ரங்கராஜ் பாண்டே

இந்திய ஊடகவியலாளர்

ரங்கராஜ் பாண்டே (ஆங்கில மொழி: Rangaraj Pandey), இந்தியாவிலுள்ள ஓர் ஊடகவியலாளர், நடிகர் ஆவார். தினமலர், தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் பணிபுரிந்தவர். தற்பொழுது சாணக்கியா எனும் யூடியூப் வலைத்தள செய்தி அலைவரிசையினை நடத்திவருகின்றார்.

ரங்கராஜ் பாண்டே
2016ல் விருது விழா ஒன்றில்
பிறப்பு16 நவம்பர் 1975 (1975-11-16) (அகவை 49)
திருவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்
பணிமுன்னாள் தலைமை செய்தி ஆசிரியர், தினத் தந்தி
செயற்பாட்டுக்
காலம்
1999 முதல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்டவுட் தனபாலு,
ஆயுத எழுத்து,
கேள்விக்கென்ன பதில்,
மக்கள் மன்றம்

இளமை & கல்வி

தொகு

பாண்டே தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரில் வட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார். தந்தையின் பெயர் ரகுநாதாச்சாரியர்.[1]. இவரது பெற்றோர் பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவர் திருவில்லிபுத்தூரில் உள்ள தமிழ்வழி அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் பாண்டே தனது குடும்பத்துடன் சென்னையில் குடியேறினார். 1999ல் கல்லூரி படிப்பை முடித்த பிறகு தினமலர் நாளிதழில் வேலைக்கு சேர்ந்தார்.

தொலைக்காட்சித் துறையில்

தொகு

தந்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாண்டே, பல்துறை குறித்து, பல்துறை அறிஞர்களுடன் விவாதம் செய்யும் ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச்சியும், பல்துறை ஆளுமைகளை நேர்காணல் கண்டு அவர்களின் செயல்பாடுகளில் உள்ள உண்மைத் தன்மைகள் குறித்து, பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்தும் கேள்விக்கென்ன பதில் எனும் நிகழ்ச்சியும், மக்கள் முன்னிலையில் இரு அணிகளுடன் விவாதிக்கும் மக்கள் மன்றம் நிகழ்ச்சியும் இவரின் குறிப்பிடத்தக்க பணியாகும்.[2] இவர் டிவி நிகழ்ச்சியோடு மட்டுமல்லாமல் கல்வி நிலையங்கள் மற்றும் பொது மேடைகளில் பேச்சாளராகவும் கலந்து கொள்கிறார்.[3] 2012 முதல் 2018 டிசம்பர் வரை தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.[4]தற்போது சாணக்யா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.[5]

திரைப்படம்

தொகு

சாணக்யா

தொகு

இவர் தற்போது யூடியூப்பில் சாணக்யா என்ற தனிப்பட்ட வலைப்பதிவு சேனலை நடத்துகிறார்.[8]

விருதுகள்

தொகு
ஆண்டு விருது விருதளித்தோர்
2018 சிறந்த தொகுப்பாளருக்கான விருது கலாட்டா நட்சத்திர விருதுகள்[9]

மேற்கோள்கள்

தொகு
  1. http://www.veethi.com/india-people/rangaraj_pandey-profile-5482-22.htm
  2. "The 'unflappable' Arnab Goswamis of the South: Meet news anchors setting TRPs afire" (in en). Hindustan Times. 2017-01-21. https://www.hindustantimes.com/india-news/the-unflappable-arnab-goswamis-of-the-south-meet-news-anchors-setting-trps-afire/story-hjXNp4PW9PSHaNlpvYtkzL.html. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-11. பார்க்கப்பட்ட நாள் 2017-11-28.
  4. "‘இளைஞர்களுக்கு வழிவிடும் முயற்சி’ - ராஜினாமா குறித்து ரங்கராஜ் பாண்டே விளக்கம்". விகடன். https://www.vikatan.com/news/tamilnadu/144369-senior-journalist-rangaraj-pandey-has-quits-editor-chief-in-thanthi-tv.html. பார்த்த நாள்: 17 டிசம்பர் 2018. 
  5. அஜித்துடன் நடித்த அனுபவம்: மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே. தி ஹிந்து தமிழ் இதழ். 22 மார்ச் 2019. {{cite book}}: Check date values in: |year= (help)
  6. Upadhyaya, Prakash (2019-03-13). "Nerkonda Paarvai: Journalist Rangaraj Pandey to play this role in Ajith-starrer". International Business Times, India Edition (in english). பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Rangaraj Pandey on board for 'Ka Pae Ranasingam'!". Sify. Archived from the original on 2020-05-13. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
  8. "ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா சேனல் மீண்டும் முடக்கம்: காரணம் என்ன?". Indian Express Tamil. பார்க்கப்பட்ட நாள் 2021-12-08.
  9. "Rangaraj Pandey winning Most Talked about host". கலாட்டா. பார்க்கப்பட்ட நாள் 17 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கராஜ்_பாண்டே&oldid=3678832" இலிருந்து மீள்விக்கப்பட்டது