யெருக்குல மொழி
யெருக்குல மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 300,000 மக்களால் பேசப்படுகிறது. இது யெருக்கல, யருக்குல, யெர்குல, எருக்கல, கொறவா, யெருக்கல-கொறவா, யெருக்கல பாஷா, எருக்கு பாஷா, கோர்ச்சி, குறுத்தா போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு.
யெருக்குல | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஆந்திரப் பிரதேசம், ராயல சீமா, தெலெங்கானா, ஆந்திராப் பகுதிகள்; கர்நாடகம்; தமிழ்நாடு, நீலகிரி, கோயம்புத்தூர், பெரியார், சேலம், செங்கை அண்ணா; கேரளா; மஹாராஷ்டிரா |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 300,000 (1997) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | yeu |
பரிக்கல, சங்கர-யெருக்கல என்பவை கிளை மொழிகள். இம்மொழி ரவுலா, இருளா மொழிகளுக்கு நெருக்கமானது. தமிழுடனும் குறிப்பிடத்தக்க சொல்லொற்றுமை கொண்டது.