முக்தா (நடிகை)

இந்திய நடிகை

முக்தா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரை பானுமதி, பானு என்ற பல பெயர்களிலும் அழைக்கின்றனர்.

குடும்பம்

தொகு

முக்தா 2015 ஆம் ஆண்டு பிரபல மலையாள தொகுப்பாளினி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு 2016 ஆம் ஆண்டு கியாரா என்ற பெண்குழந்தை பிறந்தது. ரிங்கு டோமி சொந்தமாக ஒரு அழகு நிலையமும் நடத்தி வருகிறார். முக்தா கணவர் குழந்தையுடன் கேரளாவில் வசித்து வருகின்றார்.

தமிழ் திரையுலகம்

தொகு

முக்தா 2007 இல் ஹரி என்பவர் எழுதி இயக்கிய தாமிரபரணி திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். தாமிரபரணியில் விஷாலுடன் பானுமதி சரவணப்பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் பானுமதி என திரையுலகில் அறியப்படுகிறார்.

இவர் 2009 இல் அழகர் மலை திரைப்படத்தில் ஆர்கே நாயகியாக நடித்துள்ளார். இதனை எஸ். பி. இராஜ்குமார் இயக்கியிருந்தார். 2013 இல் எழில் இயக்கத்தில் வெளிவந்த தேசிங்குராஜா திரைப்படத்தில் விமலுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

திரைப்படவியல்

தொகு
List of Muktha film credits
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2005 ஓட்ட நாணயம் சின்னு மலையாளம் அறிமுகம்
2006 அச்சன் உறங்காத வீடு (திரைப்படம்) லிசம்மா மலையாளம்
போட்டோ பானு தெலுங்கு மொழி
2007 தாமிரபரணி (திரைப்படம்) பானுமதி சரவணபெருமாள் தமிழ் பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
கோல் மரியா மலையாளம்
ரசிகர் மன்றம் (2007 திரைப்படம்) கவிதா தமிழ்
நஸ்ராணி அன்னி மலையாளம்
2009 ஹைலேசா சாலினி மலையாளம்
காஞ்சிபுரத்தே கல்யாணம் மீனாட்சி மலையாளம்
அழகர் மலை ஜனனி தமிழ்
2010 அவன் மல்லிகா மலையாளம்
ஹாலிடேஷ் ஜேனட் மலையாளம்
சாவர்படா கோபிகா மலையாளம்
கிலாஃபத் மலையாளம்
2011 சட்டப்படி குற்றம் (திரைப்படம்) பூரணி தமிழ்
பொன்னர் சங்கர் (திரைப்படம்) தமிழ் சிறப்புத் தோற்றம்
சிவபுரம் மலையாளம்
தி பிலிம்ஸ்டார் கௌரி மலையாளம்
தெம்மாடி பிராவு மலையாளம்
2012 ஈ திரைக்கினிடையில் சாவித்திரி மலையாளம்
மாந்திரிகன் ருக்கு மலையாளம்
புதுமுகங்கள் தேவை பிந்துதாரா தமிழ்
2013 இம்மானுவேல் ஜெனிபர் மலையாளம்
மூன்று பேர் மூன்று காதல் மல்லிகா தமிழ்
தேசிங்கு ராஜா (திரைப்படம்) அவராகவே தமிழ் பாடலுக்கு நடனம்
ஜிஞ்சர் ரூபா மலையாளம்
2014 டார்லிங் பூரணி கன்னடம்
ஆங்கிரி பேர்ட்ஸ் இன் லவ் நேர்காணல் செய்பவர் மலையாளம்
ஓர்மையுண்டோ ஈ முகம் ஹேமா மலையாளம்
2015 யூ டூ ப்ரூட்டஸ் ஆன்சி மலையாளம்
சிறகொடிஞ்ச கிணவுகள் நடனமங்கை மலையாளம் சிறப்புத் தோற்றம்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க சீமா தமிழ்
சுகமாயிரிக்காட்டே சீறிலட்சுமி மலையாளம்
2016 வாய்மை ஜானவி தமிழ்
2017 பாம்பு சட்டை (2017 திரைப்படம்) சிவானி தமிழ்
சகுந்தலாவின் காதலன் தமிழ்
2023 குருவி பாப்பா மலையாளம் படப்பிடிப்பில்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_(நடிகை)&oldid=4114334" இலிருந்து மீள்விக்கப்பட்டது