ரபினா கான்
ரபினா கான் (Rabina Khan வங்காள மொழி: রবিনা খান ; பிறப்பு 15 செப்டம்பர் 1972) ஒரு வங்காளதேசத்தில் பிறந்த பிரித்தானிய எழுத்தாளர், அரசியல்வாதி, வீட்டு வசதி முன்னாள் அமைச்சரவை உறுப்பினர் மற்றும் ஆயிஷாவின் ரெயின்போ நூலின் ஆசிரியர் ஆவார் . 2015 ஆம் ஆண்டில் இவர் டவர் ஹேம்லெட்ஸ் மேயர் தேர்தலில் தோல்வியுற்றார். இவர் டவர் ஹேம்லெட்களின் மக்கள் கூட்டணியின் தலைவராக இருந்தார், ஆனால் ஆகஸ்ட் 29, 2018 இல் லிபரல் டெமக்ராட்சுவில் சேர்ந்தார்.[1][2][3]
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவரின் தந்தை கென்டில் உள்ள சாதம் கப்பல்துறைகளில் இயந்திர இயக்குனராகப் பணிபுரிந்தார். இவர் திருமணம் செய்ய வங்காளதேசம் திரும்பினார். கான் வங்காளதேசத்தின் சில்ஹெட் மாவட்டத்தில் பிறந்தார். தனது மூன்று வயதில் தனது தாயால் இங்கிலாந்துக்கு அழைத்து வரப்பட்டார்.[4] கான் கென்ட்டின் ரோசெஸ்டரில் வளர்ந்தார்.[5] ஐந்து உடன் பிறப்புகளில் இவர் மூத்தவர் ஆவார். இவருக்கு ஒரு சகோதரனும் மூன்று சகோதரிகளும் உள்ளனர்.
1992 ஆம் ஆண்டில், தனது 19 வயதில் கல்வியினை நிறைவு செய்த பின்னர் பயிற்சி ஆசிரியரான அமினூர் ரஷீத் கான் எனபவரைத் திருமணம் செய்தார். மேலும் லண்டனின் டவர் ஹேம்லெட்டில் இவர் குடிபெயர்ந்தார்.[4][6] 22 வயதில், கான் ஹிஜாப் அணியத் துவங்கினார்.
சமூக பணி
தொகு1991 ஆம் ஆண்டில் தனது முதல் பணியினைப் பெற்றார்.[5] லண்டனின் கிழக்கு முனையில் உள்ள டவர் ஹேம்லெட்ஸ் ஆஃப் டாக்ஸ் என்ற இடத்தில் கான் ஒரு சமூக மீளுருவாக்க தொழிலாளராகப் பணியாற்றியுள்ளார் இவர் சமூக மற்றும் கல்வித் துறைகளில் டவர் ஹேம்லெட்ஸ் கவுன்சிலுக்காகவும், பெத்னல் கிரீன் சிட்டி சேலஞ்ச் போன்ற அரசாங்க மீளுருவாக்க முயற்சிகளுக்காகவும் பனியாற்றியுள்ளார். மேலும் இவர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கான கல்வி மற்றும் அதிகாரமளித்தல் போன்ற திட்டங்களை நிர்வகிப்பதற்காகவும் பணியாற்றியுள்ளார். டவர் ஹேம்லெட்களில் சமூக மேம்பாட்டு முயற்சிகளிலும் இவர் ஈடுபட்டுள்ளார்.[6][7]
அக்டோபர் 2012 இல், கான் பிபிசி வானொலி 4 இல் பன்முக கலாச்சாரத்தை மறுவரையறை செய்வது எனும் தலைப்பில் இவர் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொன்டார்.[5]
அரசியல் வாழ்க்கை
தொகுமே 2010 டவர் ஹேம்லெட்ஸ் கவுன்சில் தேர்தலில், தொழிலாளர் கட்சி சார்பாக ஷாட்வெல் தொகுதில் கான் ஒரு இடத்தை வென்றார்.[8] அக்டோபர் 2010 ஆம் ஆண்டில் இவர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேயரினை ஆதரித்தனால் தொழிலாளர் கட்சியில் இருந்து இவர் உட்பட ஒன்பது கவுன்சிலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.[9] 2015 ஆம் ஆண்டில் இவர் டவர் ஹேம்லெட்ஸ் மேயர் தேர்தலில் தோல்வியுற்றார். இவர் டவர் ஹேம்லெட்களின் மக்கள் கூட்டணியின் தலைவராக இருந்தார், ஆனால் ஆகஸ்ட் 29, 2018 இல் லிபரல் டெமக்ராட்சுவில் சேர்ந்தார்.
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
தொகுகானுக்கு டவர் ஹேம்லெட்ஸ் சிவிக் விருது வழங்கப்பட்டுள்ளது.[6][10] 2010 ஆம் ஆண்டில், இவர் ஐரோப்பிய முஸ்லீம் பெண்கள் செல்வாக்கு விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.[11] அக்டோபர் 2014 இல், ஆண்டின் சிறந்த நாயகி விருது வழங்கப்பட்டது.
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுகான் ஒரு முஸ்லீம் ஆவார். இவர் வங்காள மொழியில் பேசும் திறன் கொண்டவர் ஆவார். இவர் தனது கணவர் அமினூர், மூன்று குழந்தைகள் மற்றும் மாமியார் ஆகியோருடன் லண்டனின் வைட் சேப்பலில் வசித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டில் கானின் தந்தை இறந்தார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Cllr Rabina Khan chooses different path to join Liberal Democrats". lovewapping.org. 29 August 2018 இம் மூலத்தில் இருந்து 26 மே 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190526082922/http://lovewapping.org/2018/08/cllr-rabina-khan-chooses-different-path-to-join-liberal-democrats/. பார்த்த நாள்: 29 August 2018.
- ↑ "Rabina Khan". London Liberal Democrats. Archived from the original on 2019-05-18. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
- ↑ "Interview: Rabina Khan". Novara Media. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
- ↑ 4.0 4.1 Kemp, Charlotte (29 August 2009). "The veil should not be a barrier between women". http://www.thenational.ae/arts-culture/the-veil-should-not-be-a-barrier-between-women#full.
- ↑ 5.0 5.1 5.2 "Rabina Khan: Redefining Multiculturalism". Four Thought. BBC Radio 4. 17 October 2012. பார்க்கப்பட்ட நாள் 3 December 2012.
- ↑ "Author profile: Rabina Khan". Fore-word Press Ltd. 2005. பார்க்கப்பட்ட நாள் 1 May 2012.
- ↑ "Election results for Shadwell". Tower Hamlets Council. 6 May 2010. பார்க்கப்பட்ட நாள் 1 June 2015.
- ↑ 5Pillars (2015-05-01). "Rabina Khan chosen by Lutfur Rahman to run for mayor of Tower Hamlets". 5Pillars. பார்க்கப்பட்ட நாள் 2019-05-26.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ "author Rabina Khan". fore-word press. பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.
- ↑ "Rabina Khan". MBA Literary Agents. Archived from the original on 3 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 3 December 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)