ரகோஜி போன்சலே
முதலாம் ரகோஜி போன்சலே (Raghoji I பிறப்ப்பு: 1695 - இறப்பு:1755)[2][3][4]பேரரசர் சிவாஜி பிறந்த போன்சலே குலத்தவரான ரகோஜி போன்சலே இரண்டாம் சம்பாஜி ஆட்சியின் போது மத்திய இந்தியாவில் 1739ஆம் ஆண்டில் நாக்பூர் இராச்சியத்தை நிறுவினார்.[5]ரகோஜி போன்சலே தலைமையில் மராத்திய கூட்டமைப்பு படைகள் 1741-1751 ஆண்டுகளில் வங்காளம் மீது படையெடுத்து வென்றனர்.
ரகோஜி போன்சலே | |
---|---|
சேனாதுரந்தார் சர்க்கார் சேனாசாகிப்சுபா (Senadhurandar Sarkar Senasahibsubah)[1] | |
முதால்ம் ரகோஜி போன்சலே | |
மன்னர் நாக்பூர் இராச்சியம் | |
முன்னிருந்தவர் | புதிய பதவி கோண்டு இராச்சியம் |
பின்வந்தவர் | ஜனோஜி போன்சலே |
வாரிசு(கள்) | ஜனோஜி போன்சலே மாதோஜி போன்சலே பீம்பாஜி போன்சலே சபாஜி போன்சலே |
அரச குடும்பம் | போன்சலே |
பிறப்பு | ராகுஜி போன்சலே 1695 சதாரா, மராத்தியப் பேரரசு (தற்கால மகாராட்டிரா இந்தியா) |
இறப்பு | 14 பிப்ரவரி 1755 (வயது 60) நாக்பூர், நாக்பூர் இராச்சியம், மராத்திய கூட்டமைப்பு (தற்கால மகாராட்டிரா, இந்தியா) |
சமயம் | இந்து சமயம் |
ரகோஜி போன்சலே தமது 60வது அகவையில் 14 பிப்ரவரி 1755 அன்று இறந்தார். இவருக்கு 6 மனைவிகளும் மற்றும் 7 ஆசைநாயகிகளும், 4 குழந்தைகளும் இருந்தனர். இவரது உடல் எரிக்கப்படும் போது, இவரது மனைவிகளும், ஆசைநாயகிகளும் உடன்கட்டை ஏறி இறந்தனர்.[6] இவரது வாரிசுகள் நாக்பூர் இராச்சியத்தை 1853 வரை ஆண்டனர். பின்னர் நாக்பூர் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தினர் ஆக்கிரமிப்பு செய்தனர்.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ The Cyclopedia of India: Biographical, Historical, Administrative, Commercial, Volume 3, pg. 312 [2]
- ↑ The Political History of Chhattisgarh, 1740-1858 A.D by PL Mishra pgs.38,39,88 [3]
- ↑ British Relations with the Nāgpur State in the 18th Century: An Account, Mainly Based on Contemporary English Records by Cecil Upton Wills, pages 19, 40, 186 [4]
- ↑ "Forgotten Indian history: The brutal Maratha invasions of Bengal".
- ↑ British Relations with the Nāgpur State in the 18th Century: An Account, Mainly Based on Contemporary English Records by Cecil Upton Wills, pg 16 [5]
மேற்கோள்கள்
தொகு- Hunter, William Wilson, Sir, et al. (1908). Imperial Gazetteer of India 1908-1931; Clarendon Press, Oxford.