ஸ்ரீ ரமண ஆசிரமம்

1922 முதல் 1950 இல் இறக்கும் வரை இந்திய ஆன்மீக குரு இரமண மகரிசியின் இல்லம்

ஸ்ரீ ரமண ஆசிரமம் (ஸ்ரீ ரமணாச்ரமம், Sri Ramana Ashram) என்பது ரமண மகரிஷியின் நினைவாக, அவர்களின் சீடர்களால் கட்டப்பட்ட ஓர் ஆசிரமமாகும். இது 1922 ஆம் ஆண்டில் இருந்து அத்வைத வேதாந்த நெறியை போதித்து வாழ்ந்த ரமண மகரிஷி மஹா நிர்வாணம் அடைந்த ஆண்டான, 1950 வரை இவரது வாசஸ்தலமாக இருந்தது. இது பெங்களூர் சாலையில், திருவண்ணாமலைக்கு மேற்கு பகுதியில், அருணாசல மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. அவரது சமாதி கோவில் புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது. ஆசிரமத்தைக் காண உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர்.[1]

ஸ்ரீ ரமண ஆசிரமத்தின் நுழைவாயில்

வரலாறு

தொகு
 
ஆசிரமத்தின் உட்பகுதி
 
ஸ்ரீ ரமணா மகரிஷி1927 முதல் 1950  வரை வாழ்ந்த சயன பழைய மண்டபம்

பலகாலம் திருவண்ணாமலையின் பல இடங்களில் தங்கிய ரமண மகரிஷி, இவரின் தாயார் அழகம்மாள் மே 19, 1922 இல் முக்தி அடைந்த பிறகு திருவண்ணாமலையின் அடிவாரத்தில் குடிபுகுந்தார். அங்கு அவரது சீடர்களால் சிறிய ஆசிரமம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதுவே ரமண ஆசிரமமாகும். இதன் பின்னர் மகரிஷி சமாதியடையும் வரை அந்த ஆசிரமத்தை விட்டு எங்கும் செல்லவில்லை.

ஆரம்பத்தில் பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளரான பால் பிராண்டன் வருகையின் போது  1931 ஆம் ஆண்டு, அவர் எழுதிய புத்தகம்  " A search in Secret India" மற்றும் "The Secret Path" (1934) மூலம் மேற்கு நாடுகளுக்கு ரமண மகரிஷி அறிமுகம் ஆனார். பின்னர் 1938 ஆம் ஆண்டு எழுத்தாளர் சோமர்செட் மௌகம் ரமண மகரிஷி ஆசிரம பார்வையின் போது, ரமணா மகரிஷியை புனித மனிதரின் மாதிரியாகவும் கருதினார்.

ஆர்தர் ஆஸ்போர்ன் என்ற எழுத்தாளர், இருபது ஆண்டுகள் ஆசிரமத்தில் தங்கியிருந்த போது, The Mountain Path என்னும் ஆங்கில இதழில் ஆசிரமத்தைப் பற்றியும், ரமண மகரிஷி மற்றும் அவரது போதனைகள் சார்ந்த பல புத்தகம் எழுதியுள்ளார். 1949இல் மௌனிசாது என்பவர் பல மாதங்கள் ஆசிரமத்தில் தங்கியிருந்தார். 1976இல் டேவிட் கோத்மன் என்ற இங்கிலாந்து எழுத்தாளர் ஆசிரமத்தில் தங்கியிருந்து ஸ்ரீ ரமண மகரிஷி தொடர்பான தலைப்புகளில் பதினான்கு புத்தகங்கள் எழுதியுள்ளார். அவர் தொடர்ந்து ஆசிரமத்திலேயே வாழ்ந்தார்.

1916 ஆம் ஆண்டு தனது தாயுடன் ஆசிரமத்திற்கு சென்ற ரமண மகரிஷியின் இளைய சகோதரரான நிரஞ்சனானந்த சுவாமி தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரமத்தில் தங்கினார். அவரது மகனும் பேரனும் ஆசிரமத்தை கவனித்து வந்தனர்.[2]

அமைவிடம்

தொகு

இது பெங்களூர் சாலையில், திருவண்ணாமலைக்கு மேற்கு பகுதியில், அருணாசல மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து சென்னை 197 கி. மீ தொலைவிலும், பெங்களூர் 199 கி. மீ தொலைவிலும், விழுப்புரம் 67 கி. மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

படங்கள்

தொகு

பார்க்கவும்

தொகு

குறிப்புகள்

தொகு

குறிப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
  • My life at Sri Ramanasramam, by Suri Nagamma. Pub. Sri Ramanasramam, 1975.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sri Ramana Ashram
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_ரமண_ஆசிரமம்&oldid=4118969" இலிருந்து மீள்விக்கப்பட்டது