ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்கா


ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்கா, புனேவில் உள்ள காத்ரஜ் என்னும் பகுதியில் அமைந்துள்ளது. இதனை புனே மாநகராட்சி நிர்வாகத்தினர் பராமரித்து வருகின்றனர். சுமார் 130 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பூங்காவானது, விலங்குகள் காப்பகம், பாம்பு பூங்கா, விலங்கியில் பூங்கா மற்றும் 42 ஏக்கர் பரப்பளவில் உள்ள காத்ரஜ் ஏரி உள்ளிட்டவைகளை கொண்டுள்ளது.

ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்கா மற்றும் காட்டுயிர் ஆய்வுக்கூடம்
ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்கா
Map
18°27′10″N 73°51′40″E / 18.4529061°N 73.8611752°E / 18.4529061; 73.8611752
திறக்கப்பட்ட தேதி14 மார்ச் 1999[1]
அமைவிடம்புனே, இந்தியா
நிலப்பரப்பளவு130 ஏக்கர்கள் (53 ha)[1]
விலங்குகளின் எண்ணிக்கை362[1]
உறுப்புத்துவங்கள்மத்திய விலங்கியல் ஆணையம் (இந்தியா)[2]
வலைத்தளம்www.punezoo.gov.in

வரலாறு

தொகு

1953-ம் ஆண்டு புனே மாநகராட்சியால் சுமார் 7-ஏக்கர் பரப்பளவில் பேஷ்வா பூங்காவாக ஆரம்பிக்கப்பட்டது. இதே இடத்தில் மாதவ்ராவ் பேஷ்வா 1870-ம் ஆண்டு காட்டு விலங்குக் காட்சிச் சாலை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பார்வதி மலை அடிவாரத்தில் பண்டைய கால கூண்டுகளில் அடைக்கப்பட்டு வைத்திருந்தனர்.[1]

1986-ம் ஆண்டு, திரு. நீலம் குமார் காயிரே (இப்பூங்காவின் முதல் இயக்குனர்) காத்ரஜ் பாம்பு பூங்கா அமைத்தார். பின்னர், இது ராஜீவ் காந்தி விலங்கியல் பூங்காவானது.[3]

1997-ம் ஆண்டு, மத்திய விலங்கியல் ஆணயத்தின் அறிவிப்பின்படி, காத்ரஜில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விலங்கியல் பூங்கா 1999-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் பாம்புகளும், மான்களும், குரங்குகளும் மட்டுமே இருந்தது. 2005-ம் ஆண்டு, பேஷ்வா பூங்காவில் இருந்த விலுங்குகள் அனைத்தும் இப்பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டது, அதன்பின்னர் பேஷ்வா பூங்கா மூடப்பட்டது. [1]

அக்டோபர் 2010 முதல் அடிபட்ட விலங்குகளுக்கான காப்பகமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.[4]

விலங்குகள்

தொகு

இவ்விலங்கியல் பூங்காவில் ஊர்வன, பாலூட்டிகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் உள்ளன. வெள்ளைப் புலி, பெங்காலியப் புலி உள்ளிட்ட புலி வகைகளும், சிறுத்தை, மான், மயில், குரங்கு, யானை போன்ற மிருகங்களும் உள்ளன. முதலைகள், பாம்பு வகைகள், நட்சத்திர ஆமைகள் போன்ற ஊர்வன விலங்குகளும் உள்ளன.

சுமார் 160 வகையான பாம்புகளும், ஒன்பது அடி நீளமுள்ள பெரிய ராஜநாகமும் உள்ளது. பிரெய்லி முறையில் பாம்புகள் பற்றிய குறிப்புகளும் இப்பூங்காவில் உள்ளது.

அமைவிடம்

தொகு

நகரத்தின் மத்தியில் இருந்து சற்று தூரத்தில், இப்பூங்கா அமைந்துள்ளது. புனே சத்தாரா நெடுஞ்சாலையில், பாரதி வித்யாபீட பல்கலைக்கழகத்தின் அருகாமையில் உள்ளது. இப்பூங்கா புனேவிலிருந்து 8 கி.மீ. தொலைவில், காத்ரஜ் பேருந்து நிருத்தமருகில் உள்ளது. சுவர்கேட்டிலிருந்து பேருந்து மற்று ஆட்டோ வசதி உள்ளது.

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "About ZOO". punezoo.gov.in. Pune Zoo. Archived from the original on 6 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 April 2012.
  2. "Search Establishment". cza.nic.in. CZA. பார்க்கப்பட்ட நாள் 5 July 2011.
  3. "Katraj Snake Park". punediary.com. PuneDiary. பார்க்கப்பட்ட நாள் 28 April 2012.
  4. "Animal Adoption Program". Sakaal Times. 18 April 2011. http://www.sakaaltimes.com/sakaaltimesbeta/20110418/4745724883144673101.htm. பார்த்த நாள்: 28 December 2011. 

வெளி இணைப்புகள்

தொகு