யெசே இலியோனார்டு கிரீன்சுடைன்

யெசே இலியோனார்டு கிரீன்சுடைன் (Jesse Leonard Greenstein) (அக்தோபர் 15, 1909 - அக்தோபர் 21, 2002) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.[1] இவரது தந்தையார் ஜி. மவிரிசு. இவரது தாயார் இலீச் பீன்கோல்டு.

இவர் 1937 இல் ஆர்வார்டு பல்கலைகழகத்தில் தன் 16 ஆம் அகவையில் சேர்ந்து, டொனால்டு எச். மெஞ்சே வழிகாட்டுதலின்கீழ் முனைவர் பட்டம் பெற்றார்.[2] ஆர்வார்டில் இருந்து விடுபடும் முன்பு, இவர் நம் பால்வழியில் கார்ல் ஜான்சுகி கண்டுபிடித்த கதிர்வீச்சு அலைகளை விளக்கி அதன் வாயிலைக் கண்டறியும் பிரெட் இலாரன்சு விப்பிள் அவர்களின் திட்டத்தில் ஈடுபாட்டார்.[3] இவர் தன் தொழில்முறை வாழ்க்கையை யெர்க்கேசு வான்காணகத்தில் ஆட்டோ சுத்ரூவ அவர்களின் கீழ் தொடங்கினார். பின் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். உலூயிசு ஜி. கென்யேய் அவர்களுடன் இணைந்து இவர் புதிய கதிர்நிரல்மானியையும் அகல்நெடுக்க ஒளிப்படக் கருவியையும் உருவாக்கினார்]. இவர் கால்டெக் நிறுவன வானியல் திட்டத்தை 1972 வரை வழிநடத்தினார். பின்னர், படைத்துறை வெள்ளோட்டச் செயற்கைக்கோள்களின் வகைபாட்டில் ஈடுபட்டார்.

இவர் இலெவெரெட் டேவிசு இளவலுடன் இணைந்து, 1949 இல் நம் பால்வழியில் உள்ள காந்தப்புலம் அதன் சுருள்கைத் திசையுடன் இணையாக நிலவுவதற்கான செயல்முறை விளக்கம் தந்தார் .டேவிசு உடனான கோட்பாட்டுப்பணி அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒளியின் முனைவாக்கம் உடுக்கண வெளியில் நிலவும் தூசுமணிகளின் காந்தப்புலச் சிதறலால் விளைகிறது என்ற வில்லியம் ஆல்பர்ட் கில்ட்னரின் முடிவை அடிப்படையாகக் கொண்டதுவாகும்.

இவர் விண்மீன்களில் வேதியியல் தனிமங்கள் செறிந்து இருப்பதை அறியும் முதன்மை ஆய்வில் ஈடுபட்டார். மார்ட்டன் சுகிமிடுடன் இணைந்து முதன்முதலாக பால்வெளியளவுக்குப் பொலிவு உள்ள, நெடுந்தொலைவில் அமைந்த குறும்பொருள்களாக, பகுதி உடுக்கணவெளி கதிர்வீச்சு வாயில்களை (குவேசார்களை) முதன்முதலாக இனங்கண்டார். முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கதிர்வீச்சு வாயில்களான 3C 48, 3C 273 ஆகிய குவேசார்களின் கதிர்நிரல்கள் சிவப்பு பக்கமாக உயர்பெயர்ச்சியுடன் அமைந்திருந்தன. எனவே இவற்றை இனங்காண்பது மிக அரிதாக இருந்தது. ஆனால் கிரீன்சுடைன் 3C 48 ஐ சுகிமிடுக்கும் முன் இனங்கண்டார். இவரது ஒருசாலை பணியாளர் பலோமார் வான்காணகத்தில் 3C 273 இன் கதிர்நிரலைக் கணித்தார்.

தகைமைகள்

தொகு

விருதுகள்

அமெரிக்க வானியல் கழகத்தின் என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1970)

இவர் பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள்

தொகு
  1. George Wallerstein (December 2003). "Obituary: Jesse Leonard Greenstein". Physics Today 56 (12): 84–85. doi:10.1063/1.1650245. http://scitation.aip.org/content/aip/magazine/physicstoday/article/56/12/10.1063/1.1650245. 
  2. Hockey, Thomas (2009). The Biographical Encyclopedia of Astronomers. Springer Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-387-31022-0. பார்க்கப்பட்ட நாள் August 22, 2012.
  3. Jessie L. Greenstein, Optical and Radio Astronomers in the Early Years. In Sullivan, Woodruff T. (2005). The Early Years of Radio Astronomy: Reflections Fifty Years After Jansky's Discovery. Cambridge University Press. pp. 67-82

வெளி இணைப்புகள்

தொகு