ரடகாஸ்ட்டு
ரடகாஸ்ட்டு த பிரவுன் (ஆங்கில மொழி: Radagast the Brown) என்பவர் ஆங்கில எழுத்தாளர் ஜே. ஆர். ஆர். டோல்கீன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கனவுருப்புனைவு கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் 1937 ஆம் ஆண்டில் வெளியான த காபிட்டு என்ற புதின புத்தகத்தில் காண்டால்ப்பின் மந்திரவாதி மற்றும் கூட்டாளி ஆக தோன்றினார். அவரது பங்கு டோல்கீனின் எழுத்துக்களில் மிகவும் சிறியது, இது ஒரு சதி சாதனம் என்று விவரிக்கப்பட்டது.[1]
ரடகாஸ்ட்டு த பிரவுன் | |
---|---|
ஜே. ஆர். ஆர். டோல்கீன் கதை மாந்தர் | |
தகவல் | |
Book(s) | த காபிட்டு (1937) |
இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக இயக்குனர் பீட்டர் ஜாக்சனின் இயக்கத்தில் த காபிட்டு திரைப்படத் தொடரில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரத்தில் நடிகர் 'சில்வெஸ்டர் மெக்காய்'[2] என்பவர் நடித்தார். இவரது கதாபாத்திரத்தின் முக்கிய கூறுகள் - விலங்குகளுடன் தொடர்புகொள்வது, மூலிகைகள் மூலம் திறமை மற்றும் அவரது வடிவத்தையும் டோல்கீனின் படைப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவரின் கதாபாத்திரம் டோல்கீனின் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ரோல்-பிளேயிங் நிகழ்ப்பட ஆட்டத்தில் தோன்றியது.
சான்றுகள்
தொகு- ↑ Prospero (11 December 2012). "An unexpected disappointment". The Economist. https://www.economist.com/prospero/2012/12/11/an-unexpected-disappointment.
- ↑ "Sylvester McCoy is Radagast the Brown". Filmonic. 27 October 2010. Archived from the original on 4 October 2011. பார்க்கப்பட்ட நாள் 3 April 2011.