ரமோன் மக்சேசே
ரமோன் டெல் பியேரோ மக்சேசே (Ramón del Fierro Magsaysay Sr., ஆகத்து 31, 1907 – மார்ச் 17, 1957) பிலிப்பீன்சு அரசியல்வாதி ஆவார். இவர் பிலிப்பீன்சின் ஏழாவது அரசுத்தலைவராக 1953 முதல் 1957 இல் இறக்கும் வரை பதவியில் இருந்தார். 1957 மார்ச் 17 இல் இவர் வானூர்தி விபத்தொன்றில் இறந்தார்.[3] தானுந்து இயந்தியக் கைவினைஞராகப் பணியாற்றிய மக்சேசே பசிபிக் போரில் கெரில்லாத் தலைவராக சிரப்பாகப் பணியாற்றியதை அடுத்து சம்பேலஸ் இராணுவ ஆளுநராக நியமிக்கப்பட்டார். பின்னர் இவர் லிபரல் கட்சியின் சம்பேலசு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசுத்தலைவர் எல்பீடியோ கிரீனோவின் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தேசியவாதக் கட்சியின் அரசுத்தலைவராக 1953 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]
ரமோன் பக்சேசே Ramón Magsaysay Sr. | |
---|---|
பிலிப்பீன்சின் 7-வது அரசுத்தலைவர் | |
பதவியில் திசம்பர் 30, 1953 – மார்ச் 17, 1957 | |
துணை அதிபர் | கார்லோசு கார்சியா |
முன்னையவர் | எல்பீடியோ கிரீனோ |
பின்னவர் | கார்லோசு கார்சியா |
தேசிய பாதுகாப்பு செயலாளர் | |
பதவியில் சனவரி 1, 1954 – மே 14, 1954 | |
குடியரசுத் தலைவர் | இவரே |
முன்னையவர் | ஆசுக்கார் காஸ்டெல்லோ |
பின்னவர் | சொட்டேரோ கபாகக் |
பதவியில் செப்டம்பர் 1, 1950 – பெப்ரவரி 28, 1953 | |
குடியரசுத் தலைவர் | எல்பீடியோ கிரீனோ |
முன்னையவர் | ருப்பெர்டோ காங்கிலியன் |
பின்னவர் | ஆசுக்கார் காசுடெல்லோ |
சம்பேலஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் மே 28, 1946 – செப்டம்பர் 1, 1950 | |
முன்னையவர் | வலெண்டின் அபாப்லி |
பின்னவர் | என்றிக் கோர்ப்பசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரமோன் டெல் பியெரோ மக்சேசே ஆகத்து 31, 1907 சம்பேலஸ் |
இறப்பு | மார்ச்சு 17, 1957 பாலம்பான், பிலிப்பீன்சு | (அகவை 49)
காரணம் of death | வானூர்தி விபத்து |
இளைப்பாறுமிடம் | மணிலா |
அரசியல் கட்சி | தேசியக் கட்சி (1953–1957) லிபரல் கட்சி[1][2] (1946–1953) |
துணைவர் | லசு மக்சேசே (1933-1957, இறப்பு) |
பிள்ளைகள் | டெரெசீட்டா, மிலாகுரொசு ரமோன் |
முன்னாள் கல்லூரி | ஒசே ரிசால் பல்கலைக்கழகம் |
தொழில் | பொறியாளர், இராணுவ வீரர் |
கையெழுத்து | |
Military service | |
பற்றிணைப்பு | பிலிப்பீன்சு |
கிளை/சேவை | பிலிப்பீன்சு இராணுவம் |
சேவை ஆண்டுகள் | 1942–1945 |
தரம் | கப்டன் |
அலகு | 31-வது காலாள் பிரிவு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Ramon Magsaysay." Microsoft Student 2009 [DVD]. Redmond, WA: Microsoft Corporation, 2008.
- ↑ Molina, Antonio. The Philippines: Through the centuries. Manila: University of Sto. Tomas Cooperative, 1961. Print.
- ↑ Associated Press (1957-03-18). "Magsaysay Dead With 24 In Plane; Garcia Successor (pay site)" (PDF). New York Times. பார்க்கப்பட்ட நாள் 2008-03-21.
- ↑ Gleeck, Jr., Lewis E. (1993). The Third Philippine Republic: 1946–1972. Quezon City: New Day Publishers. p. 190. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-10-0473-9.