ரசிகர் மன்றம் (2007 திரைப்படம்)
ரசிகர் மன்றம் (Rasigar Mandram) என்பது 2007 ஆம் ஆண்டு, புகழேந்தி தங்கராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இந்த படத்தில் உமா, கணேஷ், கோகுல் கிருஷ்ணா, பானு, மன்சூர் அலி கான், பாபு கணேஷ், ஜாகுவார் தங்கம், மதன் பாப், போஸ் வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். டி. வெள்ளையன் தயாரிப்பில், எஸ். பி. பூபதி இசை அமைப்பில், 25 மே 2007 ஆம் ஆண்டு வெளியானது.[1]
சிகர் மன்றம் | |
---|---|
இயக்கம் | புகழேந்தி தங்கராஜ் |
தயாரிப்பு | த.வெள்ளையன் |
கதை | புகழேந்தி தங்கராஜ் |
இசை | எஸ்.பி.பூபதி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எஸ்.தினேஷ்குமார் |
படத்தொகுப்பு | எம்.என்.ராஜா |
கலையகம் | தாய் மூவி மேக்கர்ஸ் |
வெளியீடு | மே 25, 2007 |
ஓட்டம் | 120 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
தொகுரமேஷ்காந்த் (மன்சூர் அலி கான்) மற்றும் சத்யா (பாபு கணேஷ்), இருவரும் தமிழ் சினிமாவில் புகழ் பெரும் நடிகர்கள். ரமேஷ்காந்தின் தீவிர ரசிகன் மற்றும் மன்றத்தலைவன் கதிர் (கணேஷ்) ஆவான். சத்யாவின் தீவிர ரசிகன் மற்றும் மன்றத்தலைவன் பாண்டியன் (கோகுல் கிருஷ்ணா) ஆவான். அந்த ஊருக்கும் பள்ளி இசை ஆசிரியையாக வரும் பாரதி (உமா), சினிமா ரசிகர் மன்றம் இருப்பதை கண்டு வியப்படைகிறாள்.
அரசு ஒப்புதலுடன், வெளிநாட்டு நீர் நிறுவனம் ஒன்று அந்த கிராமத்தில் நீர் எடுக்கிறது. இவ்வாறு நீரை எடுத்துவிட்டால் கிராமமே வறண்ட பூமியாக மாறி, நீரில்லாமல் பாலைவனமாக மாறிவிடும் என்று பாரதி ஊர் மக்களுக்கு புரியவைக்க, மக்கள் ஒன்று கூடி அதை எதிர்த்து போராடுகிறார்கள். அதில் இரு ரசிகர் மன்ற உறுப்பினர்களும் இருந்தனர். கதிரையும் பாண்டியனையும் அமைதியாக போராடும்படி கேட்டுக்கொண்டாள் பாரதி. கடந்த காலத்தில், கதிரின் தங்கைக்கும் பாண்டியனுக்கும் நிச்சயமான திருமணம், கதிரும் பாண்டியனும் சண்டையிட்டதால், திருமணம் நின்றுபோனது.
உள்ளூர் அரசியல்வாதி பீதாம்பரத்திற்கு அந்த வெளிநாட்டு நிறுவனம் பணம் தருவதால், அந்த போராட்டத்தை நிறுத்த திட்டம் தீட்டினார். பின்னர், அந்த இரு ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தி, சண்டையை தூண்டுகிறார் பீதாம்பரம். கலவரத்திற்கு பின், ரசிகர் மன்றத்திற்கு பதிலாக பள்ளிக்கூடம் கட்ட அறிவுரை கூறுகிறாள் பாரதி. கதிரும் பாரதியும் ஒருவரையொருவர் விரும்பினர். அவ்வாறாக ஒரு நாள், சத்யாவின் புதுப்பட பூஜைக்கு பாண்டியன் சென்றபொழுது, பாண்டியனின் தாய் உடல்நலக்குறைவால் இறந்துவிடுகிறார். பின்னர், என்னவானது என்பதே மீதிக் கதையுமாகும்.
நடிகர்கள்
தொகு- உமா
- கணேஷ்
- கோகுல் கிருஷ்ணா
- பானு,
- மன்சூர் அலி கான்
- பாபு கணேஷ்
- ஜாகுவார் தங்கம்
- மதன் பாப்
- போஸ் வெங்கட்
- சாய்ரா பாபு
- செல்லா
- அருள்மணி
- ஸ்ரீலதா
- தேனீ முருகன்
- ரகுராஜ்
- சுஜா வருநீ
ஒலிப்பதிவு
தொகுஇந்தப் படத்தின் பின்னணி மற்றும் பாடல்களின் இசையை அமைத்தது எஸ். பி. பூபதி ஆவார். கபிலன், பி. கிருஷ்ணன், கதிர்மொழி மற்றும் பரதன் எழுதிய பாடல்கள் 2007 ஆம் ஆண்டு வெளியானது.[2]
பாடல்களின் பட்டியல்
தொகு- மாயாஜாலக்காரி
- நிலவே
- தப்பாதது அடிக்கையிலே
- வாராரு வாராரு
- ஆகாயமே இங்கு வந்து
வரவேற்பு
தொகுசினிமா துறையில் இருக்கும் தவறுகளை காட்டும் படமாக இருந்தாலும், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க இயக்குனர் தவறியதாகவும், நல்ல கருத்தை வெளிப்படுத்த முற்பட்டும் பல இடங்களில் இயக்குனர் தோல்வி அடைந்ததாகவும், படத்தின் கதை மந்தமாக இருந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Actress Uma to enter wedlock!!". Behindwoods.com. 30 May 2006. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.
- ↑ "Rasigar Mandram (2007)". mio.to. பார்க்கப்பட்ட நாள் 3 May 2018.