ரஞ்சித்சிங் திசாலே
ரஞ்சித்சிங் திசாலே (Ranjitsinh Disale) (பிறப்பு:5 ஆகஸ்டு 1988), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியரும், 3 டிசம்பர் 2020 அன்று வர்க்கி அறக்கட்டளை வழங்கும் 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள உலக ஆசிரியர் பரிசு வென்ற ஐந்தாவது நபர் ஆவார்.[2] இவர் தனக்கு வழங்கப்பட்ட 1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையில், 50% தொகையை, போட்டியில் தன்னுடன் பங்கேற்ற 9 போட்டியாளர்களுக்கு, தலா 55,000 டாலர் வீதம் பகிர்ந்து அளித்தார்.[3][4]
ரஞ்சித்சிங் திசாலே | |
---|---|
ரஞ்சித்சிங் திசாலேவின் ஓவியம் | |
பிறப்பு | ஆகத்து 5, 1988 பரிதேவாடி, சோலாப்பூர் மாவட்டம், மகாராட்டிரா |
தேசியம் | இந்தியர் |
பணி | பள்ளி ஆசிரியர் |
அறியப்படுவது | உலக ஆசிரியர் பரிசு வென்றவர் [1] |
கல்வி & தொழில்
தொகுமகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பரிதேவாடி எனும் கிராமத்தில் பிறந்தவர் இரஞ்சித்சிங் திசாலே. பள்ளி இறுதித் தேர்வில் வென்ற இரஞ்சித்சிங் திசாலே ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தார்.[5] ஆசிரியர் பயிற்சி முடித்த இரஞ்சித்சிங் திசாலே உருவாக்கிய புதுமையான கற்பித்தல் படைப்புகளுக்கு நன்கு அறியப்பட்டவர். அவர் நிறுவிய கல்வி மற்றும் அறிவியல் ஆய்வகத்திலிருந்து, அறிவியல் பரிசோதனைகளை நிரூபிப்பது மற்றும் கியூ. ஆர். குறியீடுகளைக் கொண்டு முதன்மை வகை புத்தகங்களை படிப்பதற்கும், அவரது கிராமப்புற பள்ளி மாணவர்கள் ஆடியோ கவிதைகள், வீடியோ விரிவுரைகள், பணிகள் மற்றும் கதைகளின் இணைப்புகளைப் பெறவும் முடிந்தது.
பள்ளிப்பாட நூல்களை கியூ. ஆர். குறியீடுகள் மூலம் கிராமப்புற பள்ளி மாணவர்கள் அலைபேசி மூலம் எளிதாக படிக்கும், இவரது கருத்தாக்கத்த்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஏற்றுகொண்டு பள்ளிப்பாட நூல்களை படிக்கும் முறையை நடைமுறைப்படுத்தினர்.[5][6] இவரது கிராமத்தில் சிறுமிகளின் திருமணங்களை ஒழிப்பதற்கும், சிறுமிகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கும் அவர் பிரச்சாரம் செய்தார்.[5]
விருதுகள்
தொகுஆண்டு | விருதின் பெயர் | முடிவு | விருது அளிப்பவர் | Ref. |
---|---|---|---|---|
2016 | புதுமையான ஆய்வாளர் | வெற்றியாளர் | இந்திய அரசு | |
2018 | புதுமைப்பித்தன் விருது | வெற்றியாளர் | தேசிய புதுமையாளர்கள் அறக்கட்டளை, இந்தியா | |
2020 | உலக ஆசிரியர் பரிசு | வெற்றியாளர் | வர்க்கி அறக்கட்டளை | [7][8][9] |
மேற்கோள்கள்
தொகு- ↑ சர்தேச சிறந்த ஆசிரியர் விருது பெற்ற இரஞ்சித்சிங் திசாலே
- ↑ DelhiDecember 4, India Today Web Desk New. "Govt school teacher Ranjitsinh Disale wins Global Teacher Prize, makes history by sharing half with other finalists" (in en). India Today. https://www.indiatoday.in/education-today/news/story/govt-school-teacher-ranjitsinh-disale-wins-1-million-usd-global-teacher-prize-1746709-2020-12-04.
- ↑ "Ranjitsinh Disale 2020 -The 2020 Global Teacher Prize winner". Global Teacher Prize (in ஆங்கிலம்). Archived from the original on 10 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Maharashtra teacher Ranjitsinh Disale wins 2020 Global Teacher Prize, rewarded over Rs 7 crore". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ 5.0 5.1 5.2 "Govt school teacher Ranjitsinh Disale wins Global Teacher Prize, makes history by sharing half with other finalists". இந்தியா டுடே (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Maharashtra zilla parishad educator first in India to win $1-million teacher prize". ஹிந்துஸ்தான் டைம்ஸ் (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "To Sir With Love - Winner of $1 million teacher prize changed girls' lives in India" (in en). Reuters. 2020-12-04. https://www.reuters.com/article/us-education-global-prize-idUSKBN28D27J.
- ↑ "Indian Teacher Wins The 'Global Teacher Prize'". Transcontinental Times (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-12-06. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Maharashtra Zilla Parishad teacher makes it to top 50 of global prize - Times of India". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.