ரபீந்திர பாரதி அருங்காட்சியகம்

ரபீந்திர பாரதி அருங்காட்சியகம், இந்தியாவின், மேற்கு வங்காள மாநிலத்தின் தலை நகரமான கொல்கத்தாவில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும். இது, ரபீந்திரநாத் தாகூர் பிறந்த வீடான, 200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த, "சொராசாங்கோ தாகூர்பாரி" என அழைக்கப்படும் கட்டிடத்தில் அமைந்துள்ளது. தாகூரின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின்போது இந்த வீட்டைக் கையகப்படுத்திய மேற்கு வங்க அரசு இந்த அருங்காட்சியகத்தை நிறுவியது.. தாகூருடன் தொடர்புள்ள பொருட்களைக் காட்சிக்கு வைத்துள்ள இந்த அருங்காட்சியகத்தை 1961 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று அப்போதைய இந்தியப் பிரதமரான ஜவகர்லால் நேரு திறந்து வைத்தார்.

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களில், ரத்தீந்திரநாத் தாகூரிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட, ரபீந்திரநாத் தாகூரின் 40 மூல ஓவியங்களும் அடங்குகின்றன. இவற்றுடன் தேசிய நூலகம் கொடுத்த 100 நிழற்படங்களும், பல்வேறு பெறுமதி மிக்க ஆவணங்களும், வேறு பல பொருட்களும் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகம் தற்போது ரபீந்திர பாரதி பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியாக இயங்கிவருகிறது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

வெளியிணைப்புக்கள்தொகு