ராஜாராணி கோயில்
இராசாராணி கோயில் (Rajarani Temple) இந்திய மாநிலமான ஒடிசாவின் தலைநகரான புவனேசுரத்தில் உள்ளது. இக்கோயில் கலிங்கர்களால் கிபி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இக்கோயில் கருவறையில் எந்த மூலவர் சிலையும் இல்லை.
இராசாராணி கோயில் | |
---|---|
![]() | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | ஒடிசா |
அமைவு: | புவனேசுவரம் |
ஆள்கூறுகள்: | 20°14′36.4″N 85°50′36.68″E / 20.243444°N 85.8435222°E |
கோயில் தகவல்கள் | |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | கலிங்கக் கட்டிடக்கலை |
உள்ளூர் மக்கள் இக்கோயிலை அன்புக் கோயில் என்பர். ஏனெனில் இக்கோயிலில் மனதைக் கவரும் அழகிய ஆண்-பெண் இரட்டையர்களின் சிற்பங்கள் அதிகம் உள்ளது. கோயில் கோபுரங்களில் உயரமான மற்றும் மெல்லிய கலைநுணுக்கம் மிக்க சிற்பங்களால் இக்கோயில் புகழ் பெற்றதாகும்.[1]
இக்கோயில் பஞ்சயாதனக் கட்டிடக்கலை வடிவில், ஒரு மேடையில் கருவறை மற்றும் முகப்பு மண்டபம் என இரண்டு கட்டிடங்கள் கொண்டுள்ளது. கோயில் கருவறையின் கோபுரம் 18 மீட்டர் உயரம் கொண்டது. கோயில் முன் உள்ள முகப்பு மண்டபம் பிரமிடு வடிவத்தில் உள்ளது.
இக்கோயில் இளம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற மணற்கற்களால் கட்டப்பட்டதால், இக்கோயிலை மக்கள் இராசாராணி கோயில் என்று பெயரிட்டனர். இக்கோயில் கருவறையில் கடவுளர் உருவச்சிலைகள் இல்லை. இக்கோயில் ஒடிசாவில் உள்ள இலிங்கராசர் கோயில் அமைப்பில் உள்ளது.
இந்தியாவின் பாதுக்காக்கப்பட்ட நினைவுச் சின்னங்களில் ஒன்றான இக்கோயிலை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.[2][3]
படக்காட்சிகள்தொகு
கருவறையின் வாயிலில் நாகர் சிற்பங்கள்
அடிக்குறிப்புகள்தொகு
- ↑ "Rajarani Temple". 2017-11-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-11-03 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Rajarani Temple, Bhubaneswar". Archaeological Survey of India. 2013-03-17 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Smith 1994, p. 123
மேற்கோள்கள்தொகு
- Ghosh, D.P.; Bose, Nirmal Kumar; Sharma, Y.D. (PDF). Designs from Orissan Temples. Calcutta and London: Thacker's Press and Directories, Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7387-075-6. http://asi.nic.in/asi_books/14834.pdf.
- Smith, Walter (1994). The Mukteśvara Temple in Bhubaneswar. Delhi: Motilal Banarsidass Publishers Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0793-6. https://books.google.com/books?id=y0MQmNx8g2gC&pg=PA123&dq=rajarani+temple&hl=en&sa=X&ei=fvpQUYK0FISk8gTAtICwDg&ved=0CEAQ6AEwAw#v=onepage&q=rajarani%20temple&f=false.