யேசு மத நிராகரணம்


யேசு மத நிராகரணம் சிவப்பிரகாசரால் எழுதப்பட்டது. இது கிறிஸ்துவ மதத்தைத் துாற்றும் வண்ணம் எழுதப்பட்ட நுாலாகும்.

முன்னுரை

தொகு

யேசு மத நிராகரணம் என்பது கிறிஸ்துவ மதத்தைத் துாற்றும் கருப்பொருள்களைக் கொண்டு எழுதப்பட்ட நுாலாகும்.

ஆசிாியர்

தொகு

சிவப்பிரகாசர்[1] 17 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப் புலவர், அறிஞர் மற்றும் தத்துவ மேதை. இவா் "சிவ அனுபூதி செல்வா்" "கற்பனைக் களஞ்சியம்", "துறைமங்கலம் சிவப்பிரகாசர்" என்றும் அழைக்கப்படுகிறார். முப்பத்து நான்கிற்கும் மேற்பட்ட சைவ சித்தாந்த நுால்களை தமிழ் இலக்கியங்கள் வாயிலாகத் தந்துள்ளார்.[2] தமிழகத்தில் சைவசமய வளர்ச்சிக்கு வித்திட்ட சமய குரவர்களான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருக்கும் "நால்வர் நான்மணி மாலை" என்ற கவிதை நூலை இவர் எழுதினார்.

விளக்கம்

தொகு

சில எடுத்துக்காட்டுகளுடன் கிறித்துவ மதத்திற்கு எதிராக இந்நுாலை சிவப்பிரகாசர் எழுதினார். ராபர்டோ டி நொபிலி இவரைச் சந்தித்து, இந்து மதம் மற்றும் கிறித்துவ மதம் பற்றி வாதிட்டதாக வரலாறு உள்ளது. வாதத்திற்குப் பிறகு சிவப்பிரகாசர் இந்நுாலை இயற்றினார். இந்நுாலின் பிரதி எதுவும் கிடைக்கப் பெறவில்லை. சிலர் அவை எாிக்கப்பட்டுவிட்டதாகவும் கருதுவர்.

சில எழுத்தாளர்கள் சிவப்பிரகாசா் வாதிட்டது வீரமாமுனிவர் எனப்படும் கான்ஸ்டன்சோ பெஸ்கி என்றும் ராபர்டோ டி நொபிலி இல்லை என்றும் கருதுவர்.

சிவப்பிரகாசரின் தம்பி வெள்ளையரின் வழித்தோன்றலான எஸ். வி. எஸ் இரத்தினம் என்னும் தேச பக்தர் , நீதிபதி தன்னுடைய சுயசரிதையான "நான் உங்கள் தோனி"[3] என்னும் நுாலில் இந்நுலைப் பற்றிக் குறிப்பிடுகிறார். தன்னுடைய தாத்தா சூசை எனப்படும் சுவாமிநாத தேசிகர், சுந்தரேசனின் மகனார், இந்நுாலின் ஓலைச் சுவடி பிரதிகளைக் கொண்டிருந்ததாகவும், பின் நாளில் அது தொலைந்துவிட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும் பார்க்க

தொகு

சிவப்பிரகாசர்

சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசக் கருத்து

நால்வர் நான்மணி மாலை

வெளி இணைப்புகள்

தொகு

கற்பனைக் களஞ்சியத்தின் அற்புதச் சொற்கோயில், இடைமருதூர் கி.மஞ்சுளா, தினமணி

தொகுப்புகள்

தொகு
  1. "சென்னை நூலகம் - Tamil Literature Books - Moral Books - Nanneri". chennailibrary.com. Retrieved 2014-07-28.
  2. "Tamil Literature பரணிடப்பட்டது 2014-02-04 at the வந்தவழி இயந்திரம்". Lisindia.net. Retrieved 2014-07-28.
  3. "Naan Ungal Thoni (download torrent) - TPB". Tpb-proxy.com. 2014-05-26. Retrieved 2014-07-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யேசு_மத_நிராகரணம்&oldid=3588718" இலிருந்து மீள்விக்கப்பட்டது