யூரோப்பியம்(II) ஐதராக்சைடு

வேதிச் சேர்மம்

யூரோப்பியம்(II) ஐதராக்சைடு (Europium(II) hydroxide) என்பது Eu(OH)2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். Eu(OH)2·H2O என்ற வாய்பாட்டைக் கொண்ட நீரேற்றாகவே இது பெரும்பாலும் காணப்படுகிறது.

யூரோப்பியம்(II) ஐதராக்சைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
யூரோப்பியம் ஈரைதரைடு
Europium(II) hydroxide
இனங்காட்டிகள்
12020-56-3 Y
ChemSpider 24769659
InChI
  • InChI=1S/Eu.2H2O/h;2*1H2/q+2;;/p-2
    Key: IVBWDMZYNZPPBZ-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 101288893
  • [OH-].[OH-].[Eu+2]
பண்புகள்
Eu(OH)2
தோற்றம் வெளிர் மஞ்சள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

உலோக நிலை யூரோப்பியத்துடன் 10 மோல்/லி சோடியம் ஐதராக்சைடு கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்து யூரோப்பியம்(II) ஐதராக்சைடு ஒற்றைநீரேற்று தயாரிக்கப்படுகிறது.[1] யூரோப்பியம்(III) குளோரைடை ஒரு மூலப்பொருளாகப் பயன்படுத்தும் தயாரிப்பு முறைக்கும் சில ஆதாரங்கள் உள்ளன. உலோக அயனிகளின் நீரிய கரைசலை குறைக்கப் பயன்படும் இயோன்சு குறைப்பானைப் பயன்படுத்தி சோடியம் ஐதராக்சைடு சேர்த்து யூரோப்பியம்(II) ஐதராக்சைடு தயாரிப்பதாக இத்தயாரிப்பு முறை அமைகிறது.[2]

பண்புகள்

தொகு

யூரோப்பியம்(II) ஐதராக்சைடு செஞ்சாய்சதுரக் கட்டமைப்பில் உள்ள படிக அமைப்பைச் சேர்ந்ததாகும். a=6.701 ± 0.002, b=6.197 ± 0.002, c=3.652 ± 0.001 A. என்ற அளவுருக்களுடன் இப்படிகம் அமைந்துள்ளது.[1] வெப்பத்தால் சிதைந்து யூரோபியம்(II) ஆக்சைடை (EuO) உருவாக்குகிறது; காற்றில் உடனடியாக ஆக்சிசனேற்றமடைந்து யூரோபியம்(III) ஐதராக்சைடாக மாறுகிறது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 H. Baernighausen. Lattice constants and space group of the isotypic compounds Eu(OH)2.H2O, Sr(OH)2.H2O, and Ba(OH)2.H2O. Zeitschrift fuer Anorganische und Allgemeine Chemie, 1966. 342 (5-6): 233-239. ISSN: 0044-2313.
  2. Garton, G.; Hukin, D. A. Studies of some europium(II) compounds. Proc. Conf. Rare Earth Res., 3rd, Clearwater, Florida, 1964. (1963) 3-10.
  3. 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 202, 204-205