ராஜாவின் இருக்கை

ராஜாவின் இருக்கை (Raja's Seat) என்பது கூர்க் மாவட்டத்தின் மடிகேரியில் உள்ள ஒரு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். இது கர்நாடக தலைநகர் பெங்களூரில் இருந்து 270 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

ராஜாவின் இருக்கை, மடிகேரியின் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாகும்
ராஜாவின் இருக்கையின் பார்வைப் புள்ளி

காந்தி மண்டபம் எனப்படும் தோட்டத்தின் நடுவில் ராஜாவின் இருக்கை என்று சொல்லப்படும் இந்த பகுதி அமைந்துள்ளது. இது செங்கல் மற்றும் சாந்துகளால் ஆன ஒரு அமைப்பு ஆகும். மேலும், இது, வளைவுகளால் பாலம் கொண்ட நான்கு தூண்களைக் கொண்டுள்ளது. இந்த இடம் கிபி 1600 முதல் 1834 வரை 200 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடகத்தை ஆட்சி செய்த குடகு மன்னர்கள் மற்றும் ராணிகளால் பயன்படுத்தப்பட்டது.[1] இந்த தோட்டம் இதன் இயற்கைக்காட்சிகளுக்கு பெயர் பெற்றது, மேலும் இது ராஜாக்களுக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு இடமாக இருந்தது, எனவே அவர்களுடன் நிரந்தரமாக இணைந்திருந்தது. இது மேற்குப்பகுதியில் உள்ள பாறைகள் மற்றும் பள்ளத்தாக்குகளை காண்பதற்காக உயரமான நிலத்தில் கட்டப்பட்டுள்ளது.

1948 ஆம் ஆண்டு காந்திஜி படுகொலை செய்யப்பட்ட தினமான சர்வோதய திவாஸ் (தியாகிகள் தினம் என்றும் குறிப்பிடப்படுகிறது) கூர்க்கில் ஆண்டுதோறும் ஜனவரி 30 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், ஒரு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டு, மகாத்மா காந்தியின் அஸ்தி அடங்கிய கலசம் ராஜா இருக்கைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ஊர்வலத்தைத் தொடர்ந்து பகவத் கீதை, குரான் மற்றும் விவிலிய வசனங்களை சொல்லிக்கொண்டே மக்கள் பின்தொடர்கின்றனர். அன்றைய தினத்தில் பஜனைகள் பாடப்பட்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு, சில நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்படுகிறது.[2]

சான்றுகள்

தொகு
  1. "Raja's Seat, Madikeri (Coorg) | 2021 Images, Best Time To Visit". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
  2. "Raja's Seat, Madikeri (Coorg) | 2021 Images, Best Time To Visit". www.holidify.com. பார்க்கப்பட்ட நாள் 2022-12-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜாவின்_இருக்கை&oldid=3929506" இலிருந்து மீள்விக்கப்பட்டது