பஞ்சயாதனம்
ஒரு இந்துக் கோயிலின் மூலவரின் கருவறையைச் சுற்றி அமைந்த நான்கு துணை சன்னதிகளின் தொகுப்பிற்கு பஞ்சயாதனம் என்பர்.[1] பஞ்ச+ஆதானம் = பஞ்சயாதனம் எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு ஐந்தின் தொகுப்புகள் என்பர்.

பொதுவாக ஒரு இந்துக் கோயிலின் மூலவரின் கருவறை மேற்கு- கிழக்கு அச்சில் அமைக்கப்படும். எனவே கருவறையைச் சுற்றியுள்ள பிற நான்கு துணைக் கோயில்கள் வடக்கு-கிழக்கு, தெற்கு-கிழக்கு, வடக்கு-கிழக்கு அச்சுகளில் அமைக்கப்பட்டிருக்கும்.
ஒரு பஞ்சயாதனக் கோயிலின் நான்கு மூலையிலும் நான்கு துணைக் கோவில்களையும் அவற்றின் அடித்தளமாக இருக்கும் மேடையின் நடுவில் முக்கிய கோயிலும் கொண்டிருக்கும்.
கோயில் விமானத்திற்கும், மகா மண்டபத்திற்கும் இடையே அந்தராளம் எனப்படும் முற்ற வெளி அமைத்துக் கட்டப்பட்டிருக்கும்.
பஞ்சயாதனக் கோயில்கள் தொகு
பஞ்சயாதன முறைப் படி கட்டப்பட்ட கோயில்களில் சில:
- லிங்கராஜர் கோயில், புவனேஸ்வர்
- தசாவதாரக் கோயில், தியோகர், உத்தரப் பிரதேசம்
- கந்தாரிய மகாதேவர் கோயில், கஜுராஹோ, மத்தியப் பிரதேசம்
- இலக்குமணன் கோயில், கஜுராஹோ, மத்தியப் பிரதேசம்
- பிரம்மேஸ்வரர் கோயில், புவனேஸ்வர்
- அரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், இக்கோயிலின் மூலவரான சூரியனின் சன்னதியைச் சுற்றி நான்கு புறங்களிலும் விநாயகர், சிவன், பார்வதி மற்றும் விஷ்ணு சன்னதிகள் உள்ளது. [2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Khajuraho, India | World Heritage Site". The-world-heritage-sites.com. 1986-11-28. http://www.the-world-heritage-sites.com/khajuraho.htm. பார்த்த நாள்: 2012-10-11.
- ↑ "Suryanarayana Temple at Arasavalli". Templenet.com. http://templenet.com/Andhra/arasavalli.html. பார்த்த நாள்: 2012-10-11.