யோக நகரி ரிசிகேசு தொடருந்து நிலையம்

யோக நகரி ரிசிகேசு தொடருந்து நிலையம் (Yog Nagari Rishikesh railway station) என்பது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள ரிசிகேசு நகருக்குச் சேவை செய்யும் தொடருந்து நிலையமாகும். இது இந்திய இரயில்வேயின் வடக்கு இரயில்வே மண்டலத்தில் அமைந்துள்ளது. இதன் நிலையக் குறியீடு ஒய். என். ஆர். கே. (YNRK) ஆகும். [1] [2]

யோக நகரி ரிசிகேசு தொடருந்து நிலையம்
Yog Nagari Rishikesh railway station
இந்திய இரயில்வே
இந்திய இரயில்வே இலட்சினை
பொது தகவல்கள்
அமைவிடம்டி. எச். டி. சி. குடியிருப்பு, ரிசிகேசு, உத்தராகண்டம்
இந்தியா
ஆள்கூறுகள்30°06′36″N 78°16′41″E / 30.1099628°N 78.2780801°E / 30.1099628; 78.2780801
ஏற்றம்372 மீட்டர்கள் (1,220 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்ரிசிகேசு கர்ணபிரயாகை பாதை
லக்சார்-தேராதூன் பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைநிலையான (தரைதள நிலையம்)
தரிப்பிடம்உண்டு (கட்டணம்)
மற்ற தகவல்கள்
நிலைசெயலில்
நிலையக் குறியீடுYNRK
மண்டலம்(கள்) வடக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
கோட்டம்(கள்) மொராதாபாத்
வரலாறு
திறக்கப்பட்டது12 சனவரி 2021; 3 ஆண்டுகள் முன்னர் (2021-01-12)
மின்சாரமயம்ஒற்றை மின்மய பாதை

வரலாறு

தொகு

ரிசிகேசு-கர்ணபிரயாக் பாதை என்பது ரிசிகேசில் உள்ள யோக நகரி ரிசிகேசு தொடருந்து நிலையத்திலிருந்து கர்ணபிரயாகை வரை அமைக்கப்பட்ட புதிய தொடருந்து பாதையாகும். இந்தத் தொடருந்து பாதையானது நான்கு புனிதத் தலங்களை சோட்டா சார் தாமுடன் இணைக்க இந்திய இரயில்வே முன்மொழியப்பட்ட பாதை இதுவாகும்.[3][4][5]

அமைவிடம்

தொகு

இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள தேராதூன் மாவட்டத்தில் உள்ள ரிசிகேசில் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

அடையாளம்

தொகு

யோக நகரி ரிசிகேசு தொடருந்து நிலைய மொழியாக ஆங்கிலம், இந்தி மற்றும் சமசுகிருதம் உள்ளது. [6]

தொடர்வண்டி

தொகு

இந்திய ரயில்வே சில தொடருந்துகளை இந்நிலையத்திற்கு நீட்டித்துள்ளது.

  • கலிங்க உட்கல் விழா சிறப்பு
  • யோகா விரைவுவண்டி
  • யோக நகரி ரிசிகேசி-பிரயாக்ராஜ் சங்கம் விரைவுவண்டி
  • யோக நகரி ரிசிகேசு-ஜம்மு தாவி விரைவுவண்டி
  • உதய்பூர் சிட்டி-யோக நகரி ரிசிகேசு விரைவுவண்டி
  • டூன் விரைவுவண்டி

மேலும் பார்க்கவும்

தொகு
  • ரிஷிகேஷ் ரயில் நிலையம்
  • ரிஷிகேஷ்-கர்ணபிரயாக் கோடு

மேற்கோள்கள்

தொகு
  1. "Uttarakhand Chief Minister Thanks Centre For Rishikesh-Karnaprayag Rail Link Budget". பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  2. "Rishikesh-Karnprayag rail line: Indian Railways starts train operations from Yog Nagari Rishikesh station". பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
  3. "Chardham to get rail connectivity; Indian Railways pilgrimage linking project to cost Rs 43.29 crorework=India.com" (in en). http://www.india.com/business/chardham-to-get-rail-connectivity-indian-railways-pilgrimage-linking-project-to-cost-rs-43-29-crore-2124237/. 
  4. "Railway minister lays foundation stone for final location survey on char dham route". http://timesofindia.indiatimes.com/city/dehradun/railway-minister-lays-foundation-stone-for-final-location-survey-on-char-dham-route/articleshow/58659661.cms. 
  5. "First train arrives at Yog Nagri Rishikesh railway station". https://timesofindia.indiatimes.com/city/dehradun/first-train-arrives-at-yog-nagri-rishikesh-railway-station/articleshow/80219649.cms. 
  6. "Signage". பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.