ரவிசங்கர் ராவல்
ரவிசங்கர் ராவல் (Ravishankar Raval;1892-1977) இந்தியாவின் குசராத்தைச் சேர்ந்த ஒரு ஓவியரும், கலை ஆசிரியரும், கலை விமர்சகரும், பத்திரிகையாளரும், கட்டுரையாளரும் ஆவார் விசாமி சாதி என்ற பத்திரிகையில் 1921 இல் சேர்ந்த இவர் அது மூடப்படும் வரை பணியாற்றினார். பின்னர் குமார் என்ற கலாச்சார இதழை நிறுவினார்.
ரவிசங்கர் ராவல் | |
---|---|
பிறப்பு | பவநகர், பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா | 1 ஆகத்து 1892
இறப்பு | 9 திசம்பர் 1977 அகமதாபாது, குசராத்து | (அகவை 85)
தேசியம் | இந்திய மக்கள் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சர் ஜேஜே கலைப்பள்ளி |
பணி | ஓவியர், கலை விமர்சகர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர் |
வாழ்க்கைத் துணை | ராம்பென் (தி. 1909) |
பிள்ளைகள் | நரேன்ந்திரன், கஜேந்திரன், கனக் |
விருதுகள் |
|
வாழ்க்கை
தொகுரவிசங்கர் ராவல், ஆகஸ்ட் 1, 1892 அன்று பவநகரில் (இப்போது இந்தியாவில் குசராத்தில் உள்ளது ) ஒரு பிராமணக் குடும்பத்தில் [1] பிறந்தார். இவரது தந்தை மகாசங்கர் ராவல் பிரித்தானிய தகவல் பணியில் அதிகாரியாக இருந்தார். இவரது தந்தையின் பணி மாறுதல் காரணமாக இவர் தனது குழந்தைப் பருவத்தை பல நகரங்களில் கழித்தார். தனது கலை உள்ளுணர்வை தனது தாயிடமிருந்து பெற்றதாக எழுதியுள்ளார். 1909 இல் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார். கல்லூரியில், கல்லூரி நாடக விழாவிற்கான மேடை சீலைகளை வரையத் தொடங்கினார். இவரது கலைத் திறமையால் மகிழ்ச்சியடைந்த இவரது பேராசிரியை சஞ்சனா கலைப் பள்ளியில் சேருமாறு அறிவுறுத்தினார். இவரது தந்தையின் ஒப்புதல் பெறாமல், இவர் மும்பையிலுள்ள சர் ஜேஜே கலைப் பள்ளியில் சேர்ந்து அப்பள்ளியின் முதல்வர் செசில் பர்ன்ஸ் என்பாரின் கீழ் பயிற்சி பெற்றார்.[2]
இந்திய பாரம்பரிய ஓவிய மரபுகளால் ஈர்க்கப்பட்டு இவர் தனக்கென சொந்த பாணியை உருவாக்கினார். [3] ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களால் ஈர்க்கப்பட்டார். தாகூரின் முறைசாரா திறந்த அரங்கங்களாலும் ஈர்க்கப்பட்டார்.[4]
இறப்பு
தொகுஇவர் 9 டிசம்பர், 1977 அன்று அகமதாபாத்தில் உள்ள "சித்ரகூட்" என்ற தனது இல்லத்தில் இடத்தில் காலமானார்.
நூல் பட்டியல்
தொகு- Munshi's World Of Imagination: With 35 art plates in full colours. Bharatiya Vidya Bhavan. 1962.
குறிப்புகள்
தொகு- ↑ Desai, Nachiketa (2018-09-30). "Chhaganlal Jadhav, Dalit artist who sketched history of Gandhi's times". National Herald (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-15.
- ↑ Mitter, Partha. The triumph of modernism: India's artists and the avant-garde, 1922–1947.
- ↑ Mitter, Partha (2007). The triumph of modernism: India's artists and the avant-garde, 1922–1947. Reaktion Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781861893185.Mitter, Partha (2007). The triumph of modernism: India's artists and the avant-garde, 1922–1947. Reaktion Books. ISBN 9781861893185.
- ↑ Esther David. Ahmedabad: City with a Past. HarperCollins Publishers India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5029-798-8.
வெளி இணைப்புகள்
தொகு- ஆக்கங்கள் ரவிசங்கர் ராவல் இணைய ஆவணகத்தில்
- Art World of Ravishankar Raval பரணிடப்பட்டது 2007-10-01 at the வந்தவழி இயந்திரம்
- Kothari, Urvish (1 March 2004). "ગુજરાતને કળાના 'રવાડે' ચઢાવનાર કળાગુરૂ રવિશંકર રાવળ". Gujarati World (in குஜராத்தி). பார்க்கப்பட்ட நாள் 17 October 2016.
- Bibliography at WorldCat