வடக்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
வடக்கு தொடருந்து மண்டலம் (Northern Railways) இந்திய இரயில்வேயின் 18 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் புது தில்லியில் உள்ளது. இந்தியாவின் ஒன்பது பழமையான தொடருந்து மண்டலங்களுள் வடக்கு தொடருந்து மண்டலம் ஒன்றாகும், இதுவே இந்திய இரயில்வேயில் பெரிய தொடருந்து இணைப்பினைக் கொண்டுள்ளது. இது 6807 கிமீ பாதையைக் கொண்டுள்ளது.[1]. இது பின்வரும் பகுதிகளுக்கு சேவையை வழங்குகிறது. அவை சம்மு காசுமீர், பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், புதுதில்லி மற்றும் சண்டீகர்.
1-வடக்கு தொடருந்து மண்டலம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | புதுதில்லி தொடருந்து நிலையம் |
செயல்பாட்டின் தேதிகள் | 14 ஏப்ரல் 1952– |
தொழில்நுட்பம் | |
தட அளவி | Mixed |
Other | |
இணையதளம் | http://www.nr.indianrail.gov.in/ |
தற்போது இது ஐந்து கோட்டங்களை கொண்டுள்ளது.
வரலாறு
தொகுஇந்த மண்டலம் 14 ஏப்ரல் 1952லில், ஜோத்பூர் இரயில்வே, பிகானேர் இரயில்வே, கிழக்கத்திய பஞ்சாப் இரயில்வே மற்றும் கிழக்கிந்திய இரயில்வே நிறுவனத்தின் மூன்று பிரிவுகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. 3 மார்ச் 1859ல் வடக்கு இந்தியாவின் முதல் பயணிகள் இருப்புபாதை அலகாபாத்துக்கும் கான்பூருக்கும் இடையே திறக்கப்பட்டது.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ iloveindia.com. "Northern Indian Railway".
- ↑ Asiatradehub.com.com. "India – Infrastructure Railways". Archived from the original on 2008-10-16. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.