யூனஸ் எம்ரே

துருக்கிய கவிஞர்

யூனஸ் எம்ரேYunus Emre ) (1238-1328) டெர்விஸ் யூனஸ் என்றும் அழைக்கப்படும் இவர் துருக்கிய நாட்டுப்புறக் கவிஞரும் சூபி துருக்கிய கலாச்சாரத்தில் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தியவருமாவார். இரிசலேது’ன் நுஷியே என்ற கவிதை நூல் இவரது மிக முக்கியமான புத்தகமாகும்.[3] இவர் பழைய அனத்தோலியன் துருக்கிய மொழியில் எழுதினார். இவரது பெயர், யூனஸ் என்பது, ஜோனா என்ற ஆங்கிலப் பெயருக்கு இணையான அரபு மொழியாகும். யுனெஸ்கோ பொது மாநாடு 1991 ஆம் ஆண்டை கவிஞர் பிறந்த 750 வது ஆண்டு, சர்வதேச யூனஸ் எம்ரே ஆண்டாக அறிவிக்கும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது. [4]

Yûnus Emre
يونس امره
துருக்கியின் கரமானில் அமைக்கப்பட்டுள்ள யூனஸ் எம்ரேவின் சிலை
தாய்மொழியில் பெயர்يونس امره
பிறப்பு1238
சிவ்ரிகிசர் [1][2] உரூம் சுல்தானகம், தற்போதைய துருக்கி
இறப்பு1320
யூனஸெம்ரே (முன்னர் சாரு), உதுமானியப் பேரரசு, தற்போதைய துருக்கி
இனம்துருக்கியர்
அறியப்படுவதுசூபித்துவம், திவான், பழைய அனத்தோலியன் துருக்கிய மொழி
தாக்கம் 
செலுத்தியோர்
ரூமி
சமயம்சுன்னி இசுலாம்
சகாப்தம்அனத்தோலிய பைலிக்ஸ்

யூனஸ் எம்ரே புதிய உருவான துருக்கிய இலக்கியத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியுள்ளார். இது பாரசீக மற்றும் அரபு மொழிகளின் கலவையாக இருந்தது. அகமது யெசெவி மற்றும் சுல்தான் வாலாட் ஆகியோருக்குப் பிறகு, நன்கு அறியப்பட்ட கவிஞர்களில் ஒருவர். பாரசீக அல்லது அரபு மொழியில் மட்டும் அல்லாமல், இவரது பிராந்தியத்தில் பேசப்படும் பழைய அனத்தோலியன் துருக்கிய மொழியில் கவிதைகளை இயற்றினார். மத்திய மற்றும் மேற்கு அனத்தோலியாவில் உள்ள மக்களின் பிரபலமான பேச்சுக்கு மிக நெருக்கமாக இவரது எழுத்துகள் இருக்கிறது. இது பல அநாமதேய நாட்டுப்புறக் கவிஞர்கள், நாட்டுப்புறப் பாடல்கள், விசித்திரக் கதைகள், புதிர்கள் மற்றும் பழமொழிகளின் மொழியாகும்.

இதனையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. Güzel, Oğuz & Karatay 2002, ப. 672.
  2. Ambros 2002, ப. 349.
  3. "Yunus Emre'nin Eserleri". Enkucuk.com (in துருக்கிஷ்). 2018-01-21. பார்க்கப்பட்ட நாள் 2020-04-24.
  4. Halman, Talat (2007). Rapture and Revolution. Syracusa University Press, Crescent Hill Publications. p. 316.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
யூனஸ் எம்ரே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனஸ்_எம்ரே&oldid=3814628" இலிருந்து மீள்விக்கப்பட்டது