாளரும் ஆவர். அமெரிக்க நாவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தில் முதுநிலை அறிவியலாளராக பணிபுரிந்து வருகிறார். மும்முறை நாசா குழுச் சாதனை விருதைப் பெற்றுள்ளார். பல கல்விக்கழகங்களில் உறுப்பினராகவும் ஆய்வுறுப்பினராகவும் உள்ளார்.

யூடித் இலீன்
துறைஇயற்பியல், காலநிலையியல்
பணியிடங்கள்ஐக்கிய அமெரிக்க நாவாய் ஆராய்ச்சி ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்ஆத்திரேலியத் தேசியp பல்கலைக்கழகன் (இளம் அறிவியல்)
அடிலைடெ பல்கலைக்கழகம் (முனைவர்)
விருதுகள்நாசா குழுச் சாதனை விருது

கல்வி தொகு

1974 ஆம் ஆண்டில் இயற்பியல் இளவல் பட்டத்தை உயர்தகைமையோடு ஆத்திரேலியத் தேசியப் பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் இவர் அடிலைடு பல்கலைக்கழகத்தில் 1980 ஆம் ஆண்டு வளிமண்டல இயற்பியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[1] இவரது முனைவர் பட்ட ஆய்வுத் த்லைப்பு வளிமண்டலப் புற ஊதாக்கதிர் உட்கவர்தல் கதிர்நிரல் அளவி என்பதாகும்.[2]

வாழ்க்கைப்பணி தொகு

இவர் சுற்றுச்சூழலியல் ஆராய்ச்சிக்கான கூட்டுறவு நிறுவனத்திலும் மேரிலாந்தில் உள்ள பயன்பாட்டு ஆராய்ச்சி தொழிலிணையத்திலும் பணிபுரிந்துள்ளார். 1988 இல் அமெரிக்க நாவாய் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விண்வெளி அறிவியல் கோட்டத்தில் ஆராய்ச்சி இயற்பியலாளராகச் சேர்ந்துள்ளார்.இங்கு இவர் ஒருங்கியைந்த சூரிய- புவி அமைப்புசார் ஆய்வில் முதுநிலை அறிவியலாளராக உள்ளார்.[1]

ஆராய்ச்சி தொகு

இவரது கீழ்வரும் இரண்டு ஆய்வுக் கட்டுரைகள் 2014 இல் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கடிதங்கள் அரிய 40 பதிவுகளில் வெளியிட ஏற்கப்பட்டன.[3]

தகைமைகளும் விருதுகளும் தொகு

இவர் 2002 இல் அமெரிக்கப் புவி இயற்பியல் ஒன்றியத்தில் ஆய்வுறுப்பினராகவும் 2003 இல் தேசிய அறிவியல் கல்விக்கழகத்தில் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மும்முறை நாசாவின் குழுச் சதனை விருதை SDO/EVE அறிவியல் குழு சார்பிலும்(2012) TIMED/SEE அறிவியல் குழு சார்பிலும (2011) UARS கருவியாக்கக் குழு சார்பிலும் (1992) பெற்றுள்ளார். இவர்2010 இல் குடியரசு தலைவர் தகைமைத் தர விருதைப் பெற்றார் (2010).இவர் பன்னாட்டுப் புவிக்காந்தவியல் வளிமண்டலவியல் கழகத்திலும் அமெரிக்க வானியல் கழக சூரிய இயற்பியல் கோட்ட்த்திலும், அமெரிக்க வானிலையியலாளர் கழகத்திலும் அமெரிக்க இயற்பியலாளர் கழகத்திலும் உறுப்பினராக உள்ளார். இவர் 2013 இல் அமெரிக்க மெய்யியல் கழக உறுப்பின்ராகத் தேர்வு செய்யப்பட்டார். [1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 McKinney, Donna (2013-07-30). "Dr. Judith Lean Elected Member of the American Philosophical Society". US NRL News Releases (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-31.{{cite web}}: CS1 maint: url-status (link)  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. Lean, Judith L (1980). Atmospheric ultraviolet absorption spectroscopy (Thesis) (in English). OCLC 222737256.{{cite thesis}}: CS1 maint: unrecognized language (link)
  3. McKinney, Donna (2014-06-19). "Dr. Judith Lean Receives Double Honors in Geophysical Research Letters Top 40". US NRL News Releases (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-01.{{cite web}}: CS1 maint: url-status (link)  இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யூடித்_இலீன்&oldid=3931344" இலிருந்து மீள்விக்கப்பட்டது