ரஹ்மத் ஷா

ஆப்கானித்தான் துடுப்பாட்டக்காரர்

ரஹ்மத் சா ( Rahmat Shah பஷ்தூ: رحمت شاه زرمتی ; பிறப்பு 6 ஜூலை 1993) ஒரு ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வீரர், இவர்வலது கை மட்டையாளர் மற்றும் பகுதிநேர பந்துவீச்சளர் ஆவார்.[1] 2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர். ஏப்ரல் 2019 இல், ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் (ஏசிபி) அஸ்ஹர் ஆப்கானுக்கு பதிலாக ஷாவை அணியின் புதிய தேர்வுத் துடுப்பாட்ட த் தலைவராக நியமித்தது.[2][3] இருப்பினும், 2019 துடுப்பாட்ட உலகக் கோப்பையைத் தொடர்ந்து, மூன்று வடிவங்களிலும் ஆப்கானிஸ்தான் துடுப்பாட்ட அணியின் புதிய தலைவராக ரஷீத் கான் தேர்வு செய்யப்பட்டார்.[4] செப்டம்பர் 2019 இல், ஆப்கானிஸ்தானுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான ஒருநாள் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நூறு ஓட்டங்களை அடித்ததன் மூலம் ஒருநாள் தேர்வுப் போட்டியில் நூறு ஓட்டங்கள் எடுத்த முதல் ஆப்கான் வீரர் எனும் சாதனை படைத்தார்.[5]

இவர் ஆப்கன் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்ட ம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட ம் மற்றும் பன்னாட்டு இருபது20 ஆகிய போட்டிகளில் விளையாடி வருகிறார், மேலும் இவர் பட்டியல் அ துடுப்பாட்ட ம், முதல் தரத் துடுப்பாட்ட ம் மற்றும் இருபது20 ஆகிய உள்ளூர்ப் போட்டிகளிலும் விளையாடி வருகிறார்.

துடுப்பாட்ட வாழ்க்கைதொகு

உள்ளூர் போட்டிகள்தொகு

பட்டியல் அதொகு

2013 ஆம் ஆண்டில் பைசலாபாத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ துடுப்பாட்ட ப் போட்டியில் இவர் அறிமுகமானர்.2019 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது.அந்தத் தொடரில் இவர் விளையாடினார். நவம்பர் 11, லக்னோ துடுப்பாட்ட மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான பட்டியல் அ போட்டியில் இவர் விளையாடினார். . அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் 17 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்து பால் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி 5 இலக்குகளில் வெற்றி பெற்றது.

சர்வதேச போட்டிகள்தொகு

2013 ஆம் ஆண்டில் நடைபெற்ற பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை உலகக் கோப்பைக்கான தொடரில் இவர் விளையாடினார். மார்ச் 6, சார்ஜா துடுப்பாட்ட மைதானத்தில் ஸ்காட்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் பந்துவீச்சில் 3 ஓவர்களை வீசி பத்து ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை. பின் மட்டையாட்டத்தில் 16 பந்துகளில் 3 ஓட்டங்க நவம்பர் 11, லக்னோ துடுப்பாட்ட மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இவர் விளையாடினார். . அந்தப் போட்டியில் இவர் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மட்டையாட்டத்தில் 17 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்து பால் பந்துவீச்சில் இவர் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணி 5 இலக்குகளில் வெற்றி பெற்றது.[6]

தேர்வுத் துடுப்பாட்டம்தொகு

2018 ஜூன் மாதம் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடிய பதினொரு துடுப்பாட்ட வீரர்களில் இவரும் ஒருவர்

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஹ்மத்_ஷா&oldid=2868061" இருந்து மீள்விக்கப்பட்டது