ரம்பா காந்தி

இந்தியாவின் குசராத்தி மொழி எழுத்தாளர்

ரம்பா மன்மோகன் காந்தி (Rambha Manmohan Gandhi) இந்தியாவைச் சேர்ந்த குசராத்தி மொழி எழுத்தாளர் ஆவார். 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். நாடகங்கள், சிறுகதைகள், பாடல்கள் மற்றும் கட்டுரைகள் என தனது வாழ்க்கையில் 44 புத்தகங்களை எழுதி வெளியிட்டார்.

ரம்பா காந்தி
Rambha Gandhi
பிறப்பு(1911-04-27)27 ஏப்ரல் 1911
சார்வால்
இறப்பு29 மார்ச்சு 1986(1986-03-29) (அகவை 74)
தொழில்நாடக ஆசிரியர்ர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர்
மொழிGujarati
குடியுரிமைஇந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சன்சார்சாகாமே தீரெத்தி மற்றும் பாரதி அனே ஓட்
குறிப்பிடத்தக்க விருதுகள்பாகினி நிவேதிதா பரிசு

வாழ்க்கை தொகு

ரம்பா காந்தி 1911 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதியன்று தற்போது குசராத்து மாநிலத்தின் அகமதாபாத்து மாவட்டத்தில் உள்ள தந்துகா நகரத்திற்கு அருகில் இருக்கும் சார்வால் கிராமத்தில் பிறந்தார். 1937 ஆம் ஆண்டு கார்வே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் மனிதநேயத்தில் இளநிலை பட்டம் பெற்றார். [1] [2] 1926 ஆம் ஆண்டு ரம்பா மன்மோகன் காந்தியை திருமணம் செய்து கொண்டார்.[2] இவரது தொழில் வாழ்க்கையின் போது, 1949 ஆம் ஆண்டு முதல் 1953 ஆம் ஆண்டு வரை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உறுப்பினராகவும், 1950 ஆம் ஆண்டு முதல் 1954 ஆம் ஆண்டு வரை மும்பை நகராட்சி பள்ளிக் குழுவின் மன்ற உறுப்பினராகவும் இருந்தார். மேலும் பல சமூக அமைப்புகளுடன் இவர் தொடர்பு கொண்டவராக அவற்றின் செயல்பாடுகளில் ஈடுபட்டார். 1970 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை சமண சமுதாயத்தின் ஒரு பத்திரிகையின் ஆசிரியராக இர்ருந்தார். [1] [2] இவர் 1986 ஆம் ஆண்டு 29 ஆம் தேதியன்று இறந்தார். [1]

படைப்புகள் தொகு

ரம்பா காந்தி பல மொழிகள் அறிந்தவராக இருந்தார். குசராத்தி, இந்தி, ஆங்கிலம், பெங்காலி மற்றும் மராத்தி முதலியவை இவர் அறிந்த மொழிகளாகும் . [2] ஒரு சிறந்த நாடக ஆசிரியராகவும் ரம்பா காந்தி செயல்பட்டார். மும்பையில் உள்ள அகில இந்திய வானொலிக்கு 400 எண்ணிகைக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களை எழுதியும் அவற்றில் பங்கேற்றும் உள்ளார். [2] இவரது பிரயாசித்து மற்றும் மாந்தன் நாடகங்கள் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. [1] [2] ஆரத்தி மற்றும் இன்சாஃப் போன்ற இவரது பல ஓரங்க நாடகங்கள், சமகால நடுத்தர வர்க்க வாழ்க்கையை இலேசான நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் எடுத்துரைத்தன. [3]

1951 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ரம்பா காந்தி 44 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டார். [1] இவரது நாடகத் தொகுப்புகளில் கொய்னே ககேசோ நகி (1951), பிரனய்னா ரங்கு (1952), ரோச்னி ராமாயன் (1953), சக்மக் (1955), பரனு டூ தானே சா (1957), தேவ் தேவி பூசா (1958), பிரேக்சாகோ மாஃப் கரே (1961), பிரீத் நா கரியோ கோய் (1963), ராசனே காமி தே ராணி (1965), ஆந்தி (1977), சீவன் நாடகம் (1982) மற்றும் ராங் நம்பர் (1985) . [1] [2] ஆகியவை சிலவாகும்.

ரம்பா காந்தியின் வெளியிடப்பட்ட படைப்புகளில் பீபால் பான் கரந்தா (1966) மற்றும் மச்தார் (1973), மற்றும் தமிர்து தம்தாம்தா தர்லா (1966), பிரீத்னி நயாரி ரீட் (1978) மற்றும் செய்-பாராசெய் போன்ற சிறுகதைத் தொகுப்புகள். அடங்கும். (1983). மேலும் இவர் சான்சவனா சல் (1979) என்ற நாவலைத் தழுவியும் ஒரு படைப்பை உருவாக்கினார். [1] [2]

டீர் அனே துக்கா (1959) நையாண்டி கட்டுரைகளின் தொகுப்பு ஆகும். இதே போல சன்சார்சாகாமே தீரெத்தி (1969) என்ற நூல் கடிதங்களின் ஒரு தொகுப்பு ஆகும். ரம்பா காந்தி பல கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டார்: சபராசு (1969), நவ யுக்னி நவி கதை (1975), அரினே அசதா திதா (1978), மற்றும் தமனே கெட்டலா தயா? 60, 70, 80? (1985). [1] [2] போன்றவை கட்டுரைத் தொகுப்புகளில் சிலவாகும்.

நகைச்சுவை மற்றும் மேற்கோள்கள் அடங்கிய ஆனந்த் குலால் (1964) மற்றும் ஆனந்த் மங்கள் (1973) என்ற இரண்டு தொகுப்புகளையும் இவர் வெளியிட்டார். பிந்துமா சிந்து (1972) என்ற பழமொழிகளின் சேகரிப்பு நூல் ஒன்றையும் இவர் வெளியிட்டுள்ளார். ஒரு பாடல் தொகுப்பு, மரே கீத் மதுர காவா சே (1975) என்ற ஒரு பாடல் தொகுப்பு, சத்சேய் சத்விச்சார் (1977) போன்ற உந்துதல் ஓவியங்களும் இவரது படைப்புகளில் அடங்கும்.[1] [2] லக்னகீடோ மற்றும் லக்னகீதோனி குந்தனியை போன்ற பத்திரிகைகளுக்கு இவர் ஆசிரியராக இருந்தார்.[2]

சன்சார்சாகாமே தீரெத்தி மற்றும் பாரதி அனே ஓட் ஆகிய நூல்கள் பாகினி நிவேதிதா பரிசை வென்றன. [2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 (in gu). 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 . 
  3. Natarajan, Nalini (1996). Handbook of Twentieth-century Literatures of India. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-28778-7. https://archive.org/details/handbookoftwenti0000unse. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரம்பா_காந்தி&oldid=3849312" இலிருந்து மீள்விக்கப்பட்டது