யெல்லோ

2014 மராத்தி திரைப்படம்

யெல்லோ (Yellow) என்பது 2014 ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் ஆகும். மகேஷ் லிமாயே இயக்கிய இப்படத்தை ரித்தேஷ் தேஷ்முக், உத்துங் தாக்கூர் ஆகியோர் தயாரித்துள்ளனர். [1] டௌவுன் சிண்ரோம் என்னும் மூளை வளர்ச்சி குறைபாடு கொண்ட ஒரு மகள்/தாய் உறவை இப்படம் ஆராய்கிறது.

யெல்லோ
இயக்கம்மகேஷ் லிமாயே
தயாரிப்புரித்தேஷ் தேஷ்முக்
உத்துங் இதேந்திர தாக்கூர்
கதைஅம்பார் ஹடப் <dr> கணேஷ் பண்டித்
நடிப்புமிருனால் குல்கர்னி
உபேந்திரா லிமாயி
ஹிருஷிகேஷ் ஜோஷி
மனோஜ் ஜோஷி
ஐஸ்வர்யா நர்கர்
ஒளிப்பதிவுமகேஷ் லிமாயே
கலையகம்ரித்தேஷ் தேஷ்முக்
வெளியீடு4 ஏப்ரல் 2014 (2014-04-04)
நாடுஇந்தியா
மொழிமராத்தி

அறிமுக இயக்குனரான கௌரி கேட்கிலின் படமான இது, சிறப்புத் தேவைகள் கொண்ட ஒரு குழந்தையின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டது. படம் 2014 ஏப்ரல் 4 அன்று வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது. [1] [2] பாலக்-பாலக் (2013) படத்திற்குப் பிறகு நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் தயாரித்த இரண்டாவது படம் இது. [3]

61 வது தேசிய திரைப்பட விருதுகளில், இது சிறப்பு ஜூரி விருதைப் பெற்றது. அதே சமயம் குழந்தை நட்சத்திரங்கள் கௌரி காட்கில் மற்றும் சஞ்சனா ராய் ஆகியோர் சிறப்பு குறிப்பு சான்றிதழைப் பெற்றனர். [4]

சுருக்கம் தொகு

முக்தா ( மிருணாள் குல்கர்னி ), சேகர் ( மனோஜ் ஜோஷி ) ஆகியோரின் மகளான கௌரி (கௌரி கேட்கில்), டெளன் நோய்க்கூட்டறிகுறி எனப்படும் மூளை வளர்ச்சி குறைபாடு கொண்ட சிறுமியாக ஆவாள். கணவரின் ஆதரவு இல்லாதபோதிலும், முக்தா கௌரியை பிறர் மதிக்கும்படி வளர்க்க விரும்புகிறாள். அவள் கணவனைப் பிரிந்து தன் சகோதரன் சிறீ ( ஹிருஷிகேஷ் ஜோஷி ) உடன் வாழத் தொடங்குகிறாள். கௌரி போன்ற மாற்றுத் திறனாளிக் குழந்தைகளுக்கு, அவர்களின், கண், கைகள் போன்றவை ஒன்றிணைந்து செயல்படுவதற்கு நீச்சல் ஒரு சிறந்த பயிற்சி என்பதை முக்தா அறிகிறாள். இதனால் தன் மகளை நீச்சல் பயிற்சியில் சேர்த்துவிடுகிறாள். கௌரியின் நீச்சல் பயிற்சியாளர் பிரதாப் சர்தேஷ்முக் ( உபேந்திரா லிமாயே ) அவளின் நீச்சல் திறமையைப் பார்த்து, அவளை மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய நீசல் போட்டியில் பங்கேற்க முயற்சி செய்கிறார். அது நனவானதா போட்டியில் கௌரி வென்றாளா என்பதே கதையின் முடிவு ஆகும்.

நடிப்பு தொகு

வெளியீடு தொகு

படத்தின் முதல் தோற்றம் புரோமோ 2014 சனவரியில் வெளியிடப்பட்டது. [5]

விருதுகள் தொகு

விருது/விழா வகை முடிவு
61 வது தேசிய திரைப்பட விருதுகள் [6] சிறப்பு ஜூரி விருது வெற்றி
கௌகாட்கில் (குழந்தை நட்சத்திரம்) சிறப்பு குறிப்பு சான்றிதழ் (திரைப்படம்) வெற்றி
சஞ்சனா ராய் (குழந்தை நட்சத்திரம்) சிறப்பு குறிப்பு சான்றிதழ் (திரைப்படம்) வெற்றி

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யெல்லோ&oldid=3569350" இருந்து மீள்விக்கப்பட்டது