ரத்னசாமி காளிங்கராயர்

ரத்னசாமி காளிங்கராயர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

இவர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் உள்ள செம்மங்குடி வட்டத்தில் அமைந்த புளிச்சகாடி கிராமத்தில் 1897 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை எஸ். கோவிந்தசாமி காளிங்கராயர் ஆவார்.

இந்திய விடுதலைப் போராட்டம்

தொகு

1928 இல் இந்திய விடுதலை இயக்கத்தில் சேர்ந்தார். மார்ச்சு 12, 1930 இல் உப்புச் சத்தியாகிரகம் அல்லது தண்டி நடைப்பயணம் அல்லது தண்டி யாத்திரை (Salt March) என்பது காலனிய இந்தியாவில் ஆங்கிலேயர் இந்தியர்கள் மீது விதித்த உப்பு வரியை அறவழியில் எதிர்க்கும் திட்டமிட்ட போராட்டமாகும். மகாத்மா காந்தி தண்டியில் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் போன்று, தமிழ்நாட்டின் வேதாரண்யக் கடலில் உப்பு அள்ளும் போராட்டமாக 13 ஏப்ரல் 1930 அன்று வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது. இதில் இவர் உப்பு சத்தியாகிரகம் மற்றும் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்றார்.

1941 ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாகிரகம் மற்றும் 1948 ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கம் போராட்டத்தில் பங்கேற்றார். ஆங்கிலேய அரசால் நீதிமன்ற சிறைவாசம் 2 மாதங்கள் 18 நாட்கள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மற்றும் அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டு இறந்தார். [1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Who S Who Of Freedom Fighters Vol 2. GOVERNMENT OF TAMIL NADU.
  2. Thanjavur Mavattam.
  3. Who's Who Of Freedom Fighters Tamil Nadu. GOVERNMENT OF TAMIL NADU.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னசாமி_காளிங்கராயர்&oldid=4137271" இலிருந்து மீள்விக்கப்பட்டது