முதன்மை பட்டியைத் திறக்கவும்


ரஷீத் கான் அர்மான் Rashid Khan Arman (பஷ்தூ: راشد خان ارمان; born 20 செப்டம்பர்,1998), பொதுவாக ரஷீத் கான் என அறியப்படும் இவர் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக இவர் விளையாடி வருகிறார். இவர் ஆப்கானித்தான் அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.[1] பெப்ரவரி 2018 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் சிறந்த ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இவர் முதல் இடத்தில் இருந்தார். இதன்மூலம் மிக குறைந்த வயதில் முதலிடம் பிடித்தவர் எனும் சாதனையைப் படைத்தார்,[2] அடுத்த சில மாதங்களில் இவர் பன்னாட்டு இருபது20 போட்டியின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையிலும் இவர் முதல் இடம் பிடித்தார்.[3] ஜூலை 2017 ஆம் ஆண்டில் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்..[4][5]

ரஷீத் கான்
ஆப்கானித்தானின் கொடி ஆப்கானித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரஷீத் கான் அர்மன்
பட்டப்பெயர் ஆப்கானித்தானின் அஃப்ரிடி
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலதுகை புறத்திருப்பம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 36) 18 அக்டோபர், 2015: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி 25 மார்ச், 2018:  எ மேற்கிந்தியத் தீவுகள்
சட்டை இல. 19
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்பன்னாட்டு இருபது20முதல்தரத் துடுப்பாட்டம்முதல்தரத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 44 29 4 46
ஓட்டங்கள் 578 100 125 599
துடுப்பாட்ட சராசரி 21.40 16.66 41.66 21.39
100கள்/50கள் 0/2 0/0 0/1 0/2
அதிக ஓட்டங்கள் 60* ஆட்டமிழக்கவில்லை 33 52 60* ஆட்டமிழக்கவில்லை
பந்து வீச்சுகள் 2,181 660 1,179 2,288
இலக்குகள் 100 47 35 104
பந்துவீச்சு சராசரி 14.40 13.72 15.05 14.69
சுற்றில் 5 இலக்குகள் 4 1 4 4
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a n/a 1 n/a
சிறந்த பந்துவீச்சு 7/18 5/3 8/74 7/18
பிடிகள்/ஸ்டம்புகள் 14/– 8/– 0/– 15/–

25 மார்ச் ,2018, [[{{{year}}}]] தரவுப்படி மூலம்: CricketArchive

மார்ச், 2018 ஆம் ஆண்டில் 2018 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான தகுதிச் சுற்றுப்போட்டியில் ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்குத் தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது19 ஆண்டுகள் 165 நாள்கள் ஆகும்.இதன்மூலம் மிக குறைந்த வயதில் சர்வதேச போட்டிகளில் தலைவர் ஆனவர் எனும் சாதனையைப் படைத்தார்.[6] மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் இறுதிப் போட்டியில் ஷாய் கோபின் இலக்கினைக் கைப்பற்றினார். இது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியின் நூறாவது இலக்காக அமைந்தது.இவர் 44 போட்டிகளில் விளையாடி 100 இலக்குகளைப் பெற்றுள்ளார். இதன்மூலம் மிக குறைவான போட்டிகளிலேயே 100 இலக்குகளைக் கைப்பற்றியவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார்.[7] இதற்கு முன்னதாக ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் மிட்செல் ஸ்டார்க் 52 போட்டிகளில் 100 இலக்குகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. [7]2018 இந்தியன் பிரீமியர்லீக் தொடரில் இவர் சிறப்பாக விளையாடினார். ரஷீத் கான் சர்வதேச போட்டிகளில் ஆ வீரர்களில் ஒருவராகவும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சாளராகத் திகழ்கிறார் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.[8]

பொருளடக்கம்

உள்ளூர் போட்டிகள்தொகு

டிசம்பர் 7, 2016 இல் அபுதாபியில்(அமீரகம்) நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். அந்தப் போட்டியில் இவர் ஆட்டத்தின் முதல் பகுதியில் 48 ஓட்டங்கள் கொடுத்து 4இலக்குகளைக் கைப்பற்றினார். பின் இரண்டாவது பகுதியில் 74 ஓட்டங்கள் கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். மட்டையாளராக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்கள் மற்றும் 52 ஓட்டங்கள் எடுத்தார். [9]

இந்தியன் பிரீமியர் லீக்தொகு

2017தொகு

பின் பெப்ரவரி , 2017 ஆம் ஆண்டில் 2017 இந்தியன் பிரிமியர் லீக் தொடருக்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் 4 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது.[10][11] இதன்மூலம் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் முதல் ஆப்கானித்தான் வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.[12] 14 போட்டிகளில் விளையாடிய இவர் 358 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 17 இலக்குகளைக் கைப்பற்றினார். ஓவருக்கு சராசரியாக 6.62 ஓட்டங்களை மட்டுமே கொடுத்துள்ளார். இவரின் சிறந்த பந்துவீச்சு 3/19 ஆகும்.[13]

2018தொகு

2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஏலத்தின்போது இவரை ஏலத்தில் எடுப்பதில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது இரு அணிகளும் 8.60 கோடி ரூபாய் கேட்டன . பின் கிங்சுலெவன் அணி 9 கோடி ரூபாய் கேட்டு ஏலத்தில் வென்றது. ஆனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பினைப் பயன்படுத்தி இவரை அந்த அணி நிர்வாகம் 9 கோடி ரூபாய் மதிப்பில் இவரை ஏலத்தில் தக்கவைத்தது. [14]

மே 19 அன்றுவரை 13 போட்டிகளில் விளையாடிய இவர் 373 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 16 இலக்குகளைக் கைப்பற்றினார். ஓவருக்கு சராசரியாக 7.17 ஓட்டங்களை மட்டுமே கொடுத்துள்ளார். இவரின் சிறந்த பந்துவீச்சு 3/19 ஆகும். இவரின் பந்துவீச்சு சராசரி 23.31 ஆகும்.[15]

சர்வதேச போட்டிகள்தொகு

சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 18,2015 இல் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். [16] பன்னாட்டு இருபது20 போட்டியில் அக்டோபர் 26 இல் இதே அணிக்கு எதிராக அறிமுகமானார்.[17]

சான்றுகள்தொகு

  1. "Rashid Khan". ESPN Cricinfo. பார்த்த நாள் 18 October 2015.
  2. "Rashid Khan: The youngest No.1 in men’s cricket". International Cricket Council. பார்த்த நாள் 20 February 2018.
  3. "Rashid, Munro and Maxwell take top spots in T20I rankings". International Cricket Council. பார்த்த நாள் 25 February 2018.
  4. "Rashid Khan: Afghanistan spinner takes 7–18 against West Indies". BBS Sports. பார்த்த நாள் 9 June 2017.
  5. "Afghan sensation Rashid Khan continues surge after record haul vs West Indies". Hindustan Times. பார்த்த நாள் 9 June 2017.
  6. "Why we can't get enough of Rashid Khan". International Cricket Council. பார்த்த நாள் 4 March 2018.
  7. 7.0 7.1 "Rashid Khan, 19-year-old Afghanistan leg-spinner, becomes fastest to reach 100 ODI wickets". India Today. பார்த்த நாள் 25 March 2018.
  8. "என்னை திகைக்க வைத்த தெண்டுல்கரின் அந்த ட்வீட்! - மனம் திறக்கும் ரஷீத்கான்" (in en), nakkheeran, https://nakkheeran.in/360-news/sports/i-was-stunned-by-seeing-sachins-tweet-about-me-says-rashid-khan, பார்த்த நாள்: 2018-06-01 
  9. "Afghanistan tour of United Arab Emirates, Afghanistan v England Lions at Abu Dhabi, Dec 7–10, 2016". ESPN Cricinfo. பார்த்த நாள் 8 December 2016.
  10. "List of players sold and unsold at IPL auction 2017". ESPN Cricinfo. பார்த்த நாள் 20 February 2017.
  11. "Really surprised, really happy – Rashid". ESPN Cricinfo. பார்த்த நாள் 20 February 2017.
  12. "IPL Auction: Afghanistan Cricketers Rashid Khan, Mohammed Nabi Hit Jackpot". News18. 20 February 2017. http://www.news18.com/cricketnext/news/ipl-auction-afghanistan-cricketers-rashid-khan-mohammed-nabi-hit-jackpot-1351272.html. 
  13. (in en) IPLT20.com - Indian Premier League Official Website, https://www.iplt20.com/teams/sunrisers-hyderabad/squad/2885/rashid-khan, பார்த்த நாள்: 2018-05-19 
  14. (in en) IPL Auction 2018 - Rashid Khan | Cricbuzz.com, http://www.cricbuzz.com/cricket-series/ipl-2018/auction/players/10738, பார்த்த நாள்: 2018-05-19 
  15. (in en) IPLT20.com - Indian Premier League Official Website, https://www.iplt20.com/teams/sunrisers-hyderabad/squad/2885/rashid-khan, பார்த்த நாள்: 2018-05-19 
  16. "Afghanistan tour of Zimbabwe, 2nd ODI: Zimbabwe v Afghanistan at Bulawayo, Oct 18, 2015". ESPN Cricinfo. பார்த்த நாள் 18 October 2015.
  17. "Afghanistan tour of Zimbabwe, 1st T20I: Zimbabwe v Afghanistan at Bulawayo, Oct 26, 2015". ESPN Cricinfo. பார்த்த நாள் 26 October 2015.

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஷீத்_கான்&oldid=2581400" இருந்து மீள்விக்கப்பட்டது