ரமாபாய் பேஷ்வா

ரமாபாய் (Ramabai) (1750-1772), முதலாம் மாதவ்ராவ் பேஷ்வாவின் மனைவி ஆவார். சோலாபூரைச் சேர்ந்த இவரது தந்தையின் பெயர் சிவாஜி பல்லால் ஜோஷி ஆகும். [1]

ரமா
மாதவ்ராவ் பேஷ்வாவின் மனைவி ரமாபாயின் உடன்கட்டை ஏறல்
Rama
ரமாபாய் பேஷ்வாவின் மரண இடத்தை குறிக்கும் ஒரு நினைவுச்சின்னம்

ரமாபாய் முதலாம் மாதவராவ் என்பவரை 1758 டிசம்பர் 9 அன்று புனேயில் திருமணம் செய்து கொண்டார். 1766-67 இல் கர்நாடக பயணத்தின் போது அவர் மாதவராவ் I உடன் சென்றார். இவர் தனது மதத்தின் மீதான பற்றுக் கொண்டிருந்த பெண்ணாக இருந்ததால் சிறீவர்தன் மற்றும் ஹரிஹரேஷ்வர் போன்ற இடங்களுக்குப் புனித யாத்திரை செல்ல வேண்டும் என்ற விருப்பத்தினைக் கொண்டிருந்தார்.

மாதவராவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தபோது அவர் 1772 ஆம் ஆண்டில் ஹரிஹரேஸ்வர் சென்றார். மாதவராவுக்காக இவர் எப்போதும் உண்ணாநோன்பு இருந்து வந்தார். இத்தம்பதியருக்கு குழந்தைகள் இல்லை. [2] மாதவ்ராவ் பேஷ்வா அதிதீவிர காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவர் மிகவும் தீவிரமான ஆன்மீக மற்றும் மதப்பற்று கொண்டிருந்த பெண்ணாக இருந்தார். இவர் சமூக அல்லது அரசியல் விஷயங்களில் தலையிட்டதில்லை.[சான்று தேவை] சிந்தாமணி கோயிலானது, புனேயிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் புனே - சோலாபூர் சாலையில் அமைந்துள்ளது. 18 நவம்பர் 1772 அன்று, மாதவராவ் தேவுரில் உள்ள சிந்தாமணி கோவில் வளாகத்தில் மிகவும் இளம் வயதிலேயே (தோராயமாக 27 வயது) இறந்தார். ஆயிரக்கணக்கான குடிமக்கள் அந்த இடத்திற்கு வருகை தந்து தங்கள் அன்புக்குரிய தலைவர் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மாதவராவ் இறந்த பிறகு, ரமாபாய் சதி அல்லது உடன்கட்டை புக விரும்பினார். தன்னுடைய கணவர் இறந்த பிறகு அவரின் சிதையில் விழுந்து உயிர்விட்டால் சொர்க்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாக அந்நாளில் இந்தப் பழக்கம் இருந்து வந்துள்ளது. சதி அல்லது உடன்கட்டை ஏறுவதற்கு பெண்கள் நிர்பந்திக்கப்பட்டதாகவும் கூறுவர். ரமாபாயின் கதையில் மராட்டிய படைத்தளபதி சதாசிவ ராவ் ரமாபாயை அவ்வாறு செய்யாதிருக்கத் தடுத்துள்ளார். ஆனந்தி பாய், ரகோ பா மற்றும் நாராயண் ராவ் உள்ளிட்ட பேஷ்வா குடும்பத்தினர் இவரைத் தடுக்க முயன்றனர். ஆனால், ரமாபாய் இதற்கு உடன்படவில்லை. [3] சில ஆதாரங்கள் மாதவராவ் இறப்பதற்கு முன் சதி அல்லது உடன்கட்டை புக அவரிடம் அனுமதி கேட்டதாக நம்புகிறார்கள். [4] அதே தேதியில் அவரது இறுதி சடங்கில். கோவிலிலிருந்து அரை மைல் தொலைவில் உள்ள பீமா நதிக்கரையில் மாதவராவ் தகனம் செய்யப்பட்டார். இப்பெரிய தலைவர் மற்றும் அவரது அன்பான மனைவியின் நினைவாக கல்லால் செதுக்கப்பட்ட ஒரு சிறிய நினைவுச்சின்னம் இன்று இந்த இடத்தில் உள்ளது. இவர் ஒரு சிறந்த நபராகவும் மற்றும் அனைவரையும் கவனித்துக்கொண்டவராகவும் விளங்கியுள்ள போதும், இவருடைய மாமியார் கோபிகா பாய் பேஷ்வா இவரைச் சரியாக நடத்தவில்லை.

இலக்கியங்கள், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் தொகு

ரஞ்சித் தேசாய் எழுதிய சுவாமி என்ற நாவலில் ரமாபாய் பேஷ்வாவின் கதாபாத்திரம் விவரிக்கப்பட்டுள்ளது [5] 1987 ஆம் ஆண்டில் தொலைக்காட்சித் தொடரில், நடிகை மிருனாள் தேவ்-குல்கர்னி தொலைக்காட்சி அலைவரிசையான தூர்தர்ஷனில் சுவாமி என்ற தொலைக்காட்சித் தொடரில் ரமாபாய் வேடத்தில் நடித்தார் [6]1994 ஆம் ஆண்டில் இந்தி தொலைக்காட்சித் தொடரான தி கிரேட் மராத்தாவில், ரமாபாயின் கதாபாத்திரம் மதுரா தியோவால் சித்தரிக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ரமா மாதவ் திரைப்படத்தில், நடிகை பர்னா பெத்தே ரமாபாய் வேடத்தில் நடித்தார் [7]ஸ்ருஷ்டி பகரே 2019 மராத்தி தொலைக்காட்சித் தொடரான ஸ்வாமினியில் ரமாபாயாக நடித்தார். ரேவதி லேலே வயது வந்த ரமாபாயின் பாத்திரத்தை விவரிக்கிறார் [8]

மேற்கோள்கள் தொகு

  1. (in en). 
  2. (in en) Gazetteer of the Bombay Presidency: Poona. Printed at the Government Central Press. 1885-01-01. https://archive.org/details/bub_gb_ALYBAAAAYAAJ. 
  3. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. . 1996-03-21. 
  5. "It is in my genes". The Indian Express. 2014-06-20. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  6. "Making history with Mrinal Kulkarni | Sakal Times". www.sakaaltimes.com. Archived from the original on 2016-05-04. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  7. "Amey Wagh supports Rama Madhav actors - Times of India". The Times of India. Archived from the original on 2017-11-17. பார்க்கப்பட்ட நாள் 2016-05-07.
  8. "'Swamini' cast: From Revati Lele to Srushti Pagare; list of all actors & characters". Republic World. பார்க்கப்பட்ட நாள் 2021-01-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமாபாய்_பேஷ்வா&oldid=3797364" இலிருந்து மீள்விக்கப்பட்டது