யோகா கற்றுக் கொள்ளுங்கள் (நூல்)
யோகாவின் அடிப்படைத் தத்துவம் முதல் ஆரோக்கிய வாழ்வுக்கு யோகா உதவும் முறைகள் என அனைத்தையும் இந்த “யோகா கற்றுக் கொள்ளுங்கள்” நூல்(பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8368-612-9) விளக்குகிறது. 120 பக்கங்களுடன் இந்திய மதிப்பில் ரூபாய் 60 எனும் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
யோகா கற்றுக் கொள்ளுங்கள் (நூல்) | |
---|---|
வகை: | மருத்துவம் |
துறை: | யோகாசனங்கள் |
இடம்: | நலம், நியூ ஹாரிஜன் மீடியா பி.லிட்., எண்33/15, இரண்டாவது மாடி, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை - 600 018. |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 120 |
பதிப்பகர்: | நலம் பதிப்பகம் |
பதிப்பு: | டிசம்பர் ’2007 |
நூலாசிரியர்
தொகுநூலாசிரியர் கணபதி ராம்கிருஷ்ணன் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஐந்து இசை ஆல்பங்களை வெளியிட்டிருக்கும் இவர் பத்திரிகைகளில் இசை, நடனம் குறித்த விமர்சனங்களையும் எழுதி வருகிறார்.
பொருளடக்கம்
தொகு- யோகா -ஓர் அறிமுகம்
- மனநலமே உடல் நலம்
- யோகா- மூன்று அம்சங்கள்
- ஆசனங்கள்
- பிராணாயாமம்
எனும் 5 தலைப்புகளில் எளிமையான நடையில் யோகா குறித்து இந்த நூலில் முழுமையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
யோகா -ஓர் அறிமுகம்
தொகுமுதல் பகுதியான இதில் யோகா என்றால் என்ன என்பது குறித்து முழுமையாக விளக்கப்பட்டுள்ளது.
மனநலமே உடல் நலம்
தொகுஇத்தலைப்பில் மனநலம் குறித்து விளக்கப்பட்டு அதுவே உடல் நலத்திற்கு உதவுகிறது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
யோகா- மூன்று அம்சங்கள்
தொகுயோகாவில் இருக்கும் மூன்று நிலைகளான ஆசனம், பிராணாயாமம் மற்றும் தியானம் ஆகியவை விளக்கப்பட்டுள்ளன.
ஆசனங்கள்
தொகுஉடலுக்கு வலிமையும், உள்ளத்துக்குத் தெளிவையும் அளிக்கும் நூற்றுக்கணக்கான ஆசனங்கள் இருக்கின்றன போதும் 69 ஆசனங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த ஆசனங்களில் மிக முக்கியமான ஆசனங்கள் செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதுடன் அதற்கான பலன்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
பிராணாயாமம்
தொகுபிராணாயாமம் என்கிற மூச்சுப் பயிற்சியில் 12 முறைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் முக்கியமான சில மூச்சுப் பயிற்சிகள் குறித்து விளக்கமளித்து அதனால் ஏற்படும் பயன்களும் சொல்லப்பட்டுள்ளன.
- இன்று உலகம் முழுவது பரவி வரும் யோகாசனப் பயிற்சி முறை குறித்து எளிமையாக விளக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள பயிற்சிப் படங்களில் இருப்பவர் நூலாசிரியர் கணபதி ராமகிருஷ்ணன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.