ரசிக்பீல் ஏரி

இரசிக்பீல் (Rasikbil), இரசிக்பில் இந்தியாவில் மேற்கு வங்கத்தில் கூச் பெகார் மாவட்டத்தில் உள்ள சிறிய ஏரியாகும். இதற்கு மிக அருகில் அமைந்த நகரம் வட காமாக்கியகுறி ஆகும்.[1][2]

ரசிக்பீல் ஏரி
Rasikbil
அமைவிடம்கூச் பெகர் மாவட்டம், மேற்கு வங்காளம்
வடிநில நாடுகள் இந்தியா
இரசிக்பீல் காட்சிக் கோபுரம்

விலங்குகள்

தொகு

இந்த ஏரி ஏராளமான பறவைகளை ஈர்க்கும் வகையில், ஏரிக்கு அருகிலுள்ள மரங்களில் கூண்டுகளை உருவாக்குகிறது. ஏரியருகில் வாழும் பறவை இனங்களாக, நீர்க்காகம், பல்வேறுவகைப் பெருநாரைகள், அரிவாள் மூக்கன், துடுப்பு வாயன், மீன்கொத்தி, கிளிகள், ஆந்தைகள் ஆகியன உள்ளன. ஏரிக்கு அருகில் ஒரு மான் பூங்காவும் முதலை மறுவாழ்வு மையமும் உள்ளன. மேலும் இங்கே ஒரு சிறுத்தை வீடும், ஒரு பாம்பு வீடும் பறவை கூண்டுகளும் ஓர் ஆமை காப்பிடமும் உள்ளன. மேலும், பறவை இனங்களில் சிறிய சீழ்க்கைச் சிரவி, கிளுவை, வெண்கண் வாத்து, செந்தலை வாத்து, நாமத்தலை வாத்து, தட்டை வாயன்l, நாமத்தலை வாத்து, சாம்பல் தலை ஆள்காட்டி, கொண்டை ஆள்காட்டி, கார்வெண் மீன்கொத்தி, தடித்த அலகு மீன்கொத்தி, சிறு நீல மீன்கொத்தி, சின்ன நீர்க்காகம், பெரிய நீர்க்காகம், கருவால் வாத்து ஆகியன உள்ளடங்கும்.

இருப்பிடம்

தொகு

இரசிக்பீல் கூச் பெகார் மாவட்டம், துபங்கஞ்சு உட்கோட்டத்தில் உள்ளது. மிக அருகில் அமைந்த நகரம் வட காமாக்கியகுறி ஆகும். இது இந்நகரில் இருந்து 7.5 கிமீ தொலைவில் உள்ளது. இதற்கு மிக அருகில் உள்ள தொடருந்து நிலையம் காம்மாக்கியகுறி தொடருந்து நிலையம் ஆகும்.

காட்சிமேடை

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசிக்பீல்_ஏரி&oldid=4102542" இலிருந்து மீள்விக்கப்பட்டது