ரவிதாசன் (கவிஞர்)


கவிஞர் ரவிதாசன் ஒரு தமிழ்க் கவிஞர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கடலூரில் திரு. முத்து, திருமதி. நீலாவதி இணையருக்குப் பிறந்த கடைசிப் பிள்ளையாவார். இவருக்கு இந்திராணி தேவராஜ் என்ற சகோதரியும், சந்திரன், கண்ணப்பன் என்ற இரண்டு சகோதரர்களும் உடன் பிறந்தவர்கள். கடந்த 25 ஆண்டுகளாய் இவர் கவிஞராய் பேச்சாளராய், நடிகராய், சமூகச் செயற்பாட்டாளராய் இயங்கி வருகிறார். இதுவரை இவர் 40 நூல்கள் எழுதியுள்ளார். அதில் ஒன்பது கவிதை நூல்கள்[சான்று தேவை]

ravidasan
ravidasan


சிறப்பு விருதுகள்

தொகு

இவர் இலக்கியப்பணிக்காக இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்[சான்று தேவை]. உவமைக்கவிஞர் சுரதா அவர்களால் வழங்கப்பட்ட "கவிதை முதல்வர்" விருது, முனைவர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் வழங்கப்பட்ட கவிவாணர் விருது, கவிஞர் மல்லை மணிவாசகம் அவர்களால் வழங்கப்பட்ட "வெண்பா வேந்தன்" விருது, மற்றும் பாரதிதாசன் விருது, கண்ணதாசன் விருது, சுரதா விருது போன்றவை சிறப்பு விருதுகளாகும்[சான்று தேவை].

படைப்புகள்

தொகு

புதுக்கவிதை நூல்கள்

தொகு

1) இரவைத் தேடும் நிலவுகள் & 1992 (அணிந்துரை வழங்கியவர்கள் பேராசிரியர் பெரியார்தாசன், கவிஞர் மு.மேத்தா கவிஞர் வைரமுத்து ஆகியோர்)

2) நிர்வாணப் பூக்கள் & 1995 (இந்-நூலுக்கு அணிந்துரை எழுதியவர்கள் & வார்த்தைச்சித்தர் வலம்புரி ஜான், கவிவேந்தர் மு.மேத்தா, கவிஞர் விசாலி கண்ணதாசன், நடிகர் சிலோன் விஜயேந்திரன்)

3) தமிழ்க்கடலின் ஓரத்தில்.... (இந்நூலுக்கு முன்னுரை எழுதியவர்கள் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், கவிப்பேரரசு வைரமுத்து.)

4) தீத்துண்டுகள் (முன்னுரை & பேச்சாளர் தஞ்சை கூத்தரசன், எழுத்தாளர் வே.எழிலரசு)

மரபுக்கவிதை நூல்கள்

தொகு

1) தீர்ப்பைத் திருத்திய தீர்ப்புகள் (முன்னுரை & உவமைக் கவிஞர் சுரதா, கவிப்பேரரசு அருமைநாதன், கடலார் வேலாயுதம்)

2) இது கவிதையல்ல... (முன்னுரை & திரு.தமிழருவி மணியன், எழுத்தாளர் வே.எழிலரசு)

3) இமயம் இடையளவு (முன்னுரை & எழுத்தாளர் வல்லிக்கண்ணன், கவிஞர் மு.நந்தா)

4) மாமேதை மகாகாவியம் பாகம் & 1, 2 (முன்னுரை & விடுதலை ஆசிரியர் திரு. கி.வீரமணி முன்னாள் மத்திய அமைச்சர் திரு. ஆ.ராசா, முன்னாள் மிசோரம் ஆளுநர் டாக்டர் பத்மநாபன் ஐ.ஏ.எஸ். கவிவேந்தர் மு.மேத்தா)

குறிப்பிடத்தக்க நூல்கள்

தொகு

1) மாமேதை மகாகாவியம் (அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வரலாற்றை கவிதை வடிவில் இயற்றிய ஒரு காவிய நூலாகும்.)

2) வெற்றி வெளியே இல்லை (மனங்களை முன்னேற்றுவதற்கான ஓர் உளவியல் நூல் இது.)

3) இளைஞர் வேதம் (மூடபழக்கத்தில் ஆழ்ந்துள்ள இளைஞர்களை சிந்திக்க வைப்பதற்கான ஒரு பயிற்சி நூல்)

4) ஏன் வேண்டும் இடஒதுக்கீடு (இடஒதுக்கீட்டால் சாதி காப்பாற்றப்படுகிறது என்ற தவறான கருத்தினை உடைத்தெறியும் ஓர் உன்னத நூல்)

5) காலத்தை வென்ற கலைஞர் (கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கையை எளிய முறையில் இளைஞர்களுக்கு எடுத்துக்கூறும் ஓர் அரிய நூல்)

6) ஒரு கிராமத்து ராஜா (முதன் முதலில் வெளிந்த இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு)

7) பண்டிதரும் பாரதியும்

சிறப்புகள்

தொகு

எட்டாம் வகுப்புப் படிக்கும் பொழுதே இவரால் எழுதப்பட்ட பத்துப் பக்கங்கள் கொண்ட கட்டுரை 'சமூக மறுமலர்ச்சி' என்ற மாத இதழில் வெளிவந்து பலரது பாராட்டுக்களைப் பெற்றது.[சான்று தேவை] 17.12.2000 அன்று நடந்த தமிழக அளவில் நடந்தக் கவிதைத் தேர்வில் உவமைக்கவிஞர் சுரதா கரங்களில் "கவிதை முதல்வர்" விருது பெற்றது.

சமூகப்பணி இவர் சமத்துவ இலக்கிய சங்கம் என்ற ஓர் அமைப்பை நிறுவி, அதன் தலைவராக, இலக்கியப் பணியோடு சமூகப் பணியும் செய்துக்கொண்டு வருகிறார். ஏழை எளிய சாலையோர சிறுவர்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார். சமுதாய நல்லிணக்கம் மற்றும் சமய நல்லிணக்கத்திற்காக பாடுபடும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் விழா எடுத்து, விருதுகள் வழங்கி வருகிறார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரவிதாசன்_(கவிஞர்)&oldid=4087844" இலிருந்து மீள்விக்கப்பட்டது