யூனிநார்
யூனிநார் (ஆங்கிலம் UNINOR) இந்தியாவில் நகர்பேசி சேவை வழங்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனம் இந்தியாவில் 22 வட்டங்களில் சேவை வழங்குகிறது. 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் நார்வேயின் டெலிநார் நிறுவனம் 67.25 சதவிகித பங்குகளையும் இந்தியாவின் யுனிடெக் நிறுவனம் 32.75 சதவிகித பங்குகளையும் கொண்டுள்ளன. 2009ம் ஆண்டு இறுதியில் இந்நிறுவனம் ஜி.எஸ்.எம். வகை நகர்பேசி சேவையை தொடங்கியது.
வகை | கூட்டு நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 2009 |
தலைமையகம் | குர்கானில், இந்தியா |
முதன்மை நபர்கள் | ஸ்டெயின்-எரிக் வெல்லன் (முதன்மை நிர்வாக அதிகாரி]]) சஞ்சய் சந்திரா (நிறுவன தலைவர்) |
தொழில்துறை | தொலைதொடர்பு |
உற்பத்திகள் | நகர்பேசி இணையம் கம்பியில்லா இணையம் |
பணியாளர் | 2,000 |
தாய் நிறுவனம் | டெலிநார் , நார்வே (67.25%) யுனிடெக் குழுமம் (32.75%) |
இணையத்தளம் | Uninor.in |
நிர்வாகம்
தொகுயூனிநார் தலைமையகம் குர்கானில் அமைந்துள்ளது.யூனிநார் நிறுவனம் 22 வட்டங்களையும் நிர்வாகரீதியாக 13 மண்டலங்களாக அமைத்துள்ளது.
மண்டலவாரியாக சந்தாதாரர் விபரம்
தொகுயூனிநார் | ||
---|---|---|
மண்டலம் | எண்ணிக்கை | |
கேரளா | 311018 | |
தமிழ்நாடு | 644442 | |
கர்நாடகம் | 527571 | |
ஆந்திரப்பிரதேசம் | 838735 | |
மேற்கு வங்காளம் | 217695 | |
ஒரிசா | 312362 | |
பீகார் (மற்றும்) ஜார்கண்ட் | 861683 | |
மும்பை | 193028 | |
குஜராத் | 285964 | |
மகாரஷ்டிட (மற்றும்) கோவா | 225303 | |
கொல்கத்தா | 193028 | |
உத்திரபிரதேசம்-கிழக்கு | 1370065 | |
உத்திரபிரதேசம்-மேற்கு | 917188 | |
மொத்தம் | 6,873,798 |
வழங்கும் சேவை வகைகள்
தொகு- குறுஞ்செய்தி
- நகர்பேசி இணைய இணைப்பு
சிறப்பு
தொகுஇந்தியாவிலேயே முதல் முறையாக இடத்துக்கும் நேரத்திற்கும் தகுந்தார் போல மாறும் கட்டண விகிதம்(Dynamic Plan) என்ற திட்டத்தை செயல்படுத்தியது யூனிநார் நிறுவனம் ஆகும்.