இரமண மகரிசி

(ரமண மகரிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரமண மகரிசி (Ramana Maharshi) (ஒலிப்பு:இரமண மஹரிஷி) (டிசம்பர் 30, 1879 - ஏப்ரல் 14, 1950) தமிழகத்தைச் சேர்ந்த ஆன்மீகவாதி ஆவார். அத்வைத வேதாந்த நெறியை போதித்த இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்தவர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள, ரமண ஆசிரமம் உலகப் புகழ் பெற்றதாகும்.

இரமண மஹரிஷி
ஸ்ரீ இரமண மகரிஷி தனது 60 ஆம் வயதின் பிற்பகுதியில்
பிறப்புதிசம்பர் 30, 1879(1879-12-30)
திருச்சுழி, விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு14 ஏப்ரல் 1950(1950-04-14) (அகவை 70)
ஸ்ரீ ரமண ஆசிரமம், திருவண்ணாமலை, தமிழ்நாடு, இந்தியா
இயற்பெயர்வெங்கடராமன் அய்யர்
தேசியம்இந்தியர்
சமயம்இந்து
பெற்றோர்சுந்தரம் ஐயர்
அழகம்மாள்
தத்துவம்அத்வைதம்
குருஅருணாச்சலம்
இலக்கிய பணிகள்நான் யார்? ("Who am I?")
அருணாச்சலத்திற்கு ஐந்து பாடல்கள்

இளமைக்காலம்தொகு

 
இளம்வயதில் எடுக்கப்பட்ட வெங்கடராமன் புகைப்படம்

இவர் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 1879ம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் நாள் சுந்தரம் ஐயர், அழகம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு நாகசுவாமி என்கிற மூத்த சகோதர் உண்டு. இவரது இயற்பெயர் வெங்கடராமன் அய்யர் ஆகும். இவர் மதுரையில் ஸ்காட் நடுநிலைப் பள்ளியில் கல்வி பயின்றார்.

ஆன்மீக நாட்டம்தொகு

ஒருமுறை உறவுமுறைப் பெரியவர் ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து வந்திருக்க அவர் வாயிலாகத் திருவண்ணாமலை பற்றிய ஆவல் அதிகரித்தது. பின்னர் பெரியபுராணம் போன்ற நூல்களைப் பயின்று வர, இறையடியார்கள் மீதும், இறைவனைப்பற்றி அறிதலிலும் நாட்டம் ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பழக்கமும் ஏற்பட்டது. அவரது 17ஆம் அகவையில் மதுரையிலிருந்த அவருடைய சிற்றப்பா வீட்டில் ஒருநாள் திடீரென ஒரு மரண அனுபவம் அவருக்குக் கைகூடிற்று. அவ்வனுபவத்தில் மரணிப்பது எது? உடல் தானே மரணிக்கின்றது. நான் மரணிப்பவன் அல்லன். ஆகவே உண்மையான நான் யார் என விசாரித்து நான் உடலல்லன், ஆன்மா என்ற உண்மையை அறிந்தார். இந்த ஆன்மாவே எல்லாம் வல்ல பரம்பொருளாயிருக்க வேறொன்றும் இல்லாத நிலையில் எல்லாவற்றையும் அறிந்து தெளிந்தார்.

இவ்வாறு ஆன்மிகத் தெளிவு பெற்ற பின் தன் சுற்றமெல்லாந் துறந்துவிட்டு இரயில் ஏறித் திருவண்ணாமலையை வந்தடைந்தார். அங்கு திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயத்தில் சிறிது காலம் தியானம் செய்தார். பின்னர் சிறுபிள்ளைகளின் விசமச் செய்கைகளினால் அங்கிருந்த பாதள லிங்கத்தினருகில் சென்று தியானத்தமர்ந்தார். பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் திருவண்ணாமலையடிவாரத்தில் தங்கினார். அங்கேயே ரமணாச்சிரமம் உருவானது. இவரது சீடர்களில் ஒருவரான காவ்ய கண்ட கணபதிமுனி என்ற சமஸ்கிருத பண்டிதர் ஒருவராலேயே இவருக்கு ”இரமண மஹரிஷி” எனப் பெயர் சூட்டப்பட்டது. அதுவரை அவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்தனர்.

முதுகில் புற்று நோயால் ஏற்பட்ட கட்டியை மயக்க மருந்து எதுவும் இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்ற அனுமதி அளித்தார். இவர் மறைந்தது 1950இல்

உபதேசங்கள்தொகு

ரமணரின் முக்கியமான உபதேசம் 'நான் யார்' என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிதல் அல்லது முக்தி பெறுதலே இவ்வழியின் நோக்கம். உபநிடதங்கள் மற்றும் அத்வைத வேதாந்த நெறிகள் ஆகியவற்றின் சாரத்தினை இவரது உபதேசங்களில் காணலாம். இவரது உபதேசங்களின் தொகுப்பான 'நான் யார்?' என்ற புத்தகம் முதன்மையானதாகும்.

ஆதி சங்கரரின் ஆக்கமான 'ஆத்ம போதம்' தனை தமிழில் வெண்பாக்களாக ரமணர் வழங்கியுள்ளார்.

ஒரு பொருளைத் தியானிப்பது என்பது ஒருபோதும் உதவாது. தியானிப்பவனும் தியானிக்கப்படும் பொருளும் ஒன்றே என்பதை உணரவேண்டும். அதனைப் பயில்க. தியானிக்கப்படும் பொருள், நுண்மையாக இருந்தாலும் சரி - ஒன்றான தன்மையை அழிந்து நாமே இருமையை உருவாக்குகிறோம்.[1]

இரமண ஆசிரமம்தொகு

 
ஸ்ரீ ரமண ஆசிரமத்தின் நுழைவாயில்

பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிசி, 1922 இல் அவரது தாயின் மறைவிற்குப் பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிசி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

தமிழ்ப் படைப்புகள் பட்டியல்தொகு

 • உபதேச உந்தியார்
 • உள்ளது நாற்பது
 • உள்ளது நாற்பது அனுபந்தம்
 • ஏகான்ம பஞ்சகம்
 • ஆன்ம வித்தை
 • உபதேசத் தனிப்பாக்கள்
 • ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை
 • ஸ்ரீ அருணாசல அஷ்டகம்
 • நான் யார்?
 • விவேகசூடாமணி அவதாரிகை
 • பகவத் கீதா ஸாரம்
 • குரு வாசகக் கோவை
 • ஸ்ரீ ரமண நூற்றிரட்டு
 • ஸ்ரீ ரமணோபதேச நூன்மாலை - விளக்கவுரை

ரமண மகரிசியைப் பின்பற்றியவர்கள்தொகு

 • விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகி ராம் சுரத் குமார்.

மேற்கோள்கள்தொகு

 1. Conscious Immortality, Conversations with Ramana Maharisi, Paul Brunton and Munagala Venkata ramaiah, page 53 -54

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
இரமண மகரிசி
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமண_மகரிசி&oldid=2902985" இருந்து மீள்விக்கப்பட்டது